News August 16, 2025

சிறுவயது வறுமை… மனம் திறந்த ஜாக்கி சான்

image

குழந்தை பருவத்தில், தன் குடும்பம் வறுமையில் சிக்கித் தவித்ததாக ஜாக்கி சான் மனம் திறந்து பேசியுள்ளார். என்னை 250 டாலருக்கு விற்க என் தந்தை தயாராக இருந்தார். ஆனால், நண்பர்கள் தடுத்ததால் நான் தப்பித்தேன். அதன்பின் 5 வயதில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க வந்து, சிறு சிறு வேடங்கள் நடித்து, 17 வயதில் ஸ்டண்ட் மேன் ஆனேன் என்றார் ஜாக்கி. இப்போது ஜாக்கி சான் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? ₹4,900 கோடி!

News August 15, 2025

டிரம்ப் – புடின் சந்திப்பு… என்ன நடக்கும்?

image

இன்னும் சற்று நேரத்தில் அலாஸ்காவில் டிரம்ப்- புடின் சந்திப்பு நடைபெற உள்ளது. இதில் உக்ரைன் போரை நிறுத்த உடன்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனால், பேச்சுவார்த்தைக்கு ரஷ்யாவை கொண்டு வருவதே இந்த சந்திப்பின் நோக்கம், உக்ரைனுக்காக பேசுவதல்ல என்று டிரம்ப் தெரிவித்துள்ளார். புடினோ, போரில் தான் பெற்றுள்ள வெற்றிகளை வைத்து பெரிய அளவில் பேரம் பேசும் முடிவுடன் உள்ளார். என்ன நடக்கும்? பொறுத்திருந்து பார்ப்போம்.

News August 15, 2025

அரசு நிகழ்வில் ராகுல் ஏன் பங்கேற்கவில்லை? பாஜக

image

சுதந்திர தின விழாவில் ராகுல் காந்தி, கார்கே பங்கேற்காததை பாஜக விமர்சித்துள்ளது. ராகுல் நலமாக இருக்கிறாரா என்பது குறித்து நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் எனவும், தேசிய நிகழ்வுகளுக்கு அவர் கொடுக்கும் முக்கியத்துவம் இதுதானா என்றும் கேள்வி எழுப்பியுள்ளது. நிகழ்வில் கலந்து கொள்ளாதது பற்றி இருவரும் இன்னும் விளக்கமளிக்கவில்லை. முன்னதாக காங்., அலுவலகத்தில் நடந்த நிகழ்வில் ராகுல் பங்கேற்றார்.

News August 15, 2025

பொதுத்தேர்வு ரத்துக்கு இதுவே காரணம்.. அமைச்சர் விளக்கம்

image

11-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வை ரத்து செய்தது ஏன் என அமைச்சர் அன்பில் மகேஸ் விளக்கம் அளித்துள்ளார். 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு 11-ம் வகுப்பு அடித்தளமாக இருக்க வேண்டுமே தவிர, மன அழுத்தத்தை கொடுக்கக் கூடாது எனத் தெரிவித்துள்ளார். 7 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக கல்வி திட்டம் மறுசீரமைப்பு செய்யப்படவுள்ளதாக தெரிவித்த அவர், பள்ளிகளில் ஹிந்தி திணிப்பை ஏற்க முடியாது என கூறியுள்ளார்.

News August 15, 2025

திமுகவில் இணைகிறாரா அதிமுகவின் தம்பிதுரை?

image

அன்வர் ராஜா, கார்த்திக் தொண்டைமான், மைத்ரேயன் என அடுத்தடுத்த அதிமுக தலைவர்கள் திமுகவில் இணைந்து வருகின்றனர். இந்த வரிசையில் தம்பிதுரையும் திமுகவில் சேரப் போவதாக, புகழேந்தி குண்டை தூக்கி போட்டுள்ளார். மேலும், பாஜகவுடன் இபிஎஸ் கூட்டணி வைத்திருப்பதால் அதிமுக நிர்வாகிகள் அதிருப்தியில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஏற்கெனவே தங்கமணி திமுகவில் இணைவதாக செய்தி பரவிய நிலையில், அதனை அவர் மறுத்தார்.

News August 15, 2025

தலைமுறைகள் கடந்து தாக்கம் ஏற்படுத்திய ரஜினி: PM வாழ்த்து

image

திரையுலகில் ரஜினி 50 ஆண்டுகளை நிறைவு செய்ததை PM மோடி வாழ்த்தியுள்ளார். திரைப்படங்களில் மாறுபட்ட வேடங்களில் நடித்து தலைமுறைகள் கடந்தும் ரஜினி மக்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும், அவரது திரைப்பயணம் சிறப்பு மிக்கதாக இருப்பதாகவும் PM மோடி தெரிவித்துள்ளார். மேலும், இனிவரும் காலங்களிலும் தொடர் வெற்றிகளை பெற்று, நல்ல ஆரோக்கியத்துடன் வாழவும் வாழ்த்தியுள்ளார்.

News August 15, 2025

உடலின் கழிவுகளை நீக்கும் லெமன் டீ

image

லெமன் டீ அருந்தும்போது *எலுமிச்சையில் உள்ள நுண்சத்துகள் அழற்சியை தடுத்து, நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் * இதிலுள்ள பொட்டாசியம், மக்னீசியம், துத்தநாகம், & தாமிர சத்துகள் மூளையை சுறுசுறுப்பாக்கி புத்துணர்வு தரும், மனஅழுத்தம் நீங்கவும் உதவும் *மெட்டபாலிசத்தை ஊக்குவிக்கிறது, கொழுப்பு சேர்வதை தடுக்கிறது, இதனால் எடை குறையும் *உடலின் நச்சுகள், கழிவுகளை நீக்குவதால் நோய்கள் தடுக்கப்படும். SHARE IT!

News August 15, 2025

திமுகவின் வரலாறு இப்படிதான்: அண்ணாமலை சாடல்

image

குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு பதவி கொடுத்து அழகு பார்ப்பதே திமுக வரலாறு என அண்ணாமலை சாடியுள்ளார். நாகர்கோவில் திமுக நிர்வாகி ராஜன், கோயிலுக்கு ஒதுக்கிய ஒன்றரை கோடி நிதியை சுருட்டி விட்டதாகவும், இது குறித்து DVAC-ல் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், சமூக விரோதிகளை வளர்த்துவிடும் திமுகவிற்கு மக்கள் விரைவில் பாடம் புகட்டுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

News August 15, 2025

INTERNET வந்து இன்றோடு 30 ஆண்டுகள் நிறைவு

image

3G, 4G, 5G எல்லாம் வந்தாச்சு… அடுத்து 6G எப்ப வரும்ணு காத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், 1995-ல் இதே நாளில், இந்தியாவில் பொதுமக்களுக்காக இணைய சேவை அறிமுகமான போது, அதன் வேகம் 9.6 kbps மட்டுமே (விவரங்களுக்கு படத்தை பார்க்க). VSNL தான் ஆரம்பத்தில் சேவை வழங்கியது. அதன்பின் தனியார் நிறுவனங்கள் நுழைய, இன்று 70 கோடிக்கும் மேற்பட்ட இந்தியர்கள் தினமும் இணையம் பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.

News August 15, 2025

மழை வெளுத்து வாங்கப் போகுது.. கவனமா இருங்க!

image

இன்று இரவு 10 மணி வரை வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், தி.மலை, நீலகிரி, கோவை, தேனி, தென்காசி ஆகிய 13 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என IMD கணித்துள்ளது. மேலும், வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் ஆக. 21-ம் தேதி வரை மழை நீடிக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால், நாளை வெளியே செல்பவர்கள் கவனமாக இருங்க நண்பர்களே!

error: Content is protected !!