India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோவை மாவட்டத்தில், பொள்ளாச்சி 2வது பெரிய நகரமாக உள்ளது. கடந்த அதிமுக ஆட்சியின்போது, பொள்ளாச்சியை மாவட்டமாக உருவாக்குவதற்கான பூர்வாங்கப் பணிகள் தொடங்கப்பட்டு, அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால் இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்நிலையில், பொள்ளாச்சி மாவட்டமாக்க வலியுறுத்தி, அரசு ஊழியர்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்ற, பொதுமக்களும் சமூக வலைதளங்களில் ‘ஸ்டேட்டஸ்’ வைக்கின்றனர்.
நாடே எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் RCB-ம், KKR-ம் மோதும் முதல் போட்டி இரவு 7.30-க்கு தொடங்கும் நிலையில், அங்கு மழை வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கிறது. மேலும், கொல்கத்தாவில் மிக கனமழைக்கான அலர்ட்டையும் வானிலை மையம் விடுத்திருப்பதால், இன்று போட்டி நடைபெறுமா என ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.
சென்னையில் பெட்ரோல், டீசல் விலை இன்று (மார்ச் 22) உயர்ந்துள்ளது. நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் ₹100.80க்கு விற்பனையான நிலையில், இன்று 0.13 காசுகள் உயர்ந்து ₹100.93க்கு விற்பனையாகிறது. அதேபோல் டீசல் விலையும் ஒரு லிட்டருக்கு 0.13 காசுகள் உயர்ந்து ₹92.52க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வால், வாகன ஓட்டிகள் அதிருப்தியடைந்துள்ளனர். உங்கள் ஊரில் பெட்ரோல் விலை என்ன?
ஐஜிக்கள் மற்றும் டிஐஜிக்களுடன் டிஜிபி சங்கர் ஜிவால் நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது தமிழகம் முழுவதும் உள்ள ரவுடிகளின் பட்டியலை உடனடியாக தாக்கல் செய்யுமாறு சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். அதேபோல, ரவுடிகள் குறித்து உளவு போலீசார் தகவல் அளித்தும் நடவடிக்கை எடுக்காத இன்ஸ்பெக்டர்கள் மற்றும் எஸ்.ஐ.க்கள் மீது சஸ்பெண்ட் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் பாயும் எனவும் அவர் எச்சரித்தார்.
மும்மொழிக்கொள்கை தொடர்பான சர்ச்சை அதிகரித்து வரும் நிலையில், ஒவ்வொரு இந்திய மொழியும் நாட்டிற்கு ஒரு பொக்கிஷம் என அமித்ஷா கூறியுள்ளார். ராஜ்யசபாவில் பேசிய அவர், இந்தி எந்த மொழிக்கும் போட்டியில்லை என்றார். மேலும், வரும் டிசம்பர் மாதத்திற்குப் பிறகு அனைத்து முதல்வர்கள், எம்.பிக்கள், பொதுமக்களுடனான கடிதத் தொடர்புகளை அந்தந்த மாநில மொழிகளிலேயே மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் செயல்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. வழக்கமாக சனிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் நிலையில், விடுமுறை அட்டவணையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதனால், சென்னையிலுள்ள அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள், ஆதிதிராவிடர், தனியார் என அனைத்துப் பள்ளிகளும் (மார்ச் 22ஆம் தேதி வெள்ளிக்கிழமை அட்டவணை) அடிப்படையில் இயங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் பிறமொழிப் படங்களுக்கு தடை விதிக்க வேண்டும், மேகதாது அணை கட்ட விடாமல் தடுக்கும் தமிழக அரசுக்கு கண்டனம், சாம்பாஜி சிலையை அகற்ற வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று பந்த் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், கர்நாடகா – தமிழக எல்லையில் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. தமிழக எல்லையான ஓசூர் வழியாக பெங்களூருவுக்கு பஸ்கள் இயக்கப்படுவது நிறுத்தப்படலாம் என கூறப்படுகிறது.
வரும் 24, 25ஆம் தேதிகளில் நடைபெறவிருந்த வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. வாரத்தில் 5 நாட்கள் வேலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. நேற்று நடந்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டதை அடுத்து, வேலைநிறுத்தம் தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டது. இதனால், திங்கள்கிழமை வழக்கம்போல் வங்கிகள் செயல்படும்.
சட்டப்பேரவையில் அதிகப்பிரசங்கித்தனமாக நடந்துக் கொள்ளும் வேல்முருகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இதனையடுத்து, தன்னை கசந்து கொண்டே திமுக கூட்டணியில் வைத்துக் கொள்ள வேண்டாம் என்று வேல்முருகன் பேசியிருந்தார். இந்நிலையில், திமுக கூட்டணியில் இருந்து விலகுவது குறித்து அவரே முடிவு செய்யலாம் என வெளிப்படையாக சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
அரசு போக்குவரத்து கழக மாநகர பஸ்களில் மாற்றுத் திறனாளிகள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், தமிழறிஞர்கள், வயதான தமிழறிஞர்களுக்கு இலவசமாக பயணம் மேற்கொள்ள அரசு பாஸ் அளித்துள்ளது. இந்த பாஸின் செல்லுபடியாகும் காலம் வருகிற 31ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில், இலவச பஸ் பாஸ் செல்லுபடியாகும் அவகாசத்தை மேலும் 3 மாதங்களுக்கு, அதாவது ஜூன் 30ஆம் தேதி வரை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.