News March 22, 2025

எந்த நிதியில் மடிக்கணினி? அண்ணாமலை

image

எந்த நிதியில் மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்படும் என்பதை TN அரசு தெளிவுபடுத்த வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். நடப்பாண்டு மடிக்கணினி வழங்க ₹2,000 கோடி ஒதுக்கப்படும் என TN பட்ஜெட்டில் நிதியமைச்சர் அறிவித்தார். இதனை சுட்டிக்காட்டிய அவர், நடப்பாண்டு மடிக்கணினி வழங்க முடியாது எனக் கல்வியாளர்கள் தெரிவித்துள்ளதாகவும், எதற்காக இந்த வெற்று அறிவிப்பு எனவும் வினவியுள்ளார்.

News March 22, 2025

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (மார்ச் 22) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டுமே இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

News March 22, 2025

சேப்பாக்கத்தில் அனிருத் இசை நிகழ்ச்சி

image

சென்னை- மும்பை அணிகள் வரும் 23ஆம் தேதி சேப்பாக்கத்தில் மோதும் நிலையில், போட்டிக்கு முன்னதாக அனிருத் இசை நிகழ்ச்சி நடக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாலை 6.30 மணி முதல் 6.50 வரை சேப்பாக்கம் மைதானத்தில் இசை நிகழ்ச்சி நடைபெறும் என சிஎஸ்கே நிர்வாகம் அறிவித்துள்ளது. அனிருத் ரசிகர்களுக்கு இரட்டை விருந்தாக இந்த போட்டி இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

News March 22, 2025

வீட்டில் எலித் தொல்லையா? உடனே இத பண்ணுங்க…!

image

மான்ஸ்டர் படத்தில் வருவது போன்று எலிகளால் நாள்தோறும் தொல்லைகளை அனுபவித்து வருபவர்கள் ஏராளம். என்ன செய்தாலும் எலித் தொல்லைக்கு தீர்வு இல்லையே என புலம்புவர்களுக்குத்தான் இந்த டிப்ஸ். வீடு, கடைகளில் எலிகள் வரும் பாதையில் கருப்பு மிளகுப் பொடியை தூவி விடுங்கள். அப்புறம் பாருங்க அந்த Smell-க்கு எலி பக்கத்துலயே வராதாம். SHARE IT.

News March 22, 2025

மகப்பேறு விடுப்பு மறுப்பு: ஜட்ஜை கண்டித்த ஐகோர்ட்!

image

திருவாரூர் குடவாசல் கோர்ட்டில் உதவியாளராகப் பணியாற்றும் பெண் மறுமணம் செய்து தற்போது கர்ப்பமாக உள்ளார். அவருக்கு மகப்பேறு விடுப்பு வழங்க கோர்ட் மறுத்துள்ளது. அந்த பெண் சென்னை ஐகோர்ட்டை நாடினார். இந்த வழக்கில் விடுப்பு வழங்க மறுத்த நீதிபதிக்கு ஐகோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது. பெண் ஊழியர்களுக்கு மன உளைச்சல் ஏற்படுத்தியதற்காக ரூ. 1 லட்சமும், மகப்பேறு விடுப்பும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

News March 22, 2025

தோனியின் குட்டி ரசிகருக்கு ரோஹித் கொடுத்த பரிசு

image

IPL போட்டியில் மும்பையும் சென்னையும் பரம எதிரிகள். இருவரும் மோதிக்கொள்ளும் போட்டியை இந்தியா – பாகிஸ்தான் ஆட்டம் போல் ரசிகர்கள் அதகளப்படுத்துவர். நடப்பு IPL தொடர் நாளை தொடங்க உள்ள நிலையில், வரும் நாளை மறுநாள் சென்னையில் MI, CSK அணிகள் மோத உள்ளன. இந்நிலையில் சேப்பாக்கத்திற்கு பயிற்சிக்கு சென்ற ரோஹித் ஷர்மா, தோனியின் குட்டி ரசிகர் ஜெர்ஸியில் ஆட்டோகிராப் போட்டார். இந்த புகைப்படம் வைரலாகியுள்ளது.

News March 22, 2025

பரவும் வதந்திகள்.. கடுப்பான டிராகன் இயக்குநர்

image

பிரதீப் ரங்கநாதன் – அஷ்வத் மாரிமுத்து கூட்டணியில் உருவான டிராகன் படம் வசூலை வாரிக்குவித்தது. அடுத்ததாக அஷ்வத், சிலம்பரனை வைத்து ‘காட் ஆப் லப்’ படத்தை இயக்க உள்ளார். இதனிடையே அவர் அடுத்தடுத்து 3 படங்களை இயக்கவிருப்பதாக செய்திகள் பரவி வந்தன. ஆனால் இவ்வாறு வதந்திகளைப் பரப்பவேண்டாம் என இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

News March 22, 2025

ரூ.58 கோடி… பரிசுத் தொகையை பங்கு போடுவது எப்படி?

image

சாம்பியன் டிராபி வென்ற இந்திய அணிக்கு ரூ.58 கோடி பரிசுத் தொகையை பிசிசிஐ அறிவித்தது. அதன்படி, ஒவ்வொரு வீரருக்கும், தலைமைப் பயிற்சியாளர் கம்பீருக்கும் தலா ரூ.3 கோடி வழங்கப்பட உள்ளது. பிற பயிற்சியாளர்கள், ஊழியர்களுக்கு தலா ரூ.50 லட்சம் அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், பிசிசிஐ அதிகாரிகளுக்கு தலா ரூ.25 லட்சம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

News March 22, 2025

பத்திரப்பதிவு அலுவலகங்கள் நாளை திறந்திருக்கும்

image

மார்ச் மாதம் முழுவதும் பத்திரப்பதிவு அலுவலகங்களுக்கு சனிக்கிழமை விடுமுறை கிடையாது, வழக்கம் பாேல செயல்படும் என்று அரசு அறிவித்திருந்தது. அதன்படி, கடந்த 3 வாரங்களும் பத்திரப்பதிவு அலுவலகங்கள் திறக்கப்பட்டு வழக்கம்போல செயல்பட்டன. அதன்படி, நாளையும் பத்திரப்பதிவு அலுவலகங்கள் திறந்திருக்கும். பத்திரப்பதிவும் வழக்கம் போல நடைபெறும். இந்தத் தகவலை மற்றவர்களுக்கும் பகிருங்கள்.

News March 22, 2025

சுவிஸ் ஓபன்: அரையிறுதிக்குள் நுழைந்த இந்திய ஜோடி

image

சுவிஸ் ஓபன் தொடரில் இந்தியாவின் த்ரிஷா ஜோலி – காயத்ரி கோபி சந்த்ஜோடி அரையிறுதிக்கு முன்னேறியது. மகளிர் இரட்டையர் பிரிவு காலிறுதி ஆட்டம் ஒன்றில் த்ரிஷா – காயத்ரி இணை, ஹாங்காங்கின் யூங் புய் லாம் – யூங் டிங் இணையை எதிர்கொண்டது. தொடக்கம் முதலே சிறப்பாக செயல்பட்ட இந்திய ஜோடி 21-18, 21-14 என்ற நேர் செட் கணக்கில் ஹாங்காங் வீராங்கனைகளை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.

error: Content is protected !!