News March 12, 2025

இனி கார் வாங்க பார்க்கிங் இடம் கட்டாயம்!

image

சென்னையில் கார் வாங்குவோர் பெரும்பாலானோரின் வீடுகளில் பார்க்கிங் வசதி இல்லை. அவர்கள் தங்கள் கார்களை பொது இடங்களில் நிறுத்துவதால் போக்குவரத்துக்கு கடும் இடையூறு ஏற்படுகிறது. எனவே, கார் பார்க்கிங் இருந்தால் மட்டுமே கார் வாங்க அனுமதிக்க வேண்டும் என்ற பரிந்துரையை அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. எனவே, இனி கார் பார்க்கிங் சான்று இருந்தால்தான், கார் வாங்க முடியும் என்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.

News March 12, 2025

நாடு கடத்த நோட்டீஸா? லலித் மோடி மறுப்பு

image

நாடு கடத்த நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக வெளியான செய்தியை ஐபிஎல் EX தலைவர் லலித் மோடி மறுத்துள்ளார். அவரின் வனுவாட்டு நாட்டின் குடியுரிமையை ரத்து செய்ய உத்தரவிட்டு இருப்பதை வைத்து, நாடு கடத்த IND நோட்டீஸ் பிறப்பித்திருப்பதாக செய்தி வெளியானது. இதை மறுத்த லலித், அதுவொரு பொய் செய்தி. 15 ஆண்டில் பலமுறை IND-வுடன் நாடு கடத்தும் ஒப்பந்தம் செய்துள்ள நாடுகளுக்கு சென்றுள்ளேன் எனக் கூறியுள்ளார்.

News March 12, 2025

செந்தில் பாலாஜிக்கு வலைவீசும் பாஜக?

image

டாஸ்மாக் தலைமையகம் உள்ளிட்ட இடங்களில் ED மீண்டும் சோதனை நடத்தியிருப்பது, தமிழகத்தில் பாஜகவின் அடுத்தக்கட்ட அரசியல் நகர்வாகப் பார்க்கப்படுகிறது. செந்தில் பாலாஜிக்கு நெருக்கடி அளித்து பாஜகவில் சேர்க்கும் முயற்சி இது என்றும், அப்படி பாஜகவில் அவர் சேர்ந்தால் மாநிலத் தலைவர் பதவி அளித்து, கொங்கு மண்டலத் தொகுதிகளை அவர் மூலம் 2026 தேர்தலில் வெல்வதே பாஜகவின் திட்டம் என்றும் கூறப்படுகிறது.

News March 12, 2025

2027 உலகக் கோப்பையே ரோஹித்தின் இலக்கு: பாண்டிங்

image

2027ம் ஆண்டு உலகக் கோப்பையில் விளையாட ரோஹித் ஷர்மா விரும்புவதாக ஆஸி., அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார். 2023இல் உலகக் கோப்பையில் IND தோல்வி அடைந்ததால், 2027இல் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற ஏக்கம் அவருக்கு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். T20 உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி, ODI உலகக் கோப்பையை தனது தலைமையில் வெல்ல வேண்டும் என்ற விருப்பம் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

News March 12, 2025

நேபாளத்தில் ட்ரெண்டாகும் யோகி ஆதித்யநாத்!

image

நேபாள் முன்னாள் அரசர் ஞானேந்திர ஷாவை வரவேற்க, முடியாட்சி ஆதரவு இயக்கம் (RPP), அந்நாட்டு தலைநகர் காத்மண்டுவில் பேரணி நடத்தியது. அதில், உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டது பேசுபொருளாகியுள்ளது. 2025 ஜனவரியில் முன்னாள் அரசர் ஷா, உ.பி வந்த போது யோகியை சந்தித்தார். ஆனால், RPPக்கு கெட்ட பெயரை உண்டாக்க ஆளும் அரசால் செய்யப்பட்ட சதி இது என RPP குற்றஞ்சாட்டியுள்ளது.

News March 12, 2025

விரைவில் வருகிறது ஸ்மார்ட் மீட்டர்கள்

image

3 கோடி புதிய ஸ்மார்ட் மீட்டர்கள் வாங்குவதற்கான டெண்டர் கோரி அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது தமிழக அரசு. மாநிலம் முழுவதும் 2026ஆம் ஆண்டுக்குள் ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்த மத்திய அரசு கெடு விதித்துள்ளது. இதனையடுத்து, ₹20,000 கோடி செலவில் 3 கோடி ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்த டெண்டர் கோரியுள்ளது தமிழக அரசு. இதன் மூலம் மின் கணக்கீட்டில் நடைபெறும் முறைகேடுகள் தடுக்கப்படும்.

News March 12, 2025

120 கோடியை நெருங்கும் செல்போன் பயனர்கள்

image

நாட்டில் செல்போன் பயனர்கள் எண்ணிக்கை 120 கோடியை நெருங்கியுள்ளது. கடந்த டிசம்பர் மாத செல்போன் பயனர்கள் எண்ணிக்கை நிலவரம் வெளியாகியுள்ளது. அதில் நாடு முழுவதும் மொத்தம் 118 கோடியே 99 லட்சம் பயனாளர்கள் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. இதில் ரிலையன்ஸ் ஜியோ பயனர்கள் எண்ணிக்கை 50.4%, ஏர்டெல் பயனர்கள் எண்ணிக்கை 30.6%, வோடாபோன் பயனர்கள் எண்ணிக்கை 13.4% எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 12, 2025

சுற்றுலாத்தலமாக மாறிய Deep Seek நிறுவனரின் கிராமம்

image

CHAT GPT உள்பட பல AI தொழில்நுட்பங்களை பின்னுக்குத் தள்ளி, சீனாவை சேர்ந்த Deep Seek செயலி பலரையும் ஆச்சரியப்படுத்தியது. அதன் தொடர்ச்சியாக செயலியை உருவாக்கிய லியாங் வென்ஃபெங் பிரபலம் அடைந்த நிலையில், தற்போது அவரின் சொந்த கிராமமான மிலிலிங் சுற்றுலாத்தலமாக மாறியுள்ளது. தினந்தோறும் நூற்றுக்கணக்கானோர் அங்கு செல்கின்றனர். நினைவு சின்னமாக, அங்கிருந்து கற்களை எடுத்துச் செல்கின்றனர்.

News March 12, 2025

ICC ODI பேட்டிங் தரவரிசை: இந்திய வீரர்களின் ஆதிக்கம்!

image

நடந்து முடிந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரை அடுத்து ICC வீரர்களுக்கான ODI தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில், சுப்மன் கில் முதல் இடத்தையும், கேப்டன் ரோஹித் 3வது இடத்தையும் பிடித்துள்ளனர். மேலும், கோலி 5வது இடத்தில், ஸ்ரேயாஸ் ஐயர் 8வது இடத்தில், கே.எல்.ராகுல் 16வது இடத்திலும் இருக்கின்றனர். ‘இந்த ஜெனரேஷனின் பெஸ்ட் பேட்டிங் அணி இதுதான்’ என பலரும் பாராட்டி வருகின்றனர்.

News March 12, 2025

மனைவியுடன் சண்டை… 450 கி.மீ நடந்து போன கணவர்!

image

இத்தாலியில் ஒரு தம்பதிக்கு பெரிய சண்டை வெடித்துள்ளது. தன்னை கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொள்ள ஒரு கணவர் வீட்டில் இருந்து வாக்கிங் கிளம்பி இருக்கிறார். புலம்பியபடியே நடந்தவர், 450 கி.மீ நடந்துவிட்டார். அது கொரோனா டைம் என்பதால், போலீஸ் அவரை தடுத்து நிறுத்தி, திருப்பி அனுப்பியுள்ளது. இல்லை’னா நாட்ட தாண்டி போயிருப்பார் போல. உங்க வீட்டில் மனைவியுடன் சண்டை வந்தால், நீங்க என்ன பண்ணுவீங்க!

error: Content is protected !!