News March 22, 2025

நமீபியாவின் முதல் பெண் அதிபர்.. யார் இந்த நெடும்போ?

image

நமீபியாவின் முதல் பெண் அதிபராக நெடும்போ நந்தி நதைத்வா பதவியேற்றுக்கொண்டார். இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் தென்னாப்பிரிக்கா, சாம்பியா, காங்கோ, கென்யா போன்ற ஆப்பிரிக்கா நாட்டு தலைவர்கள் பங்கேற்றனர். 25 ஆண்டுகளுக்கு மேல் அந்நாட்டின் உயரிய பதவிகளில் இருந்த அவர் மக்களின் நன்மதிப்பை பெற்றவராக திகழ்கிறார். முன்னாள் துணை அதிபராகவும் நெடும்போ பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

News March 22, 2025

ஐபிஎல் போட்டிகளை இலவசமாக பார்க்க முடியுமா?

image

ஜியோ ஹாட் ஸ்டாரில் மட்டுமே ஐபிஎல் போட்டிகள் ஒளிபரப்பாக உள்ளன. இந்நிலையில், ஜியோ சிம் வைத்திருப்பவர்கள் போட்டிகளை இலவசமாக பார்க்க முடியும். ரூ.299-க்கு மேல் இருக்கும் பிளான்களில் ரீசார்ஜ் செய்திருந்தால் ஹாட் ஸ்டாரில் ஃப்ரீயாக ஐபிஎல் போட்டிகளை காணலாம். ஜியோ சினிமா தளத்தில் ஐபிஎல் போட்டிகள் இலவசமாக ஒளிபரப்பட்ட நிலையில், தற்போது ஹாட் ஸ்டாரும், ஜியோ சினிமாவும் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

News March 22, 2025

ஷாருக்கானுடன் இணைந்து நடிக்க உள்ள பிராவோ

image

CSKவின் நட்சத்திர வீரராக இருந்த டுவைன் பிராவோ மைதானத்தில் ரசிகர்களை குஷிப்படுத்துவதில் வல்லவர். மேற்கிந்திய தீவுகளை சேர்ந்த பிராவோ பவுலிங், பேட்டிங், பீல்டிங் என அனைத்திலும் கலக்கியதால் இந்திய ரசிகர்களுக்கு அவரை மிகவும் பிடிக்கும். சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் திரைப்படத்தில் நடிக்க ஆசை உள்ளதாகவும், பாலிவுட் நடிகர் ஷாருக்கானுடன் இணைந்து ஒரு படம் நடிக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

News March 22, 2025

யாரை கண்டும் எங்களுக்கு பயமில்லை: செல்லூர் ராஜூ

image

அதிமுக யாருக்கும் எப்போதும் பயப்பட்டதில்லை என செல்லூர் ராஜூ கூறியுள்ளார். அதிமுகவை மற்றவர்கள் இயக்குகிறார்கள் என்ற அமைச்சர் தங்கம் தென்னரசுவின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த அவர், அதிமுகவுக்கு தாங்களே எஜமானர்கள், வேறு யாரும் இல்லை என்றார். அதிமுகவை ஆளும் கட்சியாக மாற்றுவதற்கும், இபிஎஸ்ஸை முதல்வர் ஆக்குவதற்கும் யார் ஒத்துழைக்கிறார்களோ அவர்களோடு கூட்டணி வைப்போம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

News March 22, 2025

தண்ணீர் கேனை 50 முறைக்கு மேல் பயன்படுத்த கூடாது: அரசு

image

பெரும்பாலான வீடுகளில் 20 லிட்டர் தண்ணீர் கேன்கள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. இதுபற்றி உணவு பாதுகாப்புத் துறை புதிய அறிவுறுத்தலை விற்பனையாளர்களுக்கு வழங்கியுள்ளது. அதன்படி, கேன்களை 50 முறைக்கு மேல் தண்ணீருக்கு பயன்படுத்தக் கூடாது, அழுக்கடைந்த, கீறல் விழுந்த மற்றும் சூரிய ஒளியில் நேரடியாக இருக்கும் கேன்களை பயன்படுத்தக் கூடாது. உடல்நலத்துக்கானது என்பதால் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.

News March 22, 2025

முகமது சிராஜூடன் காதலா? நடிகை மஹிரா சர்மா பதில்

image

இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜூம், நடிகை மஹிரா சர்மாவும் காதலிப்பதாக தகவல் பரவி வருகிறது. இதற்கு விளக்கம் அளித்து மஹிரா சர்மா சமூக வலைதளபக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர், நாங்கள் 2 பேரும் காதலிப்பதாக வெளியாகும் செய்திகள் அடிப்படை முகாந்திரமில்லாதவை, அதில் உண்மையில்லை என்றும், இத்தகைய வதந்திகளை பரப்ப வேண்டாம் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

News March 22, 2025

டிக்கெட் வாங்க குவித்த ரசிகர்கள்! எம்புரானின் சாதனை

image

மோகன்லால் – பிருத்விராஜ் கூட்டணியில் உருவான
‘லூசிபர்’, தரமான மாஸ் படமாக அமைந்தது. அதன் தொடர்ச்சியாக 2ஆம் பாகமான ‘எம்புரான்’ உருவாக்கப்பட்டுள்ளது. படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு உள்ள நிலையில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய 24 மணி நேரத்தில் 6.45 லட்சம் டிக்கெட்கள் விற்றுத் தீர்ந்தன. எம்புரான் படம் மார்ச் 27ஆம் தேதி திரைக்கு வருகிறது. நீங்க டிக்கெட் வாங்கிட்டீங்களா?

News March 22, 2025

இந்தியாவின் அதிவேக ரயில் எது தெரியுமா?

image

இந்தியாவிலேயே அதிவேகமாக செல்லும் ரயில் எது தெரியுமா? தேஜஸ்தான். முதன் முதலாக 2017ல் அறிமுகமான தேஜஸ் மும்பையில் இருந்து கோவா வரையிலான 552 கி.மீ தூரத்தை 8 மணி 30 நிமிடங்களில் கடந்தது. 2019ல் தமிழகத்தில் அறிமுகமான தேஜஸ் ரயில் எழும்பூரில் இருந்து மதுரைக்கு 6 மணி 30 நிமிடங்களில் சென்றடைந்தது. அதிகபட்ச வேகம் மணிக்கு 200 கி.மீ. ஆனால், தண்டவாள கட்டுப்பாட்டால் 130 கி.மீ வேகத்திலேயே இயக்கப்படுகிறது.

News March 22, 2025

அந்நிய செலாவணி கையிருப்பு தொடர்ந்து உயர்வு

image

அந்நிய செலாவணி கையிருப்பு கடந்த 3 மாதங்களில் இல்லாத அளவு உச்சம் தொட்டுள்ளது. டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சியை கட்டுப்படுத்த வெளிநாட்டு கரன்சிகளை மாற்றும் பணியில் ரிசர்வ் வங்கி ஈடுபட்டுள்ளது. இதன் விளைவாக கையிருப்பில் உள்ள அந்நிய செலாவணி இருப்பு அதிகரித்துள்ளது. மார்ச் 14 நிலவரப்படி, அந்நிய செலாவணி கையிருப்பு ரூ.2,600 கோடி அதிகரித்து, ரூ.56.24 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.

News March 22, 2025

பாக்ஸிங் லெஜெண்ட் மரணம்: இது காரணமா?

image

குத்துச்சண்டை விளையாட்டின் ‘லெஜெண்ட்’ ஜார்ஜ் ஃபோர்மேன்(76) காலமானார். அமெரிக்காவை சேர்ந்த இவர் ஒலிம்பிக் சாம்பியன், 2 முறை ஹெவி வெயிட் உலக சாம்பியன் என பாக்ஸிங்கின் உச்சத்தை தொட்டவர். கட்டுப்பாடும், ஒழுக்கமும் நிரம்பிய இவரின் மரணம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சோஷியல் மீடியாவில் பலரும், இவர் மரணத்துக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தியது காரணமாக இருக்குமோ என்றெல்லாம் கேள்வி எழுப்புகின்றனர்.

error: Content is protected !!