India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பிரதீப் ரங்கநாதன் – அஷ்வத் மாரிமுத்து கூட்டணியில் உருவான டிராகன் படம் வசூலை வாரிக்குவித்தது. அடுத்ததாக அஷ்வத், சிலம்பரனை வைத்து ‘காட் ஆப் லப்’ படத்தை இயக்க உள்ளார். இதனிடையே அவர் அடுத்தடுத்து 3 படங்களை இயக்கவிருப்பதாக செய்திகள் பரவி வந்தன. ஆனால் இவ்வாறு வதந்திகளைப் பரப்பவேண்டாம் என இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
சாம்பியன் டிராபி வென்ற இந்திய அணிக்கு ரூ.58 கோடி பரிசுத் தொகையை பிசிசிஐ அறிவித்தது. அதன்படி, ஒவ்வொரு வீரருக்கும், தலைமைப் பயிற்சியாளர் கம்பீருக்கும் தலா ரூ.3 கோடி வழங்கப்பட உள்ளது. பிற பயிற்சியாளர்கள், ஊழியர்களுக்கு தலா ரூ.50 லட்சம் அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், பிசிசிஐ அதிகாரிகளுக்கு தலா ரூ.25 லட்சம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மார்ச் மாதம் முழுவதும் பத்திரப்பதிவு அலுவலகங்களுக்கு சனிக்கிழமை விடுமுறை கிடையாது, வழக்கம் பாேல செயல்படும் என்று அரசு அறிவித்திருந்தது. அதன்படி, கடந்த 3 வாரங்களும் பத்திரப்பதிவு அலுவலகங்கள் திறக்கப்பட்டு வழக்கம்போல செயல்பட்டன. அதன்படி, நாளையும் பத்திரப்பதிவு அலுவலகங்கள் திறந்திருக்கும். பத்திரப்பதிவும் வழக்கம் போல நடைபெறும். இந்தத் தகவலை மற்றவர்களுக்கும் பகிருங்கள்.
சுவிஸ் ஓபன் தொடரில் இந்தியாவின் த்ரிஷா ஜோலி – காயத்ரி கோபி சந்த்ஜோடி அரையிறுதிக்கு முன்னேறியது. மகளிர் இரட்டையர் பிரிவு காலிறுதி ஆட்டம் ஒன்றில் த்ரிஷா – காயத்ரி இணை, ஹாங்காங்கின் யூங் புய் லாம் – யூங் டிங் இணையை எதிர்கொண்டது. தொடக்கம் முதலே சிறப்பாக செயல்பட்ட இந்திய ஜோடி 21-18, 21-14 என்ற நேர் செட் கணக்கில் ஹாங்காங் வீராங்கனைகளை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.
கேன் மாமா என தமிழக கிரிக்கெட் ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுபவர் நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன். பக்காவான க்ளாஸ் பிளேயராக திகழும் அவரை IPL மெகா ஏலத்தில் எடுக்க எந்த அணியும் முன்வரவில்லை. IPL-ல் வில்லியம்சனை மிஸ் செய்யும் ரசிகர்களுக்காகவே அவர் புதிய அவதாரம் எடுக்க உள்ளார். போட்டி வர்ணனையாளராக களமிறங்குவதாக அவர் தெரிவித்துள்ளார்.
540 அடியில் தாஜ்மஹால் அளவிற்கு பெரியதாக இருக்கும் சிறுகோள் ஒன்று அசுர வேகத்தில் பூமியை நோக்கி வருவதாக நாசா எச்சரித்துள்ளது. 5 மில்லியன் கி.மீ. தொலைவுக்கு அப்பால் இருக்கும் அது, மணிக்கு 77,282 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருவதாகவும், மார்ச் 26 மாலை 5:04 மணியளவில் பூமியைக் கடந்து செல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், உடனடி பாதிப்பு எதுவும் இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது.
➤மேஷம் – தாமதம் ➤ரிஷபம் – லாபம் ➤மிதுனம் – அச்சம் ➤கடகம் – பகை ➤சிம்மம் – வரவு ➤கன்னி – பாராட்டு ➤துலாம் – நன்மை ➤விருச்சிகம் – செலவு ➤தனுசு – ஆதாயம் ➤மகரம் – சுகம் ➤கும்பம் – புகழ் ➤மீனம் – அன்பு.
இந்த செயல்பாடுகள் 10% வரை மின் விரயத்தை ஏற்படுத்தும்: *TV-யை ஆஃப் செய்து, Set-top box-ஐ அப்படியே விடுதல் *ரிமோட்டில் மட்டும் off செய்துவிட்டு, ஸ்விட்சை off செய்யாதது *AC remote-ஐ மட்டும் off செய்துவிட்டு, Stabilizer-ஐ அப்படியே விடுதல் *பயன்பாடு இல்லாமல் ஸ்விட்ச் போட்ட நிலையில், போன் சார்ஜர் இருத்தல். இப்படி ஒவ்வொரு வீட்டிலும் பயன்படுத்தாத மின்சாரத்திற்கு ஆண்டுக்கு ரூ.1000 வரை கூடுதலாக செலவாகிறது.
தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இரவு 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக IMD தெரிவித்துள்ளது. கோவை, திருப்பூர், தென்காசி, தேனி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மற்றும் மிதமான மழை பெய்யக்கூடும் எனக் கூறியுள்ளது. இதேபோல், நெல்லை, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் மாவட்டங்களிலும் இரவு 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் IMD கணித்துள்ளது.
2025 IPL தொடரில் RCB அணி 10வது இடத்தை மட்டுமே பிடிக்க முடியும் என AUS முன்னாள் வீரர் கில்கிறிஸ்ட் கூறியுள்ளார். விராட் கோலிக்கோ, RCB அணிக்கோ தான் எதிரானவன் இல்லை என்றும், தற்போதைய சூழ்நிலையில் RCB தோல்வி பாதையில் செல்வதற்கே அதிக வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார். ENG வீரர்களை அந்த அணி அதிகம் கொண்டுள்ளதால், இந்த தொடரில் கடைசி இடத்திற்கு செல்லும் வாய்ப்பு உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.