News March 22, 2025

அரசியல் வலிமை குறைந்துவிடும்: CM ஸ்டாலின்

image

சென்னையில் நடந்த கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் பேசிய CM ஸ்டாலின், நாடாளுமன்றத்தில் போதிய அரசியல் வலிமை இல்லாத காரணத்தினால் தான் மணிப்பூர் மாநிலத்தால் நீதிக்கான குரலை ஓங்கி ஒலிக்க முடியவில்லை என விளக்கினார். நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை குறைவது என்பதை, நமது அரசியல் வலிமை குறைப்பு என்ற கோணத்தில் பார்க்க வேண்டும். நமது உரிமைகள், எதிர்காலத்தின் நலன்களைப் பற்றியது என்றார்.

News March 22, 2025

காங்கிரஸ் மூத்த தலைவர் தேவேந்திர சர்மா காலமானார்

image

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான தேவேந்திர சர்மா (66) உடல்நலக்குறைவால் காலமானார். ஒடிசாவின் ஆவுல் (Aul) தொகுதியில் 2014 – 2019 வரை சட்டமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார். தேவேந்திர சர்மாவின் மறைவுக்கு ஒடிசா CM மோகன் மாஜி, காங்கிரஸ் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

News March 22, 2025

சித்தராமையா பங்கேற்காதது ஏன்?

image

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டத்தில் கர்நாடகா முதல்வர் சித்தராமையா பங்கேற்கவில்லை. இதனால், இந்த விவகாரத்தில் அவருக்கு உடன்பாடு எதுவும் இல்லையா? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பிய நிலையில், அவர் பங்கேற்காதது ஏன் என்பதற்கான விடை கிடைத்துள்ளது. இதுகுறித்து டி.கே.சிவக்குமார், காலில் ஏற்பட்ட காயம் காரணமாகவே சித்தராமையாவால் இக்கூட்டத்தில் பங்கேற்க முடியவில்லை என விளக்கமளித்துள்ளார்.

News March 22, 2025

ஐதராபாத்தில் 2 ஆவது கூட்டம்: ஸ்டாலின் அறிவிப்பு

image

நியாயமான தொகுதி மறுசீரமைப்பு கூட்டு நடவடிக்கைக் குழுவின் 2 ஆவது கூட்டம் ஐதராபாத்தில் நடக்கும் என TN CM ஸ்டாலின் அறிவித்துள்ளார். சென்னையில் நடந்த முதல் கூட்டத்தில், மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகளை மறுசீரமைக்க 3 மாநில CMகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், தெலங்கானா CM ரேவந்த் ரெட்டி விருப்பம் தெரிவித்ததன் பேரில், அடுத்த கூட்டத்தை ஐதராபாத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

News March 22, 2025

இன்னைக்குதான் அது நடந்துச்சுல்ல!

image

சரியாக 5 வருடங்களுக்கு முன் இதே நாளில்தான், இதுவரை நாம் அறிந்திராத ஒரு விஷயத்துக்குள் தள்ளப்பட்டோம். ஆம், ஊரடங்கே தான். கொரோனா என்ற உயிர்க்கொல்லி வைரஸின் கோரத்தாண்டவத்தை உணர்ந்த இந்திய அரசு, 2020 மார்ச் 22இல் ஒருநாள் மாதிரி தேசிய ஊரடங்கை அறிவித்தது. இந்த ஊரடங்கு, கொரோனா தீவிரத்தால் பிறகு அப்படியே நீட்டிக்கப்பட்டதால் கோடிக்கணக்கானோர் வீட்டிலேயே முடங்கினர்.

News March 22, 2025

கூட்டாட்சி பரிசு அல்ல, உரிமை: பிஆர்எஸ்

image

கூட்டாட்சி என்பது பரிசு அல்ல; உரிமை என தொகுதி மறுசீரமைப்பு கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில் பிஆர்எஸ் கட்சியின் செயல் தலைவர் ராமராவ் தெரிவித்துள்ளார். உரிமைகளை காக்கும் போராட்டத்திற்கு தமிழ்நாடு ஊக்கமளிக்கிறது என புகழாரம் சூட்டிய அவர், கூட்டாட்சி என்பது மாநிலங்களுக்கான பரிசு அல்ல; உரிமை என்பதை மத்திய அரசுக்கு நினைவூட்டுகிறேன். அடிப்படை உரிமைக்கான போராட்டம் தொடர வேண்டும் என்றார்.

News March 22, 2025

தொகுதி மறுசீரமைப்பு: பிரதமருக்கு ஜெகன் கடிதம்

image

சென்னையில் திமுக தலைமையில் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் நடந்த நிலையில், ஆந்திர முன்னாள் CM ஜெகன் மோகன் ரெட்டி, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். நாடாளுமன்றத்தில் எந்த மாநிலத்திற்கும் பிரதிநிதித்துவம் குறையக் கூடாது என வலியுறுத்தியுள்ளார். மேலும், மாநிலங்களின் பிரதிநிதித்துவம் பாதிக்காதவாறு மறுசீரமைப்பு நடத்தப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

News March 22, 2025

சினிமாவில் செண்டிமெண்ட் பார்த்தாரா உதயநிதி?

image

சேலம் பின்னணியில் எடுக்கப்படும் படங்கள் ஓடாது என்ற செண்டிமெண்ட் இருப்பதாக சொன்னபோது, உதயநிதி தயக்கம் அடைந்ததாக மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார். ஆனால், என்னுடைய கதையின் மீது நம்பிக்கை வைத்து மாமன்னனில் நடித்தார் எனக் கூறிய மாரி, கதை சொல்லும் விதத்தில், ஒரு மனிதரை மேலே கீழே என்று இழிவாக காட்டக்கூடாது என்ற என்னுடைய சினிமா பாணி, இன்றைக்கு பல இயக்குனர்களுக்கு சிக்கலாக மாறியுள்ளதாகவும் தெரிவித்தார்.

News March 22, 2025

மாநிலம் முழுவதும் நாளை கிராம சபைக் கூட்டம்!

image

மாநிலம் முழுவதும் நாளை (மார்ச் 23) ‘கிராம சபைக் கூட்டம்’ நடத்தத் தேவையான ஏற்பாடுகளைச் செய்ய அரசு அறிவுறுத்தியுள்ளது. உலக தண்ணீர்‌ தினத்தையொட்டி நடத்தப்படும் இந்தக் கூட்டத்தில், தண்ணீரின் அவசியம் குறித்து மக்களுக்கு எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், மழைநீர் சேகரிப்பு ஆகியவை தொடர்பாகத் தீர்மானம் நிறைவேற்றி ‘நம்ம கிராம சபை’ செயலியில் பதிவிட உத்தரவிட்டுள்ளது.

News March 22, 2025

TN, பஞ்சாப் மட்டுமா பாதிக்கும்? பகவந்த் சிங் மான்

image

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான நடவடிக்கைக்கு 100% ஒத்துழைப்பு வழங்கத் தயார் என பஞ்சாப் CM பகவந்த் சிங் மான் உறுதியளித்துள்ளார். கூட்டு நடவடிக்கை குழுக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கை, மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்களுக்கு தரும் தண்டனை என விமர்சித்தார். இதனால் TN, பஞ்சாப் மட்டுமின்றி மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்களும் பாதிக்கும் என்றார்.

error: Content is protected !!