News March 23, 2025

கனவு தொல்லை இருக்கா? அப்போ இத செய்யுங்க..

image

மனிதன் நிம்மதியாக இருப்பதே தூக்கத்தில்தான். ஆனால் அந்த தூக்கத்தை கெடுக்கும் அளவுக்கு கனவுகள் வருவது வழக்கம். மன அழுத்தம் மற்றும் கவலைகள், இரவில் அதிக கனவுகளை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். தூக்கத்திற்கு முன் மொபைல் போன், டிவி பார்ப்பதாலும் கனவுகள் அதிகமாக வருமாம். யோகா, தியானம் செய்வதால் மன அழுத்தம் குறைந்து கனவு தொல்லை இருக்காதாம்.. உங்களுக்கு அடிக்கடி என்ன கனவு வரும்?

News March 23, 2025

ராசி பலன்கள் (23.03.2025)

image

➤மேஷம் – வரவு ➤ரிஷபம் – தாமதம் ➤மிதுனம் – செலவு ➤கடகம் – ஆதரவு ➤சிம்மம் – முயற்சி ➤கன்னி – வெற்றி ➤துலாம் – மேன்மை ➤விருச்சிகம் – நன்மை ➤தனுசு – அசதி ➤மகரம் – தெளிவு➤கும்பம் – சிந்தனை ➤மீனம் – நேர்மை.

News March 23, 2025

சுனிதா வில்லியம்ஸ் தெரியும், புட்ச் வில்மோர் தெரியுமா?

image

278 நாட்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) தங்கியிருந்த சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் பூமி திரும்பினர். இதில் சுனிதா வில்லியம்ஸ் பற்றி தெரியும். புட்ச் வில்மோர் குறித்து தெரிய வாய்ப்பில்லை. அவரும் நாசா விண்வெளி வீரரே. கடந்த 2009, 2014, 2024இல் தலா ஒருமுறை ISS சென்றுள்ளார். மொத்தம் 464 நாட்கள் அங்கு தங்கியுள்ளார். ISS-க்கு வெளியே பழுது பார்ப்பு பணியை 31 மணி நேரம் அவர் செய்துள்ளார்.

News March 23, 2025

சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ் நாளை மோதல்

image

நாளைய ஐபிஎல் போட்டியில் 2 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. ஹைதராபாத்தில் மதியம் 3.30 மணிக்கு நடைபெறும் முதல் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதவுள்ளன. சென்னையில் இரவு 7.30 மணிக்கு நடக்கும் போட்டியில் சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ் பலப்பரீட்சையில் ஈடுபடவுள்ளன. இந்த 2 போட்டிகளையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் குழும சேனல்கள், ஜியோ ஹாட்ஸ்டார் செயலியில் நேரலையில் காண முடியும்.

News March 23, 2025

தமிழ்நாட்டின் வாதமே தவறானது: நிர்மலா சீதாராமன்

image

தமிழகம் மத்திய அரசுக்கு அதிக வரி தருகிறது, மத்திய அரசு தமிழகத்துக்கு என்ன தருகிறது என்ற வாதமே தவறானது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். சென்னையில் பட்ஜெட் விளக்க கூட்டத்தில் பேசிய அவர், மத்திய அரசு நிதி தருவதில் எவ்வித பாரபட்சமும் காட்டவில்லை என்றார். தமிழ்நாட்டில் எவ்வளவோ செய்வதற்கு இருந்தாலும் மும்மொழிக் கொள்கை, தொகுதி மறுவரையறை என சிலர் திசை திருப்புவதாகவும் அவர் சாடியுள்ளார்.

News March 23, 2025

காதலி வேண்டாம் ரோபோ போதும்… சீனாவில் விநோதம்!

image

சீனாவைச் சேர்ந்த இன்ஸ்டாகிராம் பிரபலமான ஜாங் ஜென்யுவான், தனது வீட்டு வேலைகளை செய்ய ரோபோவை வாடகைக்கு எடுத்துள்ளார். அதற்கு ஒரு நாள் வாடகை ரூ.1.15 லட்சமாம். சமைப்பது, வீட்டை சுத்தம் செய்வது மட்டுமின்றி ரோபோவுடன் ஜாங் டேட்டிங்கும் செய்கிறாராம். இப்போது எனக்கு காதலி கூட தேவையில்லை என அவர் வேடிக்கையாக கூறுகிறார்.

News March 23, 2025

மாநிலங்களவை MP தேர்தல்: சாதிக்குமா அதிமுக? (1/2)

image

தற்போதைய MLA-க்கள் எண்ணிக்கை அடிப்படையில் திமுகவால் மாநிலங்களவைக்கு 4 MP-க்களை தேர்வு செய்து அனுப்ப முடியும். ஆனால் அதிமுகவால் 2 MP-க்களை அனுப்ப முடியுமா என்றால் கேள்விக்குறியே. ஏனெனில் மாநிலங்களவை MP-யை தேர்வு செய்ய தலா 34 MLA-க்கள் என 68 MLA-க்கள் ஆதரவு தேவை. அதிமுக தரப்பில் 65 MLA-க்களே உள்ளனர். இதனால் ஒருவரை மட்டுமே தேர்வு செய்ய முடியும். இன்னொருவரை தேர்வு செய்ய முடியாது.

News March 23, 2025

மாநிலங்களவை MP தேர்தல்: சாதிக்குமா அதிமுக? (2/2)

image

பாமகவிடம் 5 MLA-க்கள், பாஜகவிடம் 4 MLA-க்கள் உள்ளனர். இந்த 2 கட்சிகளில் ஏதேனும் ஒரு கட்சி ஆதரவு அளித்தால் 2ஆவது MP-யை அதிமுகவால் மாநிலங்களவைக்கு அனுப்ப முடியும். இதில் பாஜகவிடம் ஆதரவு கோரினால், 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி சேர வேண்டியிருக்கும். பாமகவிடம் ஆதரவு கோரினால், MP பதவியை அக்கட்சிக்கு கொடுக்க வேண்டியிருக்கும். அதிமுக என்ன செய்ய போகிறது? பொறுத்திருந்து பார்ப்போம்.

News March 22, 2025

யஷ் நடிக்கும் புது படத்துக்கு தேதி குறிச்சாச்சு!

image

கேஜிஃஎப் படம் மூலம் கன்னட சினிமாவை இந்திய அளவில் திரும்பிப் பார்க்க வைத்தவர் யஷ். அவரது நடிப்பில் கேஜிஃஎப் 2 படமும் வெளியாகி ரூ.1,000 கோடிக்கு மேல் வசூலித்தது. தற்போது, அவர் டாக்ஸிக் என பெயரிடப்பட்ட படத்தில் நடித்து வருகிறார். யஷ்ஷின் 19வது படமான இது, அடுத்தாண்டு மார்ச் 19ல் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. நயன்தாரா, கியாரா அத்வானி உள்ளிட்டோர் டாக்ஸிக் படத்தில் நடித்து வருகின்றனர்.

News March 22, 2025

எந்த blood group-க்கு ஹார்ட் அட்டாக் வர வாய்ப்பு அதிகம்

image

மருத்துவ புள்ளிவிவர ஆய்வின் அடிப்படையில்: *AB ரத்தம் கொண்டவர்களுக்கு ஸ்ட்ரோக் வரும் வாய்ப்பு அதிகம், நினைவாற்றல் பிரச்சனைகள் வரலாம் *A, B இரண்டு குரூப்புக்கும் டைப்-2 நீரிழிவு வாய்ப்பு அதிகம். *A மன அழுத்தம், வயிறு புற்றுநோய் வாய்ப்பு அதிகம். *A, AB, B இதய நோய், கணைய புற்றுநோய் வாய்ப்பு அதிகம். * O நீண்ட ஆயுளுக்கு வாய்ப்பு. மற்ற குரூப்களுடன் ஒப்பிட்டால் இவர்களுக்கு நோய் தாக்க வாய்ப்பு குறைவு.

error: Content is protected !!