India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனாக ஆல் ரவுண்டர் அக்ஷர் பட்டேல் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு கேப்டனாக இருந்த ரிஷப் பண்ட், தற்போது லக்னோ அணிக்காக விளையாட உள்ளார். டெல்லி அணியின் கேப்டன் பதவிக்கு கே.எல்.ராகுலுடன் போட்டி நிலவிய நிலையில், அக்ஷருக்கு பதவி கிடைத்துள்ளது. CT தொடரிலேயே ராகுலின் 5ஆவது இடத்தில் அக்ஷர் விளையாடியது குறிப்பிடத்தக்கது. இந்த முறையாவது டெல்லி கோப்பையை வெல்லுமா?
அரசு ஊழியர்களுக்கான புதிய அறிவிப்பை பட்ஜெட்டில் அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ளார். அரசு ஊழியர்கள் குறைந்த வாடகை வீட்டில் தங்க நடவடிக்கை எடுக்கப்படும். வரும் நிதியாண்டில் 40,000 அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படும். மேலும், அரசு ஊழியர்களுக்கான EL சரண்டர் 15 நாள்களுக்கு பணமாக வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். இதன் மூலம் சுமார் 9 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பயன்பெறுவார்கள்.
நெடுஞ்சாலைத் துறைக்கு ₹20,772 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். கோவையில் 12.5 கிமீ நீளத்திற்கு புறவழிச்சாலை அமைக்க ₹348 கோடியும், நெல்லையில் 12.4 கிமீ நீளத்திற்கு அமைக்க ₹225 கோடியும் ஒதுக்கப்படுகிறது. அதே போல் நெடுஞ்சாலைகளை பசுமையாக்க வேம்பு, புளியமரக்கன்றுகள் நடப்படும் என்றும் பட்ஜெட்டில் அவர் தெரிவித்துள்ளார்.
விசைத்தறிகளை நவீனப்படுத்த ₹50 கோடி ஒதுக்கப்படும். உயர்மதிப்புடைய ஆடைகளை உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். கைத்தறித் துறைக்கு ₹1,980 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். அதேபோல, விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டத்திற்கு ₹673 கோடி ஒதுக்கப்படும் என பட்ஜெட்டில் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மிக அதிவேக ரயில்கள் இயக்கப்படும் என தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக, சென்னை – விழுப்புரம், சென்னை – வேலூர் இடையே மணிக்கு 160 கி.மீ. வேகத்திலான ரயில்கள் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். சென்னை மெட்ரோ ரயில் மூலமாக இத்திட்டத்திற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்படும் எனவும் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
பர்மிங்காமில் நடைபெற்று வரும் ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில், இந்தியாவின் லக்சயா சென் காலிறுதிக்கு முன்னேறினார். 2ஆது சுற்று ஆட்டம் ஒன்றில் அவர் இந்தோனேசியாவின் ஜோனதன் கிறிஸ்டியை எதிர்கொண்டார். தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய லக்சயா சென், 21-13, 21-10 என்ற நேர்செட்டில் கிறிஸ்டியை வீழ்த்தி கால் இறுதிக்கு முன்னேறினார்.
தமிழகத்தில் புதிய புனல் மின்நிலையங்கள் அமைக்க பட்ஜெட்டில் ₹11,721 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வெள்ளிமலையில் 1,100 மெகாவாட் திறன் கொண்ட புனல் மின்நிலையம் அமைக்கப்படுகிறது. அதேபோல, ஆழியாறு பகுதியிலும் 1,800 மெகாவாட் திறன் கொண்ட புனல் மின்நிலையம் அமைகிறது.
போக்குவரத்துக்குத் துறைக்கு ₹12,964 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். சென்னை- 905, கோவை- 75, மதுரை – 100 என மொத்தம் 1,125 மின்சாரப் பேருந்துகள் வாங்கப்படும். 700 டீசல் பேருந்துகளை இயற்கை எரிவாயு மூலம் (CNG) இயங்கும் பேருந்துகளாக மறுசீரமைக்க ₹70 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக கூறிய அவர், கிண்டியில் ₹50 கோடியில் பன்முக போக்குவரத்து முனையமும் அமைக்கப்படும் என்றார்.
பெற்றோரை இழந்த சுமார் 50 ஆயிரம் குழந்தைகளுக்கு 18 வயது வரை மாதம் ₹2,000 வழங்கப்படும் என்று பட்ஜெட்டில் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். இலங்கை சிறையில் உள்ள மீனவர்களின் குடும்பங்களுக்கான உதவித்தொகை ₹500ஆக உயர்த்தப்படும் என்றும், 10 மாற்றுத் திறனாளிகளை பணியில் அமர்த்தும் நிறுவனங்களுக்கு (ஒவ்வொரு ஊழியருக்கும்) ₹2,000 ஊதிய மானியத் தொகை வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
சிட்கோ மூலம் 9 புதிய தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும் என்றும், இதன் மூலம் 17,500 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் எனவும் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். காஞ்சிபுரம் – திருமுடிவாக்கம், மதுரை கருத்தபுளியம்பட்டி, விழுப்புரம் – சாரம், கரூர் – நாகம்பள்ளி, தஞ்சை – நடுவூர், திருச்சி – சூரியூர், நெல்லை – நரசிங்கநல்லூர், ராமநாதபுரம் – தனிச்சியம் ஆகிய இடங்களில் இந்த SIPCOT-கள் அமையவுள்ளன.
Sorry, no posts matched your criteria.