News August 16, 2025

வீட்டுக் கடன் வட்டி விகிதத்தை உயர்த்தியது SBI

image

வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதத்தில் 25 அடிப்படை புள்ளிகளை SBI உயர்த்தியுள்ளது. இதுவரை, 7.50% – 8.45% ஆக இருந்த வட்டி விகிதம் தற்போது 7.50% – 8.70% என மாற்றப்பட்டுள்ளது. இந்த உயர்வு ஆக.1 முதலே அமலுக்கு வந்துள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், இந்த வட்டி விகித உயர்வு ஏற்கெனவே கடன் வாங்கியவர்களுக்கு பொருந்தாது எனவும், புதிதாக கடன் பெறுவோர்களுக்கு இந்த உயர்வு பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News August 16, 2025

வணக்கம் மட்டும் சொன்னோம் அவ்வளவுதான்: ராமதாஸ்

image

தனது தாயார் சரஸ்வதியின் பிறந்தநாளின்போது அன்புமணி, ராமதாஸுடன் இருக்கும் போட்டோ வைரலானது. இதனால் விரைவில் உள்கட்சி பிரச்னை முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்த நிகழ்வின்போது அன்புமணி வணக்கம் கூறினார், நானும் வணக்கம் சொன்னேன், வேறேதும் பேசவில்லை என ராமதாஸ் தெரிவித்துள்ளார். அத்துடன், திட்டமிட்டபடி தனது தலைமையில் நாளை காலை 9.30 மணிக்கு பொதுக்குழு நடைபெறவுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

News August 16, 2025

தோனி நீக்கியதால் ஓய்வு பெற முடிவெடுத்தேன்: சேவாக்

image

2015-ல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் சேவாக். ஆனால், 2008-09 காமன்வெல்த் போட்டிகளின்போது தோனி தன்னை அணியில் இருந்து நீக்கியபோதே ஓய்வை அறிவிக்க நினைத்ததாக சேவாக் கூறியுள்ளார். ஆனால், அப்போது சச்சினிடம் இதுகுறித்து ஆலோசித்தபோது, உணர்ச்சிவசப்பட்டு முடிவெடுக்க வேண்டாம் என கூறியதாகவும், அதன்பிறகு கோப்பை வென்ற 2011 உலகக்கோப்பை அணியிலும் இடம்பெற்று நல்ல ஸ்கோர் செய்ததாக தெரிவித்துள்ளார்.

News August 16, 2025

கிருஷ்ணர் தலையில் மயில் இறகு இருக்கும் ரகசியம்!

image

வனவாசத்தின் போது, தாகத்தால் தவித்த சீதைக்கும், ராமருக்கும் மயில் ஒன்று உதவ முன்வந்தது. நீர் இருக்கும் இடம் வெகுதூரம் என்பதாலும், அடர்ந்த காடு என்பதாலும், அவர்கள் வழி தவறி போய்விட கூடாது என்பதற்காக தனது இறகை உதிர்த்துக் கொண்டே சென்றது மயில். நீர் நிலையை ராமர் அடைந்த போது, மயில் இறந்து கிடப்பதை பார்த்தார். அதன் தியாகத்திற்காக, கிருஷ்ணர் அவதாரத்தில் தலையில் மயிலிறகை சூடிக் கொண்டார் என்பது ஐதீகம்.

News August 16, 2025

கூலி படத்திற்கு சம்பளம் வாங்கவில்லை: ஆமீர் கான்

image

கூலி படத்தில் நடித்ததற்காக பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஆமீர் கான் ₹20 கோடி சம்பளம் வாங்கி இருப்பதாக சமூக வலைதளத்தில் செய்தி பரவியது. இந்நிலையில், இதை மறுத்துள்ள ஆமீர் கான், கூலி படத்துக்காக நான் சம்பளம் ஏதும் வாங்கவில்லை. ரஜினி சார் மீது மிகுந்த மரியாதையும் அன்பும் வைத்திருக்கிறேன். அவருடன் நடித்ததே எனக்குப் பெரிய பரிசுதான். அதனால் பணம் பற்றி யோசிக்கக் கூட முடியவில்லை என்று விளக்கமளித்துள்ளார்.

News August 16, 2025

பனையூரில் இருந்து வெளியே வாங்க விஜய்: செல்லூர் ராஜு

image

எல்லோரும் எம்ஜிஆராக நினைக்கிறார்கள்; ஆனால் எப்போதும் ஒரே எம்ஜிஆர் தான் என்று விஜய்யை செல்லூர் ராஜு விமர்சித்துள்ளார். பனையூரில் இருந்து அரசியல் செய்யும் விஜய், முதலில் களத்துக்கு வர வேண்டும் எனக் கூறிய அவர், மாநாடு, செயற்குழுவில் பேசிய இமேஜை வைத்து வெற்றி பெறலாம் என்று விஜய் நினைத்தால், அதை மக்கள் ஏற்க மாட்டார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

News August 16, 2025

ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்த CM ஸ்டாலின்

image

திரையுலகில் 50 ஆண்டுகளை தொட்ட ரஜினிக்கு CM ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். திரையுலகில் நுழையும் போது இருந்த துடிப்பும், வேகமும் இன்றும் ரஜினியிடம் இருப்பதை ’கூலி’ படத்தில் பார்த்து தெரிந்துக்கொண்டதாகவும், ’பேருக்குள்ளே காந்தம் உண்டு உண்மைதானடா’ என்ற பாடல் வரிகள் மிகப் பொருத்தமானது எனவும் தெரிவித்துள்ளார்.

News August 16, 2025

தீபாவளி பரிசால் ஷாக் ஆகும் மது பிரியர்கள்

image

தீபாவளி பரிசாக GST வரி முறைகளில் சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட உள்ளதாக மோடி நேற்று அறிவித்தார். தற்போது 5 விதமாக இருக்கும் GST வரி, 2 விதமாக (5%, 18%) மாற்றப்படவுள்ளன. இதில் ஆடம்பரப் பொருட்கள், மதுபானங்களுக்கு மட்டும் 40% சிறப்பு வரி விதிக்கப்படும் என கூறப்படுகிறது. தீபாவளிக்கு அதிகளவில் விற்பனையாவது ஆடம்பரப் பொருட்கள், மதுபானம் தான். இது தீபாவளி பரிசு அல்ல சுமை என நெட்டிசன்கள் விமர்சிக்கின்றனர்.

News August 16, 2025

பாரதமும் சனாதனமும் ஒன்று: R.N.ரவி

image

1,000 வருடங்களுக்கு முன்பு நோய் ஏற்படாததற்கு சனாதன தர்மமே காரணம் என்று கவர்னர் R.N.ரவி தெரிவித்துள்ளார். கிருஷ்ண ஜெயந்தி விழாவில் பேசிய அவர், பாரதமும் சனாதனமும் ஒன்று, அதனைப் பிரிக்கவும் முடியாது; அழிக்கவும் முடியாது என்றார். வேதங்கள் மூலமாகவே இந்த நாடு ஒருங்கிணைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். முன்னதாக, உதயநிதி, சனாதனத்தை டெங்கு உடன் ஒப்பிட்டுப் பேசியதற்கு கவர்னர் கண்டனம் தெரிவித்திருந்தார்.

News August 16, 2025

750 பணியிடங்கள்.. உள்ளூரிலேயே வேலை!

image

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாக உள்ள 750 அப்ரண்டிஸ் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழகத்தில் மட்டும் 200 காலிப் பணியிடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பட்டப்படிப்பு. வயது வரம்பு: 20 – 28. தேர்வு முறை: ஆன்லைன் தேர்வு மற்றும் தாய்மொழி தகுதித் தேர்வு. விண்ணப்பிக்க கடைசி நாள்: ஆக.20. மேலும் அறிய & விண்ணப்பிக்க இங்கே <>கிளிக்<<>> செய்யவும். Share it.

error: Content is protected !!