India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
50 ஆண்டுகளாக குறிப்பிட்ட நாள்களில் உண்ணாவிரதம் இருப்பதே தனது ஆரோக்கியத்திற்கு காரணம் என PM மோடி தெரிவித்துள்ளார். சதுர்மாஸ் காலமான ஜூனில் இருந்து தீபாவளிக்கு பின்பு வரை 4 மாதங்களில் தினமும் ஒருவேளையே உணவு உட்கொள்வாராம். நவராத்திரியில் 9 நாட்களுக்கு உணவின்றி சுடு தண்ணீர் மட்டுமே அருந்துவாராம். அதேபோல், சைத்ரிய நவராத்திரியில் 9 நாள்களும் பழங்கள் மட்டும் சாப்பிடுவதாகவும் மோடி குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் ஆன்லைன் விளையாட்டுகளால் இதுவரை 47 பேர் உயிரிழந்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஆன்லைன் விளையாட்டுக்களுக்கு நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு இன்று உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் பதிலளித்த தமிழக அரசு, இளைஞர்களின் நலன்களை கருத்தில் கொண்டே ஆதார் இணைப்பு மற்றும் நேரக்கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.
பாலியல் குற்றங்களைத் தடுக்க, பள்ளிப் பருவத்திலேயே பாலியல் கல்வியை கற்றுக் கொடுப்பதுதான் தீர்வு என்பது பலரது கருத்து. இந்த கருத்துக்கு செவிசாய்த்திருக்கிறது கர்நாடக அரசு. அம்மாநில பள்ளிகளில் 8 – 12 வரையிலான வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு மருத்துவர்கள் தலைமையில் கட்டாய பாலியல் கல்வி கற்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுபற்றி உங்கள் கருத்து என்ன?
ரயிலில் முன்பதிவு பெட்டிகளில் கீழ் இருக்கை பயணிகளுக்கு தனி உரிமைகள் அளிக்கப்பட்டு உள்ளன. இரவில் அந்த இருக்கையில், சம்பந்தப்பட்ட பயணியை தவிர வேறு யாரும் அமரக் கூடாது. அதேபோல், தேவையில்லாமல் தூங்கிக் கொண்டிருக்கும் கீழ் இருக்கை பயணியை எழுப்புவது, தொந்தரவு செய்வது குற்றமாகும். இதுகுறித்து சம்பந்தப்பட்ட பயணி புகார் அளித்தால், குற்றச்சாட்டுக்கு ஆளாகும் பயணி மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
3 போட்டிகளில் தாமதமாக பந்துவீசினால் அடுத்த போட்டியில் கேப்டன் விளையாட முடியாத விதி IPL-ல் இருந்தது. கடந்த தொடரில் மும்பை பந்துவீச்சாளர்கள் செய்த தவறுக்கு இந்த சீசனில், முதல் போட்டியை தவறவிடுகிறார் கேப்டன் ஹர்திக் பாண்டியா. தற்போது இந்த விதிக்கு தடை விதித்துள்ள பிசிசிஐ, அபராதம் மட்டும் விதிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது. இந்த விதியின் கீழ் தடை பெறும் கடைசி கேப்டன் ஹர்திக் பாண்டியாதான்.
ஆந்திராவில் மர்ம நபர்கள் கொட்டகைக்கு தீ வைத்ததில் 500 ஆடுகள் பலியாகின. வாரங்கலைச் சேர்ந்த துக்கிராலா லட்சுமண் தனது ஆடுகளை, கொட்டகையில் இரவு அடைத்திருந்தார். அங்கு வந்த மர்ம நபர்கள் கொட்டகைக்கு தீ வைத்தனர். இதில் கொட்டகையில் இருந்த 500 ஆடுகள் உடல்கருகி பலியாகின. என்ன தான் விலங்குகளாக இருந்தாலும், அவையும் உயிர்கள் தானே? தீவைத்த மனிதர்களை என்னவென்று சொல்வது?
மொழியின் பெயரால் திமுக நாட்டை துண்டாடி வருவதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றஞ்சாட்டியுள்ளார். மொழியை அடிப்படையாகக் கொண்டு நாடு முழுவதும் விஷத்தை பரப்பும் வேலையை திமுக தொடர்ந்து செய்து வருவதாகவும் அவர் விமர்சித்துள்ளார். அந்நிய மொழியை கற்க அளிக்கும் முக்கியத்துவத்தை, இந்திய மொழியை கற்பதற்கு தமிழக அரசு காட்ட மறுப்பதாகவும் அவர் சாடியுள்ளார்.
இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்களின் பட்டியலை IMD வெளியிட்டுள்ளது. அதில் கோவை, குமரி, நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும் எனக் கூறியுள்ளது. அதேபோல், தேனி, திண்டுக்கல், விருதுநகர், மதுரை மாவட்டங்களிலும் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் IMD குறிப்பிட்டுள்ளது. இந்தத் தகவலை பகிருங்கள்.
பாஜக, அதிமுக கூட்டணி அமையலாம் என பரவலாக பேச்சு அடிபடுகிறது. இதுகுறித்து இபிஎஸ்சிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், திமுகவை தவிர அதிமுகவுக்கு வேறு எந்தக் கட்சியும் எதிரி இல்லை. திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும். இதுவே அதிமுகவின் நிலைப்பாடு. தேர்தல் நெருங்குகையில் அதிமுக கூட்டணி அமைக்கும். திமுக வேண்டுமானால், அவர்களுடன் (பாஜக) கூட்டணி அமைக்கலாம் என்றார்.
90களில் தமிழ், தெலுங்கு படங்களில் நாயகியாக கொடிக்கட்டி பறந்தவர் வினிதா. இவர் பெரிய குடும்பம், கட்டபொம்மன், சின்ன ஜமீன், வியட்நாம் காலனி, மிஸ்டர் மெட்ராஸ் உள்பட 70 படங்களில் நடித்து தன் அழகாலும், திறமையாலும் ரசிகர்களை ஈர்த்தார். காலத்தின் கோலம், அவர் விபச்சார வழக்கில் சிக்கி கைதானார். பின் நிரபராதி என வெளியே வந்தாலும், 8 ஆண்டுகளுக்கு பின் ஒரே படத்துடன் அவரின் கரியர் முடிவுக்கு வந்தது சோகம் தான்.
Sorry, no posts matched your criteria.