India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
JioHotstarல் ஒளிபரப்பப்பட்ட சாம்பியன்ஸ் டிராபி போட்டிகள் 540 கோடிக்கும் அதிகமான பார்வைகளை பெற்று சாதனை படைத்துள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. IND vs NZ இறுதிப்போட்டி மட்டும் 124.2 கோடி பார்வைகளை பெற்று, அதிகம் பேர் நேரலையில் பார்த்த கிரிக்கெட் போட்டியாக இது அமைந்துள்ளது. அத்துடன், ஹாட்ஸ்டாரில் ஒரே நாளில் அதிக எண்ணிக்கையிலான சந்தாதாரர்கள் இந்த போட்டியின் போது பதிவு செய்ததாகவும் தெரிவித்துள்ளது.
ஆரோக்யா பால் விலை லிட்டருக்கு ₹4ம், தயிர் விலை ₹3ம் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, நிறை கொழுப்பு பாலின் விலை லிட்டருக்கு ₹76ல் இருந்து ₹80ஆகவும், 400 கிராம் தயிரின் விலை ₹32இல் இருந்து ₹33ஆகவும் உயர்ந்துள்ளது. அத்துடன், பால், மோர் பாக்கெட் அளவுகளில் 125 ML, 120 ML ஆகவும், 180 ML, 160 ML ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வானது தமிழகம் முழுவதும் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
சுங்கச்சாவடிகள் நிரந்தரமானவை, அவை மூடப்படாது என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார். போட்ட முதலீடுகள் திரும்ப கிடைத்ததும், சுங்கச்சாவடிகள் மூடப்படுமா என மாநிலங்களவையில் திமுக MP வில்சன் கேள்வி எழுப்பினார். இதற்கு, தனியார் உதவியுடன் அமைக்கப்படும் சாலைகளில் ஒப்பந்த காலம் முடியும் வரை அந்நிறுவனங்கள் கட்டணத்தை வசூலிக்கலாம். பின் அரசு நேரடியாக வசூலிக்கும் என கட்கரி பதிலளித்தார்.
▶விதைத்தவன் உறங்கினாலும் விதைகள் ஒருபோதும் உறங்குவதில்லை. ▶கடந்த காலத்திற்கும் எதிர்காலத்திற்கும் இடையிலான மரண போராட்டம் தான் புரட்சி. ▶உன்னை அதிகம் விமர்சிப்பவனே உன்னை கண்டு அதிகம் பயப்படுகிறான். ▶ஒரு புரட்சியாளன் என்பவன் தனது இலட்சியத்தை ஒளிவு மறைவின்றி தனது பகைவர்களுக்கும் நண்பர்களுக்கும் தெரிவிக்க வேண்டும். ▶தடம் பார்த்து நடப்பவன் மனிதன்; தடம் பதித்து நடப்பவன் புரட்சியாளன்.
– பிடல் காஸ்ட்ரோ.
முதல்வர் மருந்தகங்களில் தட்டுப்பாடு இன்றி மருந்துகள் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அமைச்சர் பெரியகருப்பன் உத்தரவிட்டுள்ளார். மருந்தகங்களில் வாடிக்கையாளர்களை மரியாதையோடு நடத்துமாறும், கேட்கும் மருந்துகள் இல்லை என திருப்பி அனுப்பாமல் வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் அறிவுறுத்தியுள்ளார். தேவையான மருந்துகள் 48 மணி நேரத்துக்குள் சென்றடைகிறதா என்பதை கண்காணிக்குமாறும் கேட்டுக்கொண்டார்.
கெளதம் மேனன் இயக்கத்தில் கார்த்தி நடிக்க, புதிய படம் ஒன்று பேச்சுவார்த்தையில் இருக்கிறது. மம்மூட்டி நடித்த ‘டொமினிக் & தி லேடீஸ் பர்ஸ்’ படத்தை தொடர்ந்து புதிய கதை ஒன்றை, ஜெயமோகனுடன் இணைந்து கெளதம் எழுதி வருகிறார். அண்மையில் கார்த்தியை நேரில் சந்தித்த கெளதம், கதையை சொல்ல, அது கார்த்திக்கு பிடித்ததால் அடுத்தக்கட்ட பணிகளைத் தொடங்க சொன்னதாக கூறப்படுகிறது. கெளதம், கார்த்தி காம்போ எப்படி இருக்கும்?
உக்ரைன் – ரஷ்யா இடையிலான போரில், முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. 30 நாட்களுக்கு தற்காலிகமாக போரை நிறுத்த உக்ரைன் சம்மதம் தெரிவித்திருந்த நிலையில், தற்போது ரஷ்யாவும் உடன்பாடு தெரிவித்துள்ளது. போர் நிறுத்தம் குறித்து ரஷ்யாவுடன், அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், ரஷ்ய அதிபர் புதின் அதனை ஏற்றுக்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, புதின் சம்மதிப்பார் என டிரம்ப் கூறியிருந்தார்.
▶குறள் பால்: அறத்துப்பால் ▶அதிகாரம்: தீவினையச்சம் ▶குறள் எண்: 206 ▶குறள்: தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால தன்னை அடல்வேண்டா தான். ▶பொருள்: துன்பம் செய்யும் தீவினைகள் தன்னை வருத்துதலை விரும்பாதவன், தீயசெயல்களைத் தான் பிறருக்குச் செய்யாமலிருக்க வேண்டும்.
சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் T20 அரையிறுதி ஆட்டத்தில் IND அணி AUSயை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. முதலில் பேட்டிங் செய்த IND அணி, யுவராஜ் (59), சச்சின் (42) உதவியுடன் 20 ஓவரில் 220 ரன்கள் குவித்தது. தொடர்ந்து, களமிறங்கிய AUS அணி 126 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய பந்துவீச்சாளர்கள் நதீம்(4), வினய்(2), பதான்(2) ஆகியோர் வீக்கெட்டுகளை வீழ்த்தினர். இதன் மூலம் IND இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
இன்று (மார்ச் 14) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டுமே இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
Sorry, no posts matched your criteria.