News March 20, 2025

நாங்கள் அடிமைகள் அல்ல ராஜதந்திரிகள்: கே.பி.முனுசாமி

image

தமிழகத்தின் ஆட்சி அதிகாரம் ஸ்டாலின் கையில் இல்லை, பல பேரின் கையில் உள்ளதாக அதிமுக துணைப் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி விமர்சித்துள்ளார். திமுகவினர் தங்களை பாஜகவின் அடிமைகள் என கூறுவதாகவும், ஆனால் தாங்கள் அடிமைகள் இல்லை, ராஜதந்திரிகள் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், ஒரு மாநில முதல்வரால், மத்திய அரசிடம் இருந்து நிதியைக் கூட வாங்கித் தர முடியவில்லை எனவும் ஸ்டாலினை சாடியுள்ளார்.

News March 20, 2025

அதிமுக நிர்வாகிக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை!

image

கொலை முயற்சி வழக்கில் அதிமுக நிர்வாகி நடராஜனுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் தெற்கு ஒன்றிய பொறுப்பாளரான நடராஜன் 2021இல் ஊர்குளத்தை ஏலம் எடுப்பதில் ஏற்பட்ட பிரச்னையில் வீரையன் என்பவரைத் தாக்கியுள்ளார். இதனால் அவர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கில், திருவாரூர் கோர்ட், நடராஜனுக்கு 5 ஆண்டுகள் சிறை, ₹6,000 அபராதம் விதித்துள்ளது.

News March 20, 2025

இன்று IPL கேப்டன்கள் கூட்டம்.. வரப்போகும் முக்கிய மாற்றம்?

image

IPL அணிகளின் கேப்டன்கள் கூட்டம் இன்று நடைபெற உள்ளது. இதில் விதிகளில் ஒரு முக்கிய மாற்றம் செய்வது பற்றி விவாதிக்கப்பட உள்ளது. பந்து மீது எச்சிலைப் பயன்படுத்துவதற்கான தடையை நீக்குவது குறித்து இன்றைய கூட்டத்தில் பரிசீலிக்கப்பட உள்ளது. எச்சிலைப் பயன்படுத்தினால், வேகப்பந்து வீச்சாளர்கள் எளிதாக ரிவர்ஸ் ஸ்விங் செய்ய முடியும். கொரோனா பரவல் காலங்களில் இந்த முறைக்கு ICC தடைவிதித்தது.

News March 20, 2025

அரசுக் கல்லூரிகளில் 2வது ஷிப்ட் அறிமுகம்

image

TNல் அரசு கலை & அறிவியல் கல்லூரிகளில் படிக்க அதிகளவில் மாணவர்கள் விண்ணப்பிக்கின்றனர். அதில், 100 இடங்கள் மட்டுமே உள்ள சில படிப்புகளுக்கு 2,000 மாணவர்கள் விண்ணப்பிக்கின்றனர். அதுபோன்ற பாடங்களுக்கு இந்தாண்டு முதல் 15,000 மாணவர்களை கூடுதலாக சேர்க்கும் வகையில், 2ம் ஷிப்ட் முறை அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதற்கான கட்டமைப்புகளை ஏற்படுத்தி, ஆசிரியர்களை கூடுதலாக்கவும் அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

News March 20, 2025

நடிகர் வடிவேலுவுக்கு காத்திருந்த அதிர்ச்சி

image

மதுரை திருப்புவனம் அருகே நடிகர் வடிவேலுவுக்கு சொந்தமான இடத்தில் பேரூராட்சி நிர்வாகம் கடந்த 6 மாதங்களாக குப்பைகளை கொட்டி வருவதாக புகார் எழுந்துள்ளது. பழையூரில் வடிவேலுவுக்கு சொந்தமாக ஒரு ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தில் 6 மாதக் காலமாக அப்பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்படுகிறது. இதனால், நிலம் மாசடைவதாக அவரது உதவியாளர்கள் புகாரளித்தும், நடவடிக்கை இல்லை என குற்றஞ்சாட்டியுள்ளனர்.

News March 20, 2025

TNல் சட்டம் ஒழுங்கு மோசம்: ஓபிஎஸ் விமர்சனம்

image

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீரழிந்துவிட்டதாக, முன்னாள் CM ஓபிஎஸ் கடுமையாக விமர்சித்துள்ளார். சாலைகளில் மக்கள் நடமாட முடியாத அளவிற்கு சட்டம் ஒழுங்கு, மோசமாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். சமூக விரோத செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மக்களை வன்முறையில் இருந்து காப்பாற்ற வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

News March 20, 2025

புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை!

image

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மார்ச் 20) சவரனுக்கு ₹160 உயர்ந்துள்ளது. இதனால், வரலாறு காணாத புதிய உச்சமாக 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ₹8,310க்கும், சவரன் ₹66,480க்கும் விற்பனையாகிறது. அதேநேரம், வெள்ளி விலையில் எவ்வித மாற்றமுமின்றி ஒரு கிராம் ₹114க்கும், பார் வெள்ளி கிலோ ₹1,14,000க்கும் விற்பனையாகிறது.

News March 20, 2025

இசைஞானியை வாழ்த்திய இயக்குனர்கள்!

image

லண்டனில் சிம்பொனியை அரங்கேற்றிய இசைஞானி இளையராஜாவுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. பிரதமர் மோடியும், இளையராஜாவை அழைத்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்திருப்பதாக பாராட்டினார். நாடாளுமன்றத்திலும் அவருக்கு புகழ் சூட்டப்பட்டது. இந்நிலையில் இயக்குனர்கள் பி.வாசு, கே.எஸ்.ரவிகுமார், ஆர்.வி.உதயகுமார், பேரரசு ஆர்.கே.செல்வமணி உள்ளிட்டோர் இளையராஜாவை நேரில் சந்தித்து மாலை அணிவித்து வாழ்த்து கூறினர்.

News March 20, 2025

புகார்கள் அதிகரிப்பு: RBI அதிருப்தி

image

வங்கிகள் மீது புகார்கள் அதிகரித்து வருவதாக, ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா அதிருப்தி தெரிவித்துள்ளார். வங்கி சேவைகள் குறித்து சமூகவலைதளங்களில் வாடிக்கையாளர்கள், தங்களுக்கு ஏற்பட்ட சிரமங்களை புகாராக பதிவு செய்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். வங்கி அதிகாரிகள், நிர்வாகத்தினர் நினைத்தால் இதற்கு எளிதாகத் தீர்வு காண முடியும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

News March 20, 2025

GBU வில்லன் இவரா?

image

‘குட் பேட் அக்லி’ படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் ரகுராம் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிவகார்த்திகேயன் நடித்த ‘டாக்டர்’ படத்தில், வில்லன் கும்பலைச் சேர்ந்த இரட்டையர்களில் ஒருவராக ரகுராம் நடித்திருப்பார். அந்த படத்தில் வரும் மெட்ரோ சண்டை காட்சியில் மாஸ் காட்டியிருப்பார். டெல்லியில் பிறந்த இவர் இந்தி, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு படங்களில் நடித்துள்ளார்.

error: Content is protected !!