News March 21, 2025

தமிழகத்தில் 3.60 லட்சம் ரேஷன் அட்டைகள் ரத்து

image

முறைகேடுகளை தவிர்த்து, ரேஷன் பொருள்கள் உரிய நபர்களை சென்றடைவதை உறுதி செய்ய மத்திய அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதில் முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டு, 2019-2023 வரையிலான 5 ஆண்டுகளில் நாடு முழுவதும் 2.18 கோடி ரேஷன் அட்டைகள் ரத்து செய்யப்பட்டு இருப்பதாக மத்திய அரசு கூறியுள்ளது. தமிழகத்தில் மட்டும் 3.60 லட்சம் ரேஷன் அட்டைகள் ரத்து செய்யப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

News March 21, 2025

துணையிடம் இருந்து விலகி இருக்கிறீர்களா?

image

மன அழுத்தம், பொருளாதார சூழல், நோய் பாதிப்பு என பல காரணங்களுக்காக தம்பதிகள் தங்களது தாம்பத்ய வாழ்க்கையை தவிர்ப்பதாகக் கூறப்படுகிறது. இது நல்லதல்ல என்று உளவியலாளர்கள் எச்சரிக்கின்றனர். துணையிடம் இருந்து விலகி இருப்பது அவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தும் எனவும், எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் துணையால் அடுத்த நாளே உற்சாகத்தை கொடுக்க முடியும் என்றும் உளவியலாளர்கள் கூறுகின்றனர்.

News March 21, 2025

ரோஹித்தின் கருத்துக்கு சிராஜ் பதிலடி

image

பழைய பந்தில் சிறப்பாக செயல்படவில்லை என்ற ரோஹித் ஷர்மாவின் கருத்துக்கு முகமது சிராஜ் பதிலளித்துள்ளார். கடந்த ஆண்டில் உலகின் சிறந்த 10 வேகப்பந்து வீச்சாளர்களில், பவர்பிளே முடிந்த பிறகு பழைய பந்தில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் தான் மட்டுமே என்றும், புதிய மற்றும் பழைய பந்து என இரண்டு கட்டங்களிலும் தன்னால் சிறப்பாக செயல்பட முடியும் என்றும் அவர் சூளுரைத்துள்ளார்.

News March 21, 2025

உருகும் பனிப்பாறைகள்.. எச்சரிக்கும் இமயமலை

image

உலகம் முழுவதும் காலநிலை மாற்றத்தின் காரணத்தால் வெப்பநிலை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதன் எதிரொலியாக இமயமலையில் பனிப்பாறைகள் வேகமாக உருகுவதால், ஏரிகளில் நீர்மட்டம் வேகமாக உயர்கிறது. இதனால் மிக விரையில் ஏரிகள் உடைய வாய்ப்புள்ளதாக ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. இமயமலை பகுதியில் உள்ள பனிப்பாறை ஏரிகளின் பரப்பளவு, 10% கடந்த 1990லிருந்து தற்போது வரை உயர்ந்துள்ளது.

News March 21, 2025

ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம்: ஜூன் 30 வரை அவகாசம்

image

ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் வருகிற ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரவுள்ளது. இந்தத் திட்டத்தில் சேரும் மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு குறைந்தபட்சம் மாதம் ரூ.10,000 ஓய்வூதியம் உறுதியாகும். அதேபோல் பென்ஷன் முதிர்வு தொகையும் மிகப்பெரிய தொகை வழங்கப்படும். தற்போது தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் இருக்கும் ஒருவர், இந்தத் திட்டத்தில் சேர முடியும். இதற்கு மத்திய அரசு ஜூன் 30 வரை அவகாசம் அளித்துள்ளது.

News March 21, 2025

இந்தியா அணுகுண்டு சோதனை?

image

உ.பி.யின் பைரேலி அருகே பூமிக்கடியில் இந்தியா அணுகுண்டு சோதனை நடத்தியதாக சமூக வலைதளங்களில் புகைப்படம், வீடியோவுடன் செய்தி பரவி வருகிறது. இதை FACT CHECK செய்து பார்த்தபோது, அது உண்மையில்லை எனவும், அமெரிக்க எரிசக்தி துறையால் 2007ம் ஆண்டில் வெளியிடப்பட்ட புகைப்படம் அது என்றும், இந்தியா 1974, 1998க்கு பிறகு அணுகுண்டு சோதனை நடத்தவில்லை என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

News March 21, 2025

குரு பயணம்: ராஜயோகம் அடிக்கப் போகும் 3 ராசிகள்

image

ஜோதிட சாஸ்திரப் படி, குரு பகவான் வரும் மே 14-ம் தேதி மிதுன ராசிக்கு பெயர்கிறார். இதனால் நன்மைகள் பெறும் எனக் கணிக்கப்படும் ராசிகள்: *கும்பம்: தொழில்ரீதியான வெற்றி, அதிர்ஷ்டத்தின் ஆதரவு *தனுசு: புதிதாக வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்பு, நல்ல செய்தி தேடி வரும், ஆன்மிகத்தில் ஆர்வம் *மேஷம்: மகிழ்ச்சியை அள்ளிக் கொடுக்கும், நிலம் தொடர்பான தொழிலில் முன்னேற்றம், வெளிநாட்டு நிதி ஆதாயங்கள் பெற வாய்ப்பு.

News March 21, 2025

வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு… வங்கி சேவை பாதிக்கப்படாது!

image

வங்கிகளில் வாரத்திற்கு 5 நாள்கள் பணி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 24, 25-ல் நாடு தழுவிய வேலை நிறுத்தத்தை வங்கி ஊழியர்கள் அறிவித்து இருந்தனர். நாளை, நாளை மறுநாள் வங்கிகள் விடுமுறை என்பதால் 4 நாள்கள் வங்கிச் சேவை பாதிக்கப்படும் சூழல் இருந்தது. இந்நிலையில், பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் வேலைநிறுத்தத்தை ஒத்திவைப்பதாக அகில இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் அறிவித்துள்ளது.

News March 21, 2025

76 வயதில் குழந்தை பெற்ற பெண்

image

ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவில் இந்த அதிசயம் நடந்துள்ளது. மெதின் ஹாகோஸ் என்ற பெண் தன் 76-வது வயதில் ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். இதிலென்ன அதிசயம் என்கிறீர்களா? அவர் இயற்கையாகவே கருத்தரித்ததாக தெரிவித்துள்ளார். இந்த செய்தி வைரலான நிலையில், இந்த வயதில் சோதனை குழாய் மூலம் தான் குழந்தை பெற முடியும். இயற்கையாக கருத்தரிப்பது சாத்தியமில்லை என பலரும் கமெண்ட் செய்கின்றனர்.

News March 21, 2025

ஒலிம்பிக் கமிட்டி தலைவரான முதல் பெண்..

image

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவராக ஜிம்பாப்வேயின் விளையாட்டு துறை அமைச்சர் கிர்ஸ்டி கோவெண்ட்ரி தேர்வு செய்யப்பட்டுள்ளார். முன்னாள் நீச்சல் வீராங்கனையான இவர், ஒலிம்பிக்கில் 2 பதக்கங்களை வென்றுள்ளார். இந்த பதவியில் அமரவுள்ள முதல் பெண் மற்றும் முதல் ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்தவர் என்ற பெருமையை அவர் பெறவுள்ளார். கிரீஸில் நடைபெற்ற ஒலிம்பிக் ஆணையக் கூட்டத்தில் இவர் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

error: Content is protected !!