India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழக பள்ளிகளில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான இறுதித் தேர்வு அட்டவணையை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, 1 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணாக்கர்களுக்கு இறுதித்தேர்வு ஏப்ரல் 1 முதல் 21 வரை நடைபெறவுள்ளது. 6 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணாக்கர்களுக்கு இறுதித்தேர்வு ஏப்ரல் 8 முதல் 24ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
திருவள்ளூரில் நடந்த நிகழ்ச்சியொன்றில் பேசிய முதல்வர் ஸ்டாலின் பாஜகவை கடுமையாக விமர்சித்துள்ளார். நாகரிகத்தை பற்றி பாஜக, நமக்கு பாடம் எடுக்கிறது. நாகரிகத்தை உலகுக்கே முதலில் சொல்லிக் கொடுத்தது தமிழர்கள்தான். அநாகரிகத்தின் அடையாளமே மத்திய அரசு பாஜக அரசுதான் என்பது நாட்டுக்கே தெரியும். எங்களிடமே வரி வசூலித்துவிட்டு எங்களுக்கே நிதி கொடுக்காமல் இருப்பதுதான் நாகரிகமா? என ஸ்டாலின் வினவினார்.
மோடி என்றால் வளர்ச்சி என பாஜகவினர் கூறுகிறார்களே, அப்படி என்ன இந்தியாவை அவர் வளர்த்துவிட்டார்? என ஸ்டாலின் கேள்வியெழுப்பினார். அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து வருவதுதான் வளர்ச்சியா? என வினவிய அவர், இந்திக்கு பதிலாக இந்தியாவை வளர்க்கும் வழியை பாருங்கள் என்றும் சாடினார். மேலும், உயிரே போனாலும் பாசிசத்துக்கு அடிபணிய மாட்டோம் எனவும் அவர் உறுதிப்பட தெரிவித்தார்.
லக்னோவில் கார் கண்ணாடி தானாக மூடியதால் ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரோஷன் என்பவர் புதிய காரை வாங்கி குடும்பத்தை கோயிலுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது, குழந்தை ஒன்று தலையை வெளியே நீட்டியிருக்க, டிரைவர் காரை ஆன் செய்துள்ளார். அப்போது, கண்ணாடி தானாக உயர்ந்ததால் குழந்தையின் கழுத்து சிக்கி பரிதாபமாக உயிரிழந்தது.
பெரியார், தமிழைக் காட்டுமிராண்டி மொழி எனச் சொன்னார் என்பதற்காக வருத்தப்படும் நிர்மலா சீதாராமன், மும்மொழிக் கொள்கையை திணிக்காமல் இருக்கலாமே என விஜய் கேள்வி எழுப்பியுள்ளார். பெரியாரைத் தமிழ்நாடு இன்றும் ஏன் போற்றுகிறது என்பதைச் சொல்லித்தான் தெரிய வேண்டுமா எனவும், குழந்தை திருமணம் முதல் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் வரை என அவரை போற்றுவதற்கான பட்டியல் நீண்டு கொண்டே செல்லும் எனவும் கூறியுள்ளார்.
டெல்லி மக்களுக்கு ஹோலியன்று இலவச கியாஸ் சிலிண்டர் அளிக்கப்படுமா? என பாஜகவுக்கு AAP மூத்தத் தலைவர் அதிஷி கேள்வி எழுப்பியுள்ளார். தேர்தல் நேரத்தில், ஹோலி, தீபாவளியன்று இலவச சிலிண்டர் அளிப்போம் என பாஜக வாக்குறுதி அளித்ததாகவும், அதுபோல வரும் ஹோலியன்று அளிக்கப்படுமா? இல்லை ரூ.2,500 போல இதுவும் ஜூம்லாதானா? என கேள்வி எழுப்பினார். இதற்கு விரைவில் சிலிண்டர் அளிப்பாேம் என பாஜக கூறியுள்ளது.
ஹரியானா மாநில உள்ளாட்சித் தேர்தலில் பாஜக பிரமாண்ட வெற்றியை பதிவு செய்துள்ளது. அங்குள்ள 10 மாநகராட்சிகளில் 9ஐ பாஜகவும் 1ஐ சுயேச்சையும் கைப்பற்றியுள்ளன. காங்கிரஸ் ஒரு மாநகராட்சியில் கூட பெரும்பான்மை பெறவில்லை. சில மாதங்களுக்கு முன் அம்மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. இந்த இரட்டை இன்ஜின் ஆட்சிதான் வெற்றியின் மந்திரம் என பாஜகவினர் கூறுகின்றனர்.
சட்டென படிக்கும் போது குழப்பமாக இருக்கிறதா? இந்த ட்ரெயினில் வழங்கும் ஃபுட் மெனுவில் ஒரு அசைவ உணவும் இடம் பெறவில்லை. மேலும், பயணிப்பவரும் அசைவ உணவுகள், ஏன் முட்டை, ஸ்நாக்ஸ் கூட எடுத்துட்டு வரக்கூடாது என ஸ்ட்ரிக்ட் கண்டிஷன் இருக்கிறது. இது என்ன ட்ரெயின் என கேட்கிறீர்களா! டெல்லி – ஜம்மு காஷ்மீரின் கட்ரா வரை ஓடும் வந்தே பாரத் ட்ரெயினில் தான் இந்த கண்டிஷன் எல்லாம்.
தெலுங்கானாவில் மட்டன் கறி செய்ய மறுத்த மனைவியை கணவர் அடித்தே கொன்றுள்ளார். மஹபூபாபாத்தைச் சேர்ந்த மலோத் கலாவதியிடம் அவரின் கணவர் நேற்றிரவு மட்டன் கறி செய்யவில்லையா என தகராறு செய்துள்ளார். இதையடுத்து 2 பேர் இடையே சண்டை ஏற்பட்டதில், மனைவியை அவர் அடித்து கொலை செய்து விட்டதாக கலாவதியின் தாயார் புகார் அளித்துள்ளார். இதையடுத்து போலீஸ் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கிறது.
VOTER ID-யுடன் ஆதார் இணைப்பை தேர்தல் ஆணையம் (EC) கட்டாயமாக்கியுள்ளது. சில மாநிலங்களில் பலருக்கு ஒரே VOTER ID எண் இருப்பதாக அண்மையில் குற்றச்சாட்டு எழுந்தது. இந்தநிலையில், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் கடந்த 4ஆம் தேதி மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் நடத்திய ஆலோசனையில் VOTER ID-யுடன் ஆதார், செல் எண் இணைக்க நடவடிக்கைகளை எடுக்கும்படி உத்தரவிட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.
Sorry, no posts matched your criteria.