India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
IPL திருவிழா இம்முறை சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, தொடக்கப் போட்டி நடக்கும் ஒவ்வொரு மைதானத்திலும் கண்கவர் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. அந்த வகையில், நாளை CSK – MI மோதும் EL CLASSICO போட்டியை காண வரும் ரசிகர்களுக்காக சேப்பாக்கத்தில் அனிருத்தின் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தல ஹெலிகாப்டர் ஷாட்டையும் காண வாய்ப்பு கிடைக்கலாம் என்பதால், ரசிகர்களுக்கு டபுள் விருந்துதான்!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து 2ஆவது நாளாக சவரனுக்கு ₹320 குறைந்துள்ளது. இன்று (மார்ச் 22) காலை நேர வர்த்தகப்படி 22 கேரட் தங்கம் கிராமுக்கு ₹40 குறைந்துள்ளது. இதனால் ஒரு கிராம் ₹8,230க்கும், சவரன் ₹65,840க்கும் விற்பனையாகிறது. அதேபோல் வெள்ளி விலையும் கிராமுக்கு ₹2 குறைந்து ஒரு கிராம் ₹110க்கும், பார் வெள்ளி ஒரு கிலோ ₹1,10,000க்கும் விற்பனையாகிறது.
கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்ததை கணவர் பார்த்துவிட்டதால், கணவனை மனைவியே கழுத்தை நெரித்துக் கொன்ற கொடூரம் அரங்கேறியுள்ளது. தஞ்சை காசாங்காட்டை சேர்ந்த பிரகாஷ் (40) கடந்த 13ம் தேதி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்ட நிலையில், அவரது உடலை உறவினர்கள் எரித்துவிட்டனர். ஆனால், பிரகாஷை மனைவி நாகலட்சுமியும், அவரது கள்ளக்காதலன் வீரக்குமாரும் சேர்ந்து கொன்று தூக்கில் தொங்கவிட்டது தெரியவந்துள்ளது.
அரசுமுறை பயணமாக வரும் 5ஆம் தேதி PM மோடி இலங்கை செல்லவுள்ளார். அப்போது, திரிகோணமலையில் சூரிய மின் உற்பத்தி நிலையம் அமைப்பது தொடர்பாக இருநாடுகளிடையே ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாகக் கூறப்படுகிறது. அதேவேளையில், எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி, இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களைத் தொடர்ந்து கைது வரும் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என மீனவ அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
ஐபிஎல் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்ச்சிக்கு வித்திட்ட விக்கெட் கீப்பர்கள் பட்டியல் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் சென்னை அணியின் தல தோனி தான் முதலிடம் பிடித்திருக்கிறார். 264 போட்டிகளில் கீப்பராக செயல்பட்டு 42 ‘ஸ்டெம்பிங்’, 148 ‘கேட்ச்’ பிடித்து 190 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். வயசானாலும் கீப்பிங்கில் கலக்கி வரும் தல தோனிக்கு விசில் போடுங்க!
ஐஸ்லாந்தில் குழந்தைகள் நலத்துறை அமைச்சராக இருந்த ஆஸ்தில்டர் லோவா (58) செய்தியாளர்கள் சந்திப்பில் சிறுவயது அனுபவங்களை மனம் திறந்து பேசி, சிக்கலில் மாட்டிக் கொண்டார். 22 வயதில் 15 வயது மாணவர் ஒருவருடன் உறவு வைத்துக் கொண்டு குழந்தை பெற்றதாக பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து, அவருக்கு எதிராக கண்டன குரல்கள் எழுந்தன. இதனால், தனது அமைச்சர் பதவியை அவர் ராஜினாமா செய்திருக்கிறார்.
பல்வேறு மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். சூடான வறட்சியான சிவந்த சருமம், குமட்டல்& வாந்தி, தலைவலி, சோர்வு, கால் பிடிப்பு, மூச்சுத்திணறல், நெஞ்சு படபடப்பு, தலைசுற்றல், மயக்கம், பதற்றம் போன்றவை வெப்பம் சார்ந்த உடல் பாதிப்புகளுக்கான அறிகுறிகள். இதிலிருந்து தப்பிக்க, அதிகளவில் தண்ணீர், மோர் போன்றவற்றை குடிக்க வேண்டும், குளிர்ந்த நீரில் குளிக்கவும்.
நீரின்றி அமையாது உலகு. உயிர்கள் தோன்ற நீர் அவசியம். பரிணாம வளர்ச்சிகளும் நீரில் இருந்தே தோன்றியதாக கூறுகிறது அறிவியல். இன்று உலக தண்ணீர் தினம் கடைபிடிக்கும் வேளையில் நீரைப் போற்றுவோம். கோடைக்காலத்தில் மட்டுமல்ல; மழைக்காலத்திலும் நீரை சேமிக்கும் பழக்கத்தை இளம் தலைமுறையினருக்கு கடத்துவோம். நீர்நிலைகள் மாசடையாமல் பாதுகாக்க கற்றுத் தருவோம்! மண் வளத்தையும்; மனித வாழ்வையும் பாதுகாப்போம்!
மாநிலங்களுக்கு இடையே ஒருமித்த கருத்து உருவானால் மட்டுமே, நதிநீர் இணைப்பு சாத்தியமாகும் என மத்திய அமைச்சர் பாட்டீல் தெரிவித்துள்ளார். லோக்சபாவில் பேசிய அவர், நதிநீர் இணைப்பு தொடர்பாக மாநிலங்களுக்கு இடையே ஒருமித்த கருத்தை ஏற்படுத்த, மத்திய அரசு முயன்று வருவதாக கூறினார். இணைப்புக்காக 30 நதிகள் அடையாளம் காணப்பட்டு, 11 நதிகளுக்கான திட்ட அறிக்கைகளும் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் விளக்கமளித்தார்.
கோவை மாவட்டத்தில், பொள்ளாச்சி 2வது பெரிய நகரமாக உள்ளது. கடந்த அதிமுக ஆட்சியின்போது, பொள்ளாச்சியை மாவட்டமாக உருவாக்குவதற்கான பூர்வாங்கப் பணிகள் தொடங்கப்பட்டு, அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால் இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்நிலையில், பொள்ளாச்சி மாவட்டமாக்க வலியுறுத்தி, அரசு ஊழியர்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்ற, பொதுமக்களும் சமூக வலைதளங்களில் ‘ஸ்டேட்டஸ்’ வைக்கின்றனர்.
Sorry, no posts matched your criteria.