News March 13, 2025

என்னய்யா இது சோதனை…!

image

சுனிதா வில்லியம்ஸை பூமிக்கு அழைத்து வரும் திட்டம் மீண்டும் தாமதமாகியுள்ளது. 9 மாதங்களுக்கு மேலாக ISSல் சிக்கியிருக்கும் சுனிதாவையும், வில்மோரையும் பூமிக்கு அழைத்து வர ஃபால்கன் 9 ராக்கெட்டை இன்று ஏவுவதாக இருந்தது. கடைசி நேரத்தில் ஹைட்ராலிக் சிஸ்டத்தில் கோளாறு ஏற்பட்டதால் விண்ணில் பாய்வது நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எல்லாம் சரியாக நடந்தால் வரும் 19 ஆம் தேதி சுனிதா பூமிக்கு திரும்புவார்.

News March 13, 2025

ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சம்

image

ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்து, ₹65 ஆயிரத்தை நெருங்கியதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹440 உயர்ந்து ₹64,960க்கும், கிராமுக்கு ₹55 உயர்ந்து ₹8,120க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், வெள்ளியின் விலை கிராமுக்கு ₹1 உயர்ந்து ₹110க்கும் விற்பனையாகிறது.

News March 13, 2025

தோனியின் க்ரேஸ்… தொடரும் CSKவின் ரெக்கார்ட் லிஸ்ட்!

image

இன்ஸ்டாவில் 17 மில்லியன் ஃபாலோவர்ஸை பெற்ற முதல் IPL அணி எனும் பெருமையை CSK பெற்றுள்ளது. இந்த க்ரேஸுக்கு முக்கிய காரணம், தோனி என்ற சகாப்தம் அணியில் இருப்பதுதான். அவரை, தொடர்ந்து விளையாட வைக்கவே இந்த ஆண்டின் IPL விதிகளும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வருடமும் சென்னை அணியின் மவுசு கூடுகிறதே தவிர, கொஞ்சமும் குறையவில்லை. வரும் 23 ஆம் தேதி CSK தனது முதல் போட்டியில் MI அணியை எதிர்கொள்கிறது.

News March 13, 2025

இந்தியா–மொரிஷியஸ் நெருக்கத்திற்கு என்ன காரணம்?

image

இந்தியா – மொரிஷியஸ் இடையே சுவாரஸ்யமான பந்தம் இருக்கிறது. அந்நாட்டின் மொத்த மக்கள்தொகையான 12 லட்சத்தில் 70% பேர் இந்திய வம்சாவளியினர். இது தான் அந்நாட்டுடன் இந்தியா நெருக்கமாக இருக்க முக்கிய காரணம். 2005 முதல் மொரிஷியஸின் மிகப் பெரிய வர்த்தக பார்ட்னராக விளங்குகிறது இந்தியா. இந்திய பெருங்கடலில் இரு நாட்டு இறையாண்மையை பாதுகாக்க வேண்டும் என்பதும் நெருக்கத்தை அதிகப்படுத்தியிருக்கிறது.

News March 13, 2025

எங்களுக்கு ஆலோசனை கூற உங்களுக்கு தகுதி இருக்கா?

image

தமிழ்நாட்டிற்கு ஆலோசனை வழங்க இவர்களுக்கு ( மத்திய பாஜக அமைச்சர்கள்) என்ன தகுதி இருக்கிறது என்று மனோ தங்கராஜ் கேள்வி எழுப்பியுள்ளார். 2024இல் நிதி ஆயோக் வெளியிட்ட கல்வித்திறன் பட்டியலில் தமிழ்நாடு 4ஆம் இடத்தில் உள்ளது. ஆனால், இந்த பட்டியலில் பிரதமர் மோடியின் குஜராத் 18வது இடத்திலும், யோகியின் உ.பி., 19வது இடத்திலும், தர்மேந்திர பிரதானின் ஒடிசா 27வது இடத்திலும் உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

News March 13, 2025

இன்று உலக சிறுநீரக தினம்: இனியாவது இதை கைவிடுங்கள்

image

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதத்தின் 2ஆவது வியாழன் உலக சிறுநீரக தினமாக கடைபிடிக்கப்படுகிறது. 2006 ஆம் ஆண்டில் இருந்து சிறுநீரகம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது. இன்றிலிருந்து சிறுநீரகத்தை பாதுகாக்க இந்த விஷயங்களை கைவிடுங்கள்: மது அருந்துதல், புகைப்பிடித்தல், பதப்படுத்தப்பட்ட உணவுகள், அளவுக்கு அதிகமாக இறைச்சி, நீர் அருந்தாமல் இருப்பது! SHARE IT.

News March 13, 2025

IPL தொடங்குவதற்கு முன்பே ரசிகர்களுக்கு காத்திருந்த ஷாக்!

image

இன்னும் 10 நாள்களில் IPL தொடங்கவுள்ளது. அணிகள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில், ராஜஸ்தான் அணியோ தற்போது தர்மசங்கடத்தில் உள்ளது. அந்த அணியின் தலைமைப்பயிற்சியாளர் டிராவிட்டின் இடது காலில் காயம் ஏற்பட்டு இருக்கிறது. இது அணிக்கு சற்று பின்னடைவான விஷயமே. இருப்பினும், அவர் அணி வீரர்களுக்கு பயிற்சி அளிக்க, அணியுடன் இணைந்துள்ளார். 2024 T20I WC வென்ற பிறகு, டிராவிட்டிற்கு பெரிய டிமாண்ட்!

News March 13, 2025

இந்திய பெருங்கடலில் இனி இந்தியாவே ராஜா! (1/2)

image

மொரிஷியஸ் சென்ற பிரதமர் மோடி, அங்கு நடந்த தேசிய தின கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். போர்ட் லூயிஸில் நடந்த விழாவில் இந்தியாவின் பலத்தை பறைசாற்றும் வகையிலான அணிவகுப்பும் நடந்தது. பின்னர் மொரிஷியஸ் பிரதமர் நவீன்சந்திராவுடன் நடந்த பேச்சுவார்த்தையில் இந்தியப் பெருங்கடலில் சீனாவின் ஆதிக்கத்தை முறியடிக்க மஹாசாகர் கொள்கையை கடைபிடிக்க இரு நாட்டுத் தலைவர்களும் ஒப்புக் கொண்டனர்.

News March 13, 2025

மொரிஷியஸூடன் 8 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து (2/2)

image

இந்தியா – மொரிஷியஸ் இடையே பரஸ்பரம் உள்ளூர் கரன்சியில் வர்த்தகம், கடல்சார் தகவல் பரிமாற்றம், சட்டவிரோத பணப்பரிமாற்ற தடுப்பு, குறு, சிறு, நடுத்தர தொழில் துறையை விரிவாக்குவது உள்ளிட்ட 8 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. மேலும், மொரிஷியஸில், இந்திய நிதி உதவியுடன் கடலுக்கு அடியில் பைப் லைன் அமைப்பது, ENT மருத்துவமனை கட்டுவது உள்ளிட்ட வளர்ச்சித் திட்டங்களும் நிறைவேற்றப்படவுள்ளன.

News March 13, 2025

BREAKING: சென்னையில் குடும்பமே தற்கொலை

image

சென்னை திருமங்கலத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரூ.5 கோடி கடன் தொல்லை காரணமாக, டாக்டர் பாலமுருகன், அவரது மனைவி, இரண்டு மகன்கள் தூக்கிட்டுத் தற்கொலை செய்துக் கொண்டுள்ளனர். 4 பேரின் உடலையும் மீட்டு, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!