India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தென்காசி பாஜக கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, திமுக அரசை கடுமையாக விமர்சித்தார். தமிழகத்தில் ஊழல் கறை படியாத இடமே இல்லை என்பதுதான் திமுக அரசு செய்த சாதனை என விமர்சித்த அவர், தீய சக்திகளின் கூடாரமாக தமிழகம் மாறிவிட்டதாகவும் குற்றம்சாட்டினார். டாஸ்மாக் மூலமாக ஆண்டுக்கு ரூ.50,000 கோடி கிடைத்தாலும், தமிழகத்தை ரூ.9.5 லட்சம் கோடி கடனில் வைத்திருப்பதுதான் ஸ்டாலினின் செயல்திறன் எனவும் அவர் சாடினார்.
கோவிட்டிற்கு பின் பணவீக்கம் கடுமையாக உயர்ந்ததால், ரெப்போ வட்டி விகிதத்தை RBI உயர்த்தியது. இதனால், வங்கிகளில் லோன் வாங்குவோர்/வாங்கியோர் அதிக வட்டி செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்நிலையில், தற்போது பணவீக்கம் 3.61 சதவீதமாக சரிந்துள்ளதால், RBI ரெப்போ வட்டியை குறைக்க அதிக வாய்ப்புள்ளது. ஆகையால், நீங்கள் வாங்கிய வீட்டுக்கடனின் வட்டியும் குறையும், இனி நீங்கள் வாங்கப் போகும் லோனின் வட்டியும் குறையும்
ஸ்ரீவைகுண்டத்தில் நேற்று முன்தினம் 11ஆம் வகுப்பு மாணவன் தேவேந்திரனை, ஒரு கும்பல் சரமாரியாக வெட்டியது. இந்த வழக்கில் 2 சிறார்கள் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மாணவன் படித்த பள்ளிக்கு தூத்துக்குடி ஆட்சியர் இளம் பகவத் இன்று சென்று ஆய்வு நடத்தினர். அப்போது பள்ளி சுவர்களில் சில சாதி அடையாளங்கள் வரையப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த ஆட்சியர், மாணவர்களை வைத்தே அதை அழிக்கச் செய்தார்.
மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. ஆனால் பங்குச்சந்தை முதலீடு கணிப்பு நிறுவனமான மோர்கன் ஸ்டான்லி, சென்செக்ஸ் 2025 டிச.க்குள் 1.05 லட்சத்தை தாண்டும் என கூறியுள்ளது. இது தற்போதைய நிலவரத்தை விட 41% அதிகம். இதேபோல், 2024 டிசம்பரிலும் அது கணித்திருந்தது. உலக அரசியல் சில நாடுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தினாலும், இந்தியாவுக்கு சாதகமாகவே இருக்குமெனவும் தெரிவித்துள்ளது.
IPLஇல் சேப்பாக்கத்தில் வரும் 23ஆம் தேதி நடக்கும் போட்டியில் மும்பை அணியுடன் சிஎஸ்கே மோதுகிறது. இப்போட்டிக்கான டிக்கெட் விற்பனை அதிகாரப்பூர்வமாக தொடங்காத போதிலும், சில இணையதளங்களில் மறைமுகமாக டிக்கெட் விற்பனை நடக்கிறது. இதில் குறைந்தபட்ச டிக்கெட் விலை ரூ.17,804 ஆகவும், அதிகபட்ச டிக்கெட் விலை ரூ.1.23 லட்சமாகவும் உள்ளது. நீங்கள் டிக்கெட் வாங்கி விட்டீர்களா? கமெண்ட் பண்ணுங்க.
இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மனைவியும், ராஜ்ய சபா எம்பியுமான சுதா மூர்த்தி, மும்மொழிக் கொள்கையை ஆதரித்து பேசியுள்ளார். தனக்கு 7 முதல் 8 மொழிகள் தெரியும் எனவும், அதனால் குழந்தைகள் பல மொழிகளை கற்பது அவர்களுக்கு மிகவும் பயன்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மும்மொழிக் கொள்கை விவகாரத்தில் மத்திய அரசு vs தமிழ்நாடு அரசு இடையேயான மோதல் முற்றி வரும் நிலையில், அவர் இப்படி கூறியுள்ளார்.
நாடு முழுவதும் SBI வங்கியின் UPI சேவைகள் முடங்கியதால் வாடிக்கையாளர்கள் அதிருப்தியடைந்துள்ளனர். இரு தினங்களுக்கு முன் இதேபோல வங்கி சேவைகள் முடங்கின. பின்னர், ஒரு மணி நேரத்திற்குப் பின் சுமூகமானது. அதேபோல, இன்று இரவு 7 மணி முதல் UPI சேவைகள் முடங்கியுள்ளன. நாட்டின் நம்பர் 1 பொதுத்துறை வங்கி இப்படி செயல்படலாமா என்று வாடிக்கையாளர்கள் விமர்சித்து வருகின்றனர். உங்களுக்கு சேவை கிடைக்கிறதா? கமெண்ட்.
டிஜிட்டல் அரெஸ்ட் மோசடிகளுக்கு காரணமான 83,668 வாட்ஸ்அப் கணக்குகளை மத்திய அரசு முடக்கியுள்ளது. மாநிலங்களவையில் திருச்சி சிவா (திமுக) எம்பி எழுப்பிய கேள்விக்கு, மத்திய உள்துறை இணையமைச்சர் சஞ்சய் பண்டி குமார் பதில் தாக்கல் செய்துள்ளார். அதில், டிஜிட்டல் அரெஸ்டுக்கு காரணமான 83,668 வாட்ஸ்அப் கணக்குகள், 3,962 ஸ்கைப் ஐடிக்கள் சைபர் க்ரைம் தடுப்பு மையத்தால் முடக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
தனுஷ் உடனான மோதல் காரணமாக, ‘வட சென்னை 2’ படத்தை வேறு இயக்குநர், வேறு நடிகரை வைத்து தயாரிக்க வெற்றிமாறன் முடிவு செய்துள்ளதாக பேச்சு அடிபடுகிறது. வெற்றிமாறனின் உதவி இயக்குநர் கார்த்திகேயன் இப்படத்தை இயக்க, மணிகண்டன் ஹீரோவாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ‘வட சென்னை’ எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அந்த நஷ்டத்தை ஈடுகட்ட, ‘அசுரன்’ படத்தை எடுக்க வெற்றிமாறனை தனுஷ் நிர்பந்தித்தாகவும் ஒரு பேச்சு உள்ளது.
பாஜகவில் தாம் சேரவில்லை என்று சரத்குமாரின் ஆதரவாளரும், சுரண்டை தொழிலதிபருமான எஸ்.வி. கணேசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். சமக-வை பாஜகவுடன் சரத்குமார் இணைத்ததில் உடன்பாடு இல்லை என்றும், தாம் எந்த கட்சியிலும் தற்போது இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். ஆனால் புளியங்குடியில் நடக்கும் பாஜக கூட்டத்தில் பங்கேற்போர் பெயர் பட்டியலில் தனது பெயரை அனுமதியின்றி போட்டதை கண்டிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.