News March 21, 2025

அடுத்த 6 நாட்கள் மழை பெய்யக் கூடும்: வானிலை ஆய்வு மையம்

image

தென்தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று முதல் மார்ச் 26 வரை தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்காலில் சில பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என முன்னறிவித்துள்ளது.

News March 21, 2025

அமெரிக்காவில் கல்வித் துறையை மூடிய டிரம்ப்

image

அமெரிக்காவில் கல்வித் துறையை மூடுவதற்கான உத்தரவில் அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். அரசின் செலவினங்களை குறைக்கும் வகையில் அவர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார். அதே நேரம் மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான நிதியுதவி, மானியம் உள்ளிட்ட சலுகைகள் தொடரும் என அவர் அறிவித்துள்ளார். இந்த புதிய உத்தரவு மூலம் கல்வித் துறையை நிர்வகிக்கும் பொறுப்பு இனி அந்தந்த மாகாண அரசுகளிடமே ஒப்படைக்கப்படும்.

News March 21, 2025

திமுக கூட்டணியில் இருந்து வெளியேறும் வேல்முருகன்?

image

2021 தேர்தலில் தவாக தலைவர் வேல்முருகன், திமுக கூட்டணியில் MLAஆக தேர்வானார். ஆனால், சமீபகாலமாக அவரின் செயல்பாடு மீது திமுகவுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது. கடந்த மாதம் திமுகவில் இருந்து விலகி புதிய கூட்டணி அமைப்பேன் என கூறியிருந்த நிலையில், நேற்று திமுக – வேல்முருகன் இடையிலான மோதல் உச்சகட்டத்தை எட்டியது. இதனால், வரும் தேர்தலில் திமுக கூட்டணியில் தவாக இருக்காது என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

News March 21, 2025

தமிழக MPக்கள் சஸ்பெண்ட்? இன்று முடிவு

image

விதிமுறைகளை மீறியதாக திமுக MPக்கள் 10 பேரை இடைநீக்கம் செய்வது தொடர்பாக இன்று முடிவு எடுக்கப்பட உள்ளது. தொகுதி மறுவரையறை தொடர்பான கண்டன வாசகங்கள் அடங்கிய டீ-சர்ட்டை அணிந்துகொண்டு திமுக எம்.பி.க்கள் நாடாளுமன்றம் சென்றிருந்தனர். உடை காரணமாக அவைக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், அவர்கள் மீதான நடவடிக்கை குறித்து மாநிலங்களவைச் செயலகம் இன்று முடிவெடுக்கவுள்ளது.

News March 21, 2025

இந்த 5 பழக்கங்கள்: வீட்டில் பணம் தங்கவே தங்காது

image

வீட்டில் பணம் தங்காததற்கு, நாம் கடைப்பிடிக்கும் சில பழக்கங்களே காரணம் என்கிறது வாஸ்து சாஸ்திரம். 1) வீட்டில் பிளாஸ்டிக் டப்பாவில் உப்பு வைக்கக் கூடாது; கண்ணாடி ஜாடியில்தான் வைக்க வேண்டும். 2) கடவுளுக்கு உணவு படைப்பதற்கு முன்பு அதை ருசிக்கக் கூடாது. 3) மாலையில் விளக்கேற்றவே கூடாது. 4) இரவு முழுவதும் எச்சில் தட்டுகள் கழுவப்படாமல் இருக்கக் கூடாது. 5) பால், தயிரை இரவில் திறந்து வைக்கக் கூடாது.

News March 21, 2025

திமுக அரசுக்கு புதிய நெருக்கடி!

image

நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பை நிச்சயம் நடத்தி காட்டுவோம் என ராகுல் பேசியுள்ளது திமுக அரசுக்குத் தலைவலியைத் தந்துள்ளது. தெலங்கானா மாநில அரசு செய்ததை ஏன் தமிழக அரசு செய்யத் தயங்குகிறது என அன்புமணி, சீமான் உள்ளிட்டோர் வினவுகின்றனர். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த யாருக்கு அதிகாரம் என்ற விவாதம் பேரவையிலும் நேற்று வெடித்தது. இதை எப்படி கையாள்வது என திமுக தலைமை ஆலோசித்து வருகிறதாம். உங்கள் கருத்து என்ன?

News March 21, 2025

ஒரு லட்சம் அட்மிஷனை கடந்தது

image

தமிழக அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை 1 லட்சத்தை கடந்துள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. மார்ச் 1ஆம் தேதி தொடங்கிய மாணவர் சேர்க்கை தற்போதுவரை 14 வேலை நாட்களைக் கடந்துள்ளது. இதில், நேற்று ஒரே நாளில் 8,000க்கும் அதிகமான மாணவர்களை பெற்றோர்கள் அரசுப் பள்ளிகளில் சேர்த்துள்ளனர். நடப்பாண்டில் 5 லட்சம் மாணவர்களை அரசுப் பள்ளிகளில் சேர்க்க தமிழக அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

News March 21, 2025

கிழங்குகளும்… பயன்களும்…

image

*மரவள்ளிக் கிழங்கு – இதயத் துடிப்பை சீராக வைக்கும்.
*சேப்பக்கிழங்கு – உடல் வெப்பத்தை தணிக்க உதவும்.
கருணை கிழங்கு – இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவும்.
*சர்க்கரைவள்ளிக் கிழங்கு – சரும பாதுகாப்புக்கு பயனுள்ளது.
*உருளைக் கிழங்கு – நார்சத்தை அதிகரிக்கும்.
*பனங்கிழங்கு – செரிமானப் பிரச்னைகளை சரிசெய்ய உதவும்.

News March 21, 2025

மார்ச் 21: வரலாற்றில் இன்று!

image

*1984 – மணலாறு பிரதேசத்தைத் தடைவலயமாக்கிய இலங்கை அரசு, அங்கு வாழ்ந்து வந்த தமிழர்களை அடித்து விரட்டினர்.
*2006 – X (ட்விட்டர்) சமூக வலைதளம் உருவாக்கப்பட்டது.
சிறப்பு நாள்:
உலக பொம்மலாட்ட தினம்.
உலக கவிதைகள் தினம்.
உலக காடுகள் தினம்.
சர்வதேச இனப்பாகுபாடு நிராகரிப்பு தினம்.

News March 21, 2025

நெதர்லாந்துக்கு இந்தியா கோரிக்கை

image

பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் வழங்குவதை நிறுத்த வேண்டும் என நெதர்லாந்துக்கு இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது. PAKக்கு அதிகளவில் கடற்படை சார் தளவாடங்களை நெதர்லாந்து வழங்கி வருகிறது. அதுமட்டுமின்றி கன்னிவெடி தகர்ப்பு கப்பல்கள், கடலோர ரோந்து கப்பல்களையும் அந்நாடு வழங்குகிறது. மேலும் சீனா, துருக்கிக்கு அடுத்தபடியாக PAKக்கு அதிக ஆயுதங்கள் ஏற்றுமதி செய்யும் நாடாக நெதர்லாந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!