India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஜப்பான், சீனா, வியட்நாம் ஆகிய நாடுகளில் கடைபிடிக்கப்படும் உயரிய தொழில்நுட்பங்களை அறிந்து கொள்ள 100 முன்னோடி விவசாயிகள், அந்நாடுகளுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். அங்குள்ள தொழில்நுட்பங்களை கண்டுணர்ந்து, தங்களது வயல்களில் அமல்படுத்த ஏதுவாக இந்த திட்டம் செயல்படுத்தப்படும். இதற்காக ₹2 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
நத்தம் புளி, நல்லூர் வரகு, ஆயக்குடி கொய்யா, வேதாரண்யம் முல்லை, கப்பல்பட்டி கரும்பு முருங்கை ஆகிய 5 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இதுவரை 35 விளை பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நகரங்கள், கிராமப்புற மக்களின் ஊட்டச்சத்துகளை பாதுகாக்க 9 லட்சம் குடும்பங்களுக்கு 75% மானியத்தில் எலுமிச்சை, கொய்யா செடிகளின் தொகுப்பு வழங்கப்படும் என வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், *பாரம்பரிய காய்கறி சாகுபடியை ஊக்குவிக்க ₹2.40 கோடியில் சிறப்புத் திட்டம். *ரோஜா மலர் சாகுபடியை ஊக்குவிக்க ₹1 கோடி. *15 லட்சம் குடும்பங்களுக்கு காய்கறிகள் விதை தொகுப்பையும் அமைச்சர் அறிவித்துள்ளார்.
புரதச்சத்து நிறைந்த காளான் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இதற்காக ஊரகப் பகுதியில் 5 காளான் உற்பத்தி நிலையம் அமைக்கப்படும் என அறிவித்துள்ளார். ₹50 கோடியில் வேளாண் விளை பொருட்களுக்கான 100 மதிப்புக்கூட்டு மையங்கள் திறக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.
தமிழக வேளாண் பட்ஜெட்டில் மல்லி சாகுபடி குறித்த அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. அதன்படி, மொத்தம் 3,000 ஏக்கர் பரப்பில் 7,000 விவசாயிகள் பயன்பெறும் வகையில் மல்லி சாகுபடியை ஊக்குவிக்க சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, மதுரை மல்லி சாகுபடியை அதிகப்படுத்த சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தக்காளி, வெங்காயம், முருங்கை, கத்திரி, பச்சை மிளகாய், கீரை போன்ற முக்கிய காய்கறிகள் சாகுபடி பரப்பு 14,000 ஏக்கரில் விரிவாக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் காய்கறி தேவையை நிறைவு செய்யும் வகையில் 1200 ஏக்கரில் பந்தல் காய்கறி பரப்பு ஏற்படுத்தப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சபாநாயகர் அப்பாவுவை, செங்கோட்டையன் தனியே சந்தித்துள்ளார். பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், அதிமுக MLAக்களின் ஆலோசனை கூட்டத்தை செங்கோட்டையன் புறக்கணித்திருந்தார். இதனால், இபிஎஸ் தலைமை மீது அவர் மிகுந்த அதிருப்தியில் இருப்பதாக பேசப்பட்டது. மேலும், செங்கோட்டையன் தர்மயுத்தத்திற்கு தயாராகிறாரா? என்ற விமர்சனங்களும் எழுந்தன. இந்த சூழலில் அவரது நகர்வு, அதிமுகவில் சலசலப்பை அதிகரித்துள்ளது.
கரும்பு உற்பத்தியை அதிகரிக்கும் வகையிலான திட்டங்களுக்காக ₹10.53 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கரும்புக்கு டன்னுக்கு ₹349 சிறப்பு ஊக்கத் தொகை வழங்கப்படும் என்றும் இதன் மூலம் ஒரு டன் கரும்புக்கு ₹3,500 வரை விவசாயிகளுக்கு கிடைக்கும். இதற்காக ₹297 கோடி ஒதுக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் எம்ஆர்கே. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
* பருத்தி உற்பத்தியை அதிகரிக்க ₹12 கோடியில் பருத்தி சாகுபடி திட்டம் * 1 லட்சம் ஏக்கரில் ₹12 கோடியில் மாற்றுப்பயிர் சாகுபடி திட்டம் * ₹15 கோடியில் 7 அரசு விதை சுத்திகரிப்பு நிலையம் * ₹146 கோடி செலவில் இந்த ஆண்டும் ‘முதலமைச்சரின் மன்னுயிர் காப்போம் திட்டம்’ * ₹269 கோடியில் கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சித்திட்டம் 2,335 ஊராட்சியில் செயல்படுத்தப்படும் என, அமைச்சர் அறிவித்துள்ளார்.
அதிக விளைச்சலைக் காட்டும் 3 விவசாயிகளுக்கு பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் பரிசாக ₹2.50 லட்சம், 2வது பரிசாக ₹1.50 லட்சம், 3வது பரிசாக ₹1 லட்சம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பட்டியலின விவசாயிகளுக்கு வழங்கப்படும் மானியம் 60% முதல் 70% ஆக உயர்த்தப்படும் எனவும் வேளாண் பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.