News August 16, 2025

ஆக.22-ல் தமிழகம் வரும் அமித்ஷா!

image

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் 22-ம் தேதி தமிழகம் வரவிருக்கிறார். நெல்லையில் நாளை(ஆக.17) நடைபெற இருந்த பாஜக பூத் முகவர்கள் மாநாடு, நாகலாந்து கவர்னர் இல.கணேஷன் மறைவையடுத்து வரும் 22-ம் தேதிக்கு மாற்றப்பட்டது. அதில் கலந்துகொள்ளவே அமித்ஷா வருகை தர உள்ளார். முன்னதாக, கடந்த ஜூன் மாதம் மதுரையில் நடைபெற்ற கட்சி கூட்டத்தில் பேசிய அவர், இனி ஒவ்வொரு மாதமும் தமிழகம் வரவிருப்பதாக கூறியிருந்தார்.

News August 16, 2025

தொப்பை குறைய ஸ்கிப்பிங் செய்யுங்க…

image

உடல் எடை குறைத்து ஃபிட்டாக வைத்துக்கொள்ள ஓட்டம், நடைபயிற்சியை விட ஸ்கிப்பிங் சிறந்தது. ஸ்கிப்பிங் செய்யும்போது ஒரு நிமிடத்துக்கு தோராயமாக 15 – 20 கலோரிகள், அதாவது 30 நிமிடங்களில் 400 கலோரி வரை எரிக்கப்படும். இதனால் உடலில் தங்கியுள்ள தேவையற்ற கொழுப்புகள் கரையும், தசைகள், எலும்புகள் மற்றும் உள்ளுறுப்புகள் பலம் பெறும். உடல் சமநிலை அதிகரிக்கும். இதயம் பலம் பெற்று, உங்கள் சுவாசத் திறன் அதிகரிக்கும்.

News August 16, 2025

GOOD NEWS: பெற்றோர்களே, இதை கவனிங்க!

image

வீடுகள், பள்ளிகளுக்கு வெளியே இயற்கை சூழல்களில் குழந்தைகள் விளையாடுவது, அவர்களின் உடல் மற்றும் மனநலத்துக்கு பெரும் நன்மை செய்வதாக அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலை., விஞ்ஞானிகள் ஆய்வில் கண்டறிந்துள்ளனர். `வெளியே’ என்பது கட்டடத்துக்கு வெளியே என்பதல்ல, மரம், செடிகள் மற்றும் இயற்கை தன்மை மிகுந்த இடங்களாக இருக்க வேண்டும் என்கின்றனர். எப்போதும் ஸ்மார்ட்போனுடன் தலை கவிழ்ந்திருக்கும் நம் குழந்தைகளின் நிலை?

News August 16, 2025

10 விநாடி விளம்பரத்திற்கு ₹16 லட்சம்

image

2025 ஆசிய கோப்பை தொடர் வரும் செப்., 9-ம் தேதி தொடங்கவுள்ளது. இத்தொடரில் இந்தியா விளையாடும் போட்டிகளின்போது வரும் விளம்பரங்களுக்கு அதிக டிமாண்ட் ஏற்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக IND vs PAK மோதும் போட்டிகளின்போது, 10 விநாடி விளம்பரங்களுக்கு ₹14 முதல் ₹16 லட்சம் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டிவி, டிஜிட்டல் என இந்த தொடரின் முழு ஒளிபரப்பு உரிமமும் சோனி பிக்சர்ஸ் நிறுவனம் வசம் உள்ளது.

News August 16, 2025

போர்களின்போது பாலியல் துன்புறுத்தல்கள் 25% அதிகரிப்பு

image

மனிதம் கொஞ்சம் கொஞ்சமாக செத்து வருவதற்கு இந்த அறிக்கையே சாட்சி. கடந்த ஆண்டில் நடைபெற்ற போர்கள் & உள்நாட்டு மோதல்களின்போது சிறுமிகள், பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல் 25% அதிகரித்துள்ளதாக ஐ.நா., தெரிவித்துள்ளது. இதில் 63 அரசு & NGO அமைப்புகளுக்கு தொடர்புள்ளதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்த கொடுமைகள் காங்கோ, சோமாலியா, தெற்கு சூடான், ஆப்பிரிக்க குடியரசு ஆகிய நாடுகளில் அரங்கேறியுள்ளன.

News August 16, 2025

BREAKING: ஆக.19-ல் NDA கூட்டணி MP-க்கள் கூட்டம்

image

PM மோடி தலைமையில் NDA கூட்டணி MP-க்கள் கூட்டம் ஆக.19-ல் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் நடைபெறவுள்ள இந்த கூட்டத்திற்கு அதிமுகவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாம். துணை ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு அன்றைய தினமே வேட்பாளர் அறிவிப்பு இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

News August 16, 2025

SRH அணியில் பாண்ட்யா..? பதான் சொன்ன ரகசியம்

image

SRH ஆலோசகராக VVS லக்‌ஷ்மன் இருந்தபோதே, பாண்ட்யாவின் திறமையை கூறி அணியில் எடுக்க சொன்னதாக பதான் நினைவுகூர்ந்துள்ளார். ஆனால், பாண்டியாவின் திறமை குறித்து வெளியில் அதிகம் பேசப்படாததால், அவரை லக்‌ஷ்மன் அணியில் எடுக்கவில்லை எனவும், அதற்காக தற்போது வரை அவர் புலம்பி வருவதாகவும் பதான் பகிர்ந்துள்ளார். 2015-ல் ₹10 லட்சத்திற்கு MI-ஆல் வாங்கப்பட்ட பாண்டியா, தற்போது அந்த அணியின் கேப்டனாக உயர்ந்துள்ளார்.

News August 16, 2025

கடந்தாண்டு +1-ல் பெயில் ஆன மாணவர்களுக்கு பொதுத்தேர்வு

image

நடப்பாண்டில் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு இல்லை என்றாலும், 2024 – 25 கல்வி ஆண்டில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் மீண்டும் பொதுத்தேர்வை எழுத வேண்டும் என அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. மாநில கல்விக் கொள்கையில் நடப்பாண்டு முதல் 11-ம் வகுப்புக்குப் பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. இது, கடந்தாண்டு எழுதியவர்களுக்கு பொருந்தாது என அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

News August 16, 2025

ஜெலன்ஸ்கியின் அமெரிக்க பயணம் அறிவிப்பு

image

டிரம்ப்பின் வேண்டுகோளுக்கு இணங்க வரும் திங்கள் கிழமை அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரைனில் அமைதி நிலவ அனைத்து ஒத்துழைப்பும் செய்ய தயார் எனவும், அமெரிக்கா – ரஷ்யா – உக்ரைன் என முத்தரப்பு அமைதி பேச்சுவார்த்தைக்கு டிரம்ப் சம்மதித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். டிரம்ப் நேற்று புடினை சந்தித்த நிலையில், ஜெலன்ஸ்கியையும் சந்தித்து பேச உள்ளார்.

News August 16, 2025

பிரிவினை பற்றிய பாடம்.. தேசிய அரசியலில் கொதிநிலை

image

6 – 12ம் வகுப்பு பாடப்புத்தகங்களில் நாட்டு பிரிவினை பற்றிய புது தொகுதியை NCERT அறிமுகப்படுத்தியுள்ளது. அதில் பிரிவினை கலவரங்களுக்கு ஜின்னா, காங்., மவுண்ட்பேட்டன் மூவரும் காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், நாட்டை பிரிக்க வேண்டும் என 1938-ல் ஹிந்து மகாசபா தான் முதலில் வலியுறுத்தியதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது. பொய் தகவலை கூறும் இப்புத்தகங்களை கொளுத்த வேண்டும் என்றும் சாடியுள்ளது.

error: Content is protected !!