News March 12, 2025

நேருக்கு நேர் விவாதம்.. CMக்கு இபிஎஸ் சவால்

image

நீட், ஹைட்ரோகார்பன், டங்ஸ்டன் சுரங்கம், பிஎம் ஸ்ரீ என கொல்லைப்புறமாக துரோகம் செய்த DMKவிற்கு, ADMKவை பற்றி பேச அருகதை இல்லை என EPS சாடியுள்ளார். BJPயுடன் கூட்டணியில் இருந்தாலும் 7.5% இடஒதுக்கீடு, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம், காவிரி மேலாண்மை ஆணையம் என TNஐ காத்திட்ட இயக்கம் ADMK எனவும், தன்னுடன் நேருக்கு நேர் விவாதிக்க CMக்கு திராணி இருக்கிறதா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

News March 12, 2025

கோடை விடுமுறை அறிவிப்பு

image

தமிழக பள்ளிகளில் 1 முதல் 9ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான <<15738675>>இறுதித்தேர்வு பட்டியல்<<>> வெளியாகியிருக்கிறது. இதனையடுத்து, 1 முதல் 5ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான கோடை விடுமுறை ஏப்ரல் 22ஆம் தேதி தொடங்குகிறது. 6 முதல் 9ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான கோடை விடுமுறை ஏப்ரல் 25ஆம் தேதி தொடங்கவிருக்கிறது. அடுத்த கல்வியாண்டில் பள்ளிகள் திறப்பு எப்போது என்ற அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை

News March 12, 2025

வங்கதேச கிரிக்கெட் வீரர் மெஹ்முதுல்லா ஓய்வு

image

வங்கதேச கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டரான மெஹ்முதுல்லா சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 2021இல் டெஸ்ட்டில் இருந்தும், 2024இல் டி20இல் இருந்தும் ஓய்வு பெற்றார். எனினும் ODIஇல் தொடர்ந்து விளையாடினார். சாம்பியன்ஸ் டிராபி போட்டியிலும் விளையாடினார். இந்நிலையில், ODIஇல் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். டெஸ்டில் 5, ODIஇல் 4 சதங்கள் அவர் விளாசியுள்ளார்.

News March 12, 2025

தீய சக்திகளின் கூடாரம் திமுக: அண்ணாமலை

image

தென்காசி பாஜக கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, திமுக அரசை கடுமையாக விமர்சித்தார். தமிழகத்தில் ஊழல் கறை படியாத இடமே இல்லை என்பதுதான் திமுக அரசு செய்த சாதனை என விமர்சித்த அவர், தீய சக்திகளின் கூடாரமாக தமிழகம் மாறிவிட்டதாகவும் குற்றம்சாட்டினார். டாஸ்மாக் மூலமாக ஆண்டுக்கு ரூ.50,000 கோடி கிடைத்தாலும், தமிழகத்தை ரூ.9.5 லட்சம் கோடி கடனில் வைத்திருப்பதுதான் ஸ்டாலினின் செயல்திறன் எனவும் அவர் சாடினார்.

News March 12, 2025

பணவீக்க குறைவு வட்டி விகிதத்தை குறைக்கும்

image

கோவிட்டிற்கு பின் பணவீக்கம் கடுமையாக உயர்ந்ததால், ரெப்போ வட்டி விகிதத்தை RBI உயர்த்தியது. இதனால், வங்கிகளில் லோன் வாங்குவோர்/வாங்கியோர் அதிக வட்டி செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்நிலையில், தற்போது பணவீக்கம் 3.61 சதவீதமாக சரிந்துள்ளதால், RBI ரெப்போ வட்டியை குறைக்க அதிக வாய்ப்புள்ளது. ஆகையால், நீங்கள் வாங்கிய வீட்டுக்கடனின் வட்டியும் குறையும், இனி நீங்கள் வாங்கப் போகும் லோனின் வட்டியும் குறையும்

News March 12, 2025

சாதி அடையாளத்தை அழித்த கலெக்டர்!

image

ஸ்ரீவைகுண்டத்தில் நேற்று முன்தினம் 11ஆம் வகுப்பு மாணவன் தேவேந்திரனை, ஒரு கும்பல் சரமாரியாக வெட்டியது. இந்த வழக்கில் 2 சிறார்கள் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மாணவன் படித்த பள்ளிக்கு தூத்துக்குடி ஆட்சியர் இளம் பகவத் இன்று சென்று ஆய்வு நடத்தினர். அப்போது பள்ளி சுவர்களில் சில சாதி அடையாளங்கள் வரையப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த ஆட்சியர், மாணவர்களை வைத்தே அதை அழிக்கச் செய்தார்.

News March 12, 2025

2025 டிசம்பருக்குள் சென்செக்ஸ் 1.05 லட்சத்தை தாண்டும்?

image

மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. ஆனால் பங்குச்சந்தை முதலீடு கணிப்பு நிறுவனமான மோர்கன் ஸ்டான்லி, சென்செக்ஸ் 2025 டிச.க்குள் 1.05 லட்சத்தை தாண்டும் என கூறியுள்ளது. இது தற்போதைய நிலவரத்தை விட 41% அதிகம். இதேபோல், 2024 டிசம்பரிலும் அது கணித்திருந்தது. உலக அரசியல் சில நாடுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தினாலும், இந்தியாவுக்கு சாதகமாகவே இருக்குமெனவும் தெரிவித்துள்ளது.

News March 12, 2025

IPL: சிஎஸ்கே அணி போட்டி டிக்கெட் விலை ரூ.1.23 லட்சம்

image

IPLஇல் சேப்பாக்கத்தில் வரும் 23ஆம் தேதி நடக்கும் போட்டியில் மும்பை அணியுடன் சிஎஸ்கே மோதுகிறது. இப்போட்டிக்கான டிக்கெட் விற்பனை அதிகாரப்பூர்வமாக தொடங்காத போதிலும், சில இணையதளங்களில் மறைமுகமாக டிக்கெட் விற்பனை நடக்கிறது. இதில் குறைந்தபட்ச டிக்கெட் விலை ரூ.17,804 ஆகவும், அதிகபட்ச டிக்கெட் விலை ரூ.1.23 லட்சமாகவும் உள்ளது. நீங்கள் டிக்கெட் வாங்கி விட்டீர்களா? கமெண்ட் பண்ணுங்க.

News March 12, 2025

3 மொழிகள் படிப்பதால் என்ன தவறு? சுதா மூர்த்தி

image

இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மனைவியும், ராஜ்ய சபா எம்பியுமான சுதா மூர்த்தி, மும்மொழிக் கொள்கையை ஆதரித்து பேசியுள்ளார். தனக்கு 7 முதல் 8 மொழிகள் தெரியும் எனவும், அதனால் குழந்தைகள் பல மொழிகளை கற்பது அவர்களுக்கு மிகவும் பயன்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மும்மொழிக் கொள்கை விவகாரத்தில் மத்திய அரசு vs தமிழ்நாடு அரசு இடையேயான மோதல் முற்றி வரும் நிலையில், அவர் இப்படி கூறியுள்ளார்.

News March 12, 2025

SBI UPI சேவைகள் முடங்கியது

image

நாடு முழுவதும் SBI வங்கியின் UPI சேவைகள் முடங்கியதால் வாடிக்கையாளர்கள் அதிருப்தியடைந்துள்ளனர். இரு தினங்களுக்கு முன் இதேபோல வங்கி சேவைகள் முடங்கின. பின்னர், ஒரு மணி நேரத்திற்குப் பின் சுமூகமானது. அதேபோல, இன்று இரவு 7 மணி முதல் UPI சேவைகள் முடங்கியுள்ளன. நாட்டின் நம்பர் 1 பொதுத்துறை வங்கி இப்படி செயல்படலாமா என்று வாடிக்கையாளர்கள் விமர்சித்து வருகின்றனர். உங்களுக்கு சேவை கிடைக்கிறதா? கமெண்ட்.

error: Content is protected !!