News August 16, 2025

ஜெலன்ஸ்கியின் அமெரிக்க பயணம் அறிவிப்பு

image

டிரம்ப்பின் வேண்டுகோளுக்கு இணங்க வரும் திங்கள் கிழமை அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரைனில் அமைதி நிலவ அனைத்து ஒத்துழைப்பும் செய்ய தயார் எனவும், அமெரிக்கா – ரஷ்யா – உக்ரைன் என முத்தரப்பு அமைதி பேச்சுவார்த்தைக்கு டிரம்ப் சம்மதித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். டிரம்ப் நேற்று புடினை சந்தித்த நிலையில், ஜெலன்ஸ்கியையும் சந்தித்து பேச உள்ளார்.

News August 16, 2025

பிரிவினை பற்றிய பாடம்.. தேசிய அரசியலில் கொதிநிலை

image

6 – 12ம் வகுப்பு பாடப்புத்தகங்களில் நாட்டு பிரிவினை பற்றிய புது தொகுதியை NCERT அறிமுகப்படுத்தியுள்ளது. அதில் பிரிவினை கலவரங்களுக்கு ஜின்னா, காங்., மவுண்ட்பேட்டன் மூவரும் காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், நாட்டை பிரிக்க வேண்டும் என 1938-ல் ஹிந்து மகாசபா தான் முதலில் வலியுறுத்தியதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது. பொய் தகவலை கூறும் இப்புத்தகங்களை கொளுத்த வேண்டும் என்றும் சாடியுள்ளது.

News August 16, 2025

இதுக்கு பதில் சொல்லுங்க பாப்போம்!

image

ரொம்ப நேரம் நியூஸ் படிச்சி டயர்டான உங்க மூளைக்கு கொஞ்சம் வேலை கொடுப்போம் வாங்க. மேலே உள்ள படத்தை பாருங்க. 6-க்கும், 3-க்கும் இடையில் என்ன நம்பர் வரும் என்று கரெக்ட்டா சொல்லுங்க. பாக்க கஷ்டமா இருந்தாலும், இது ரொம்ப ஈசி. மற்ற நம்பர்களை பாருங்க. உங்களுக்கு பதில் தெரியும். பார்ப்போம் எத்தனை பேர் கரெக்ட்டா பதில் சொல்றீங்க என.

News August 16, 2025

அமலாக்கத்துறையிடம் ஐ.பி., சொன்ன விஷயம்..

image

திமுகவின் சீனியர் அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு சொந்தமான இடங்களில் காலை முதல் ED ரெய்டு நடந்து வருகிறது. வீட்டிற்கு வந்த அதிகாரிகளிடம் ஐ.பி., பேசிய விஷயம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ”இந்த ரெய்டு எதிர்பார்த்ததுதான். தென்மண்டலத்தில் திமுக வலிமையாக இருக்கிறது. தேர்தல் வேலையை முடக்கவே இந்த ரெய்டு. முடங்கி போகமாட்டேன். என்ன செய்யணுமோ செய்யுங்க” என அதிகாரிகளிடம் ஐ.பி., கூறியுள்ளதாக தகவல்.

News August 16, 2025

மகனை திருமணம் செய்த அம்மா.. வெளிநாட்டு விநோதம்!

image

வாழ்க்கையில் தர்ம சங்கடமான சூழலை சந்தித்தேன் என சிலர் சொல்லுவார்கள். இதை படித்தால் இதைவிட தர்மசங்கடமான சூழல் எதுவும் இல்லை என்பது உங்களுக்கு புரியும். வெளிநாட்டில் ஏழ்மை காரணமாக தத்து கொடுத்த மகனை அடையாளம் தெரியாமல் பெண் ஒருவர் காதலித்து திருமணம் செய்ததோடு 2 குழந்தைகளை பெற்றுள்ளார். தற்போது DNA சோதனையில், அந்த இளைஞர் தனது மகன் என்பதை அறிந்த அவர் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். So Sad..!

News August 16, 2025

USA வரிவிதிப்பால் தமிழகத்திற்கே அதிக பாதிப்பு

image

USA-வையே அதிகளவில் தமிழக தொழில்துறை சார்ந்திருப்பதால், USA-வின் அதிக வரிவிதிப்பால், மற்ற மாநிலங்களை விட தமிழகத்திற்கே அதிக பாதிப்பு என CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக PM மோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், வர்த்தகத்தை மீட்டெடுக்க மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார். உற்பத்தி துறை நெருக்கடியில் உள்ளதால் லட்சக்கணக்கானோரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

News August 16, 2025

புடின் – டிரம்ப் சந்திப்பு.. இந்தியாவிற்கு நிம்மதி?

image

ரஷ்ய அதிபர் புடின் உடனான நேற்றைய சந்திப்புக்கு டிரம்ப் 10/10 ரேட்டிங் கொடுத்துள்ளார். ரஷ்ய கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கான வரி விதிப்பு குறித்து அடுத்த 2 – 3 வாரங்களில் முடிவெடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். புடின் உடனான பேச்சுவார்த்தைக்கு முன்னர் கடுமை காட்டிய டிரம்ப், தற்போது மென்மையை கடைபிடிப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இதனால், இந்தியா மீதான 50% வரியை குறைக்கலாம் எனவும் கருதுகின்றனர்.

News August 16, 2025

ED அதிகாரிகள் மீது வழக்கு பதிந்த TN போலீஸ்!

image

அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு தொடர்புடைய இடங்களில் அதிகாலை முதலே ED அதிரடி சோதனை நடத்தி வருகிறது. அந்த வகையில், சேப்பாக்கம் MLA-க்கள் விடுதியில் உள்ள ஐ.பெரியசாமியின் அறையில் 10 பேர் கொண்ட அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதனிடையே, MLA-க்கள் விடுதியில் அத்துமீறி நுழைந்ததாக சட்டமன்ற செயலாளர் சீனிவாசன் அளித்த புகாரின் பேரில் ED அதிகாரிகள் மீது திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

News August 16, 2025

லோகேஷின் பெஸ்ட் படம் எது.. Worst படம் எது?

image

யுனிவர்ஸ் கான்செப்ட், அசத்தலான ஸ்கிரீன்பிளே, பயங்கரமான ஹீரோ பில்டப் என தனி பார்முலாவை உருவாக்கி மோஸ்ட் வான்டட் இயக்குநராக இருக்கிறார் லோகேஷ் கனகராஜ். அவரின் இயக்கத்தில் ‘கூலி’ வெளிவந்து 2 நாள்கள் கடந்து விட்ட நிலையில், படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. பலரும் இந்த படம் தங்களை பெரிதாக ஈர்க்கவில்லை எனவும் கூறுகின்றனர். நீங்க சொல்லுங்க லோகேஷ் இயக்கிய பெஸ்ட் படம் எது.. Worst படம் எது?

News August 16, 2025

மோடி, ED எதற்கும் அஞ்ச மாட்டோம்: RS பாரதி

image

வாக்கு திருட்டு விவகாரத்தை மடைமாற்றம் செய்யவே எதிர்கட்சியினர் மீது BJP அரசு ED-யை ஏவி விட்டுள்ளதாக RS பாரதி குற்றஞ்சாட்டியுள்ளார். பாஜகவின் வாசிங் மெஷினில் கழுவி, வழக்குகளை வாபஸ் பெற திமுகவினர் கோழைகள் இல்லை எனவும் மோடி, ED எதற்கும் அஞ்ச மாட்டோம் எனவும் அறிக்கை வெளியிட்டுள்ளார். <<17422112>>அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு<<>> சொந்தமான இடங்களில் ED சோதனை நடந்து வரும் நிலையில், திமுகவினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

error: Content is protected !!