India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
2025 WTC ஃபைனல், லண்டனில் வரும் ஜூன் 11ஆம் தேதி தொடங்க உள்ளது. இதில் AUS vs SA மோத உள்ளன. ஃபைனலில் IND விளையாடும் என்ற எதிர்பார்ப்பில், போட்டி நடைபெறும் லார்ட்ஸ் மைதான நிர்வாகம், டிக்கெட் விலையை 50 பவுண்ட் அளவுக்கு நிர்ணயித்து வைத்திருந்தது. இதன்மூலம், ₹45 கோடி வருமானம் ஈட்ட திட்டமிட்டிருந்தது. ஆனால், IND அணி ஃபைனலுக்கு முன்னேறாததால், டிக்கெட் விலையை வழக்கமான விலைக்கு விற்க முடிவு செய்துள்ளது.
2026 தேர்தலில் அதிமுக, பாஜக மீண்டும் கூட்டணி அமைக்கக்கூடும் என தகவல் வெளிவருகிறது. இதை உறுதி செய்வதுபோல, இபிஎஸ்சை பாஜக மூத்த தலைவர்கள் அண்மையில் சந்தித்துள்ளனர். இதை உற்றுநோக்கும் அரசியல் ஆர்வலர்கள், பாஜகவுடன் கைகோர்த்து செயல்படும் ஓபிஎஸ் கதி இனி என்னவாகும்? இபிஎஸ், ஓபிஎஸ், ஒரே கூட்டணியில் இணைவார்களா? இல்லை ஓபிஎஸ் தனித்து போட்டியிடுவாரா? எனக் கேள்வி எழுப்புகின்றனர். நீங்க என்ன நினைக்கிறீங்க?
<<15730975>>நடிகை செளந்தர்யா <<>>மரணம் தொடர்பாக எழுந்த சர்ச்சைக்கு அவரது கணவர் ரகு விளக்கம் அளித்துள்ளார். செளந்தர்யா மரணத்துக்கும், நடிகர் மோகன்பாபுவுக்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும், தங்கள் நிலத்தை அவர் அபகரிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். கடந்த 2004இல் செளந்தர்யா பயணித்த ஹெலிகாப்டர் நடுவானில் வெடித்து சிதறியதில் அவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் முதல்வர் அண்ணாதுரை உயிரோடு இருந்திருந்தால் மும்மொழிக் கொள்கையை ஆதரித்திருப்பார் என்று டிடிவி தினகரன் பேசியுள்ளார். ஹிந்தியை தீவிரமாக எதிர்த்து ஆட்சியதிகாரம் பெற்ற அண்ணா குறித்து டிடிவி இவ்வாறு பேசியிருப்பது இணையத்தில் விவாதத்தை கிளப்பியுள்ளது. திமுக, அதிமுக என இரு கட்சியினரும் டிடிவியை வசைபாடி வருகின்றனர். இவரது பேச்சு குறித்து உங்கள் கருத்து என்ன?
தனது 25ஆவது படமான ‘கிங்ஸ்டன்’ சரியாக போகவில்லை என ஜி.வி.பிரகாஷ் குமார் ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால் அதில் தனக்கு எந்த வருத்தமும் இல்லை எனவும், ஒரு படம் ஒர்க் அவுட் ஆகுமா இல்லையா, தனது இசை ஹிட்டாகுமா இல்லையா என்பதை யோசிக்காமல் கடினமாக உழைப்பதில் மட்டுமே கவனம் செலுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், தனது 20 ஆண்டுகால சினிமா அனுபவமும் தனக்கு இதைத்தான் கற்றுக்கொடுத்ததாக கூறியுள்ளார்.
மக்களை தற்போது பெரிதும் ஈர்க்காத சேனலாக இருக்கும் தூர்தர்ஷனை, மீண்டும் பிரபலமடைய வைக்க பிரசார் பாரதி முயன்று வருகிறது. அதற்காக, ஹிந்தி தொலைக்காட்சிகளில் முக்கிய தொகுப்பாளராக இருக்கும் சுதிர் சவுத்ரி என்பவருடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. மேலும், ₹14 கோடி செலவில் சேனலின் தரத்தை மேம்படுத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக தகவல் வெளிவந்துள்ளது. மீண்டும் எழுச்சி காணுமா டிடி சேனல்?
பாம்புகள் கடுமையான வாசனைக்கு மிகவும் பயப்படும் என விலங்கியல் துறை நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே, பாம்பு வீட்டிற்குள் நுழைந்தால் வினிகர் அல்லது மண்ணெண்ணெய் தெளிக்க அவர்கள் அறிவுறுத்துகின்றனர். கூடுதலாக பூண்டு, எலுமிச்சை, இலவங்கப்பட்டை, புதினா ஆகியவற்றை தூவினால் பாம்பு தானாகவே வெளியே ஓடிவிடும். அதேபோல், வெப்பநிலை மாற்றங்களுக்கும் அவை பயப்படும் என்பதால், புகையாலும் விரட்டலாம் என்கின்றனர்.
தமிழகத்தில் இரவு 7 மணி வரை நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திண்டுக்கல், தேனி, செங்கல்பட்டு, காஞ்சி, திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, நாமக்கல், கரூர் & கன்னியாகுமரி அகிய மாவட்டங்களில் இடி. மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று MET தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டுடன் ஒப்பிடும் போது வடமாநிலங்கள் 40 ஆண்டுகள் பின்தங்கியுள்ளதாக துரை வைகோ தெரிவித்துள்ளார். தேசிய கல்விக் கொள்கையில் தாங்கள் கோரும் சில மாற்றங்களைச் செய்தால், அதில் கையெழுத்திடுவதில் எந்த பிரச்னையும் இல்லை எனவும், ஆங்கிலம் படித்ததால் தான் தமிழர்கள் உலகம் முழுவதும் கோலோச்சி வருவதாகவும் அவர் கூறியுள்ளார். எனவே, தங்கள் குழந்தைகளுக்கு இரு மொழியே போதுமானது என தெரிவித்துள்ளார்.
சென்னையில் கார் வாங்குவோர் பெரும்பாலானோரின் வீடுகளில் பார்க்கிங் வசதி இல்லை. அவர்கள் தங்கள் கார்களை பொது இடங்களில் நிறுத்துவதால் போக்குவரத்துக்கு கடும் இடையூறு ஏற்படுகிறது. எனவே, கார் பார்க்கிங் இருந்தால் மட்டுமே கார் வாங்க அனுமதிக்க வேண்டும் என்ற பரிந்துரையை அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. எனவே, இனி கார் பார்க்கிங் சான்று இருந்தால்தான், கார் வாங்க முடியும் என்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.