News March 22, 2025

அந்நிய செலாவணி கையிருப்பு தொடர்ந்து உயர்வு

image

அந்நிய செலாவணி கையிருப்பு கடந்த 3 மாதங்களில் இல்லாத அளவு உச்சம் தொட்டுள்ளது. டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சியை கட்டுப்படுத்த வெளிநாட்டு கரன்சிகளை மாற்றும் பணியில் ரிசர்வ் வங்கி ஈடுபட்டுள்ளது. இதன் விளைவாக கையிருப்பில் உள்ள அந்நிய செலாவணி இருப்பு அதிகரித்துள்ளது. மார்ச் 14 நிலவரப்படி, அந்நிய செலாவணி கையிருப்பு ரூ.2,600 கோடி அதிகரித்து, ரூ.56.24 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.

News March 22, 2025

பாக்ஸிங் லெஜெண்ட் மரணம்: இது காரணமா?

image

குத்துச்சண்டை விளையாட்டின் ‘லெஜெண்ட்’ ஜார்ஜ் ஃபோர்மேன்(76) காலமானார். அமெரிக்காவை சேர்ந்த இவர் ஒலிம்பிக் சாம்பியன், 2 முறை ஹெவி வெயிட் உலக சாம்பியன் என பாக்ஸிங்கின் உச்சத்தை தொட்டவர். கட்டுப்பாடும், ஒழுக்கமும் நிரம்பிய இவரின் மரணம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சோஷியல் மீடியாவில் பலரும், இவர் மரணத்துக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தியது காரணமாக இருக்குமோ என்றெல்லாம் கேள்வி எழுப்புகின்றனர்.

News March 22, 2025

‘BIG BOSS’ எண்ணம் எங்களிடம் எடுபடாது: கே.டி.ராமா ராவ்

image

மத்திய அரசு BIG BROTHER-ஆக செயல்பட வேண்டும் தவிர BIG BOSS-ஆக செயல்படக் கூடாது என பிஆர்எஸ் கட்சி தலைவர் கே.டி.ராமா ராவ் கூறியுள்ளார். தொகுதி மறுவரை தொடர்பாக இப்போது ஏன் பேசுகிறீர்கள் என சிலர் கேள்வி எழுப்புவதாகவும், இப்போது இந்த பிரச்னையை பேசவில்லை என்றால் வரலாறு தங்களை மன்னிக்காது என்றும் தெரிவித்துள்ளார். தென் மாநிலங்களின் உரிமை பறிபோவதை அனுமதிக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

News March 22, 2025

IPL: வரலாறு படைக்கப்போகும் அந்த 9 பேர்…!

image

ஐபிஎல் தொடர் 17 ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான வீரர்களை பார்த்துவிட்டது. ஆனால், அதில் 9 பேர் மட்டுமே 18வது சீசனிலும் விளையாடுகிறார்கள். இந்த பட்டியலில், தோனி, கோலி, ரோஹித் ஆகிய மூவரும் நமக்கு உடனே ஞாபகத்திற்கு வந்துவிடுவர். மீதியுள்ள ஆறு பேர் யார் தெரியுமா? ஜடேஜா, அஸ்வின், ரஹானே, மனீஷ் பாண்டே, இஷாந்த் சர்மா, ஸ்வப்னில் சிங் இவர்கள்தான் அது. 9 பேருமே இந்திய வீரர்கள் என்பது கூடுதல் சிறப்பு.

News March 22, 2025

பகலில் டீச்சர்… இரவில் ஆபாசப் பட நடிகை…

image

ஆசிரியர்கள் சமூகத்தில் கடவுளாக பார்க்கப்படுகிறார்கள். சில ஆசிரியர்களின் செயல் ஒட்டுமொத்த ஆசிரியர் சமூகத்தையும் களங்கமாக்கி விடுகிறது. இத்தாலியில் பள்ளி ஆசிரியராக இருந்த எலெனா மரகா(29), Onlyfans என்ற ஆபாச இணையதளத்தில் தனது வீடியோக்களை அப்லோட் செய்துள்ளார். ஆசிரியராக பெறும் மாத ஊதியத்தை ஆபாச இணைய தளத்தில் ஒரே நாளில் சம்பாதிப்பதாக அவர் கூறியுள்ளார். தற்போது, அவர் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளார்.

News March 22, 2025

போட்டித் தேர்வுகளுக்கு தயாராகிறீர்களா? இதை படிங்க

image

TNPSC உள்ளிட்ட அரசுப்பணி போட்டித் தேர்வுகளுக்கு தயாராவோரில் சிலர், தேர்வுக்கு எப்படி தயாராவது என தெரியாமல் இருப்பர். அவர்களுக்கென மாநில அரசு சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது. வருகிற 24ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை கல்வி தொலைக்காட்சியில் காலை 7 மணி முதல் 9 மணி வரை இலவச பயிற்சி வகுப்பு ஒளிபரப்பப்படவுள்ளது. இதன் மறுஒளிபரப்பு அன்றைய தினம் இரவு 7 மணி முதல் இரவு 9 மணிவரை ஒளிபரப்பப்படவுள்ளது. SHARE IT.

News March 22, 2025

சுனிதாவுக்கு கூடுதல் சம்பளம் கிடைக்குமா? டிரம்ப் பதில்

image

விண்வெளியில் எதிர்பாராதவிதமாக 9 மாதங்கள் தங்கிய சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோருக்கு கூடுதல் சம்பளம் கிடைக்குமா? என அதிபர் டிரம்பிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், இதைப் பற்றி யாருமே தெரிவிக்கவில்லை. தெரிந்திருந்தால் சொந்த பணத்தை தந்திருப்பேன் என பதிலளித்துள்ளார். USல் விண்வெளி வீரர்களும் மத்திய ஊழியர்கள் தான். அதனால் O.Tக்கு கூடுதல் ஊதியம் கிடைக்காது. விண்வெளிக்கே சென்றாலும் இதுதான் ரூல்ஸ்!

News March 22, 2025

டிரம்புக்காக பிரார்த்தனை செய்த ரஷ்ய அதிபர்

image

அமெரிக்க தேர்தல் பரப்புரையின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் டிரம்ப் காதில் குண்டு பட்டு காயமடைந்தார். அப்போது டிரம்ப் நலம் பெற வேண்டி தேவாலயம் சென்று ரஷ்ய அதிபர் புதின் பிரார்த்தனை செய்துள்ளார். இந்த தகவலை டிரம்பின் உயர்மட்ட தூதர் ஸ்டீவ் விட்காஃப் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். புதின் செய்ததை அறிந்தவுடன் டிரம்ப் நெகிழ்ந்து போனதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

News March 22, 2025

வேலை பார்க்கும் மனைவிக்கு ஜீவனாம்சம் கிடையாது: SC

image

கணவருக்கு இணையாக வேலை பார்த்து ஊதியம் பெறும் மனைவிக்கு ஜீவனாம்சம் அளிக்க உத்தரவிட SC மறுத்துவிட்டது. கணவரிடம் விவாகரத்து பெற்ற மனைவி, ஜீவனாம்சம் கோரி மனு தொடுத்திருந்தார். அதற்கு கணவர் தரப்பில், மனைவியும் தன்னைப் போல ரூ.60,000 சம்பளம் பெறுகிறார் என வாதிடப்பட்டது. இருதரப்பு வாதத்தை கேட்ட SC, கணவருக்கு இணையாக மனைவி சம்பளம் வாங்குவதை சுட்டிக்காட்டி, மனுவை தள்ளுபடி செய்தது.

News March 22, 2025

திமுக அரசு திணறி வருகிறது: அன்புமணி

image

கொலை, கொள்ளையை தடுக்க முடியாமல் திமுக அரசு திணறி வருவதாக அன்புமணி குற்றஞ்சாட்டியுள்ளார். 4 ஆண்டுகால திமுக ஆட்சியில் 6,597 படுகொலைகள் நடைபெற்றுள்ளதாகவும், ஆனால் உண்மைக்கு மாறாக குற்றங்கள் குறைந்துள்ளதாக முதல்வர் கூறுவது முற்றிலும் தவறானது என்றும் அவர் விமர்சித்துள்ளார். சட்டம் ஒழுங்கு சரியாக இருந்தால், கொலைகள் குறைந்திருக்கும், ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!