News July 11, 2025

கடலூர் கோர விபத்து எதிரொலி: 2 கேட் கீப்பர்கள் சஸ்பெண்ட்

image

கடலூரில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய கோர விபத்தில் 3 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். கேட் கீப்பரின் தூங்கிக் கொண்டிருந்ததால் தான் இந்த விபத்து நடந்ததாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டினர். இந்நிலையில் அரக்கோணம்- செங்கல்பட்டு ரெயில் மார்க்கத்தில் நள்ளிரவு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது 2 கேட் கீப்பர்கள் தூங்கிக் கொண்டிருந்ததை கண்டறிந்து, அவர்களை சஸ்பெண்ட் செய்தனர்.

News July 11, 2025

எதனால் லார்ட்ஸ் மைதானத்தில் மணி அடிக்கப்படுகிறது?

image

லார்ட்ஸ் மைதானத்தில் போட்டி துவங்குவதற்கு முன் மணி அடிப்பது என்பது மரபாகும். போட்டி தொடங்குகிறது என அறிவிப்பதற்கே இந்நிகழ்வு. கடந்த 2007-ம் ஆண்டு முதல் இந்த மரபு கடைப்பிடிக்கப்படுகிறது. இதில் பங்கேற்க முன்னாள் வீரர்கள் அழைக்கப்படுவார்கள். இந்தமுறை சச்சினை அழைத்துள்ளார்கள். மன்சூர் பட்டோடி, கவாஸ்கர், வெங்க்சார்கர், கபில் தேவ், கங்குலி ஆகியோர் இதற்கு முன்பு இந்த கெளரவ நிகழ்வில் பங்கேற்றுள்ளார்கள்.

News July 11, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶ இயல்: அரசியல் ▶அதிகாரம்: கல்வி ▶குறள் எண்: 392 ▶குறள்: எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு. ▶ பொருள்: எண் என்று சொல்லப்படுவதும், எழுத்து என்று சொல்லப்படுவதும் ஆகிய இரண்டினையும் அறிந்தோர், சிறப்புடைய மக்களுயிர்கட்குக் கண் என்று சொல்லுவார்கள்.

News July 11, 2025

இலவசங்கள் கிடையாது: முதல்வர் விஜய் என டிரெய்லர்

image

யாதும் அறியான் என்ற படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இப்படத்தை அறிமுக இயக்குநர் எம்.கோபி இயக்கியிருக்கிறார். இதன் டிரெய்லரில் விஜய் 2026-ல் முதலமைச்சராகி இருப்பது போன்றும், இனி இலவசம் கிடையாது என உத்தரவிட்டது போன்றும் காட்சிகள் இருந்தன. இது வைரலானதால், இது குறித்து பேசிய கோபி, தான் விஜய் ரசிகன் என்றும், ஆனால் இந்த காட்சிகள் முழுக்க முழுக்க கற்பனைக்காக வைக்கப்பட்டவை என விளக்கமளித்தார்.

News July 11, 2025

அறுபடை வீட்டையும் சேகர்பாபு அழித்துவிடுவார்: எச்.ராஜா

image

சேகர்பாபு அறுபடை வீட்டையும் அழித்துவிடுவார் என எச்.ராஜா விமர்சித்தார். இது குறித்து அவர் பேசுகையில், சுவாமிமலையில் கட்டப்படாத மின்தூக்கியை பயன்பாட்டுக்கு கொண்டு வந்ததாக சேகர்பாபு பொய் சொன்னதாக குற்றம் தெரிவித்தார். கோவில் நிதியில் கல்லூரி கட்டுவதற்கு தனக்கு உடன்பாடு இல்லை என தெரிவித்த அவர், அது உயர்கல்வித்துறை அமைச்சரின் வேலை, சேகர்பாபுவுக்கு அதில் என்ன சம்பந்தம் எனவும் கேள்வி எழுப்பினார்.

News July 11, 2025

இன்றைய நல்ல நேரம்

image

▶ஜூலை 11 – ஆனி 27 ▶ கிழமை: வெள்ளி ▶நல்ல நேரம்: 9:15 AM – 10:15 AM & 4:45 PM – 5:45 PM ▶ கெளரி நல்ல நேரம்: 12:15 AM – 1:15 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 10:30 AM – 12:00 PM ▶ எமகண்டம்: 3:00 PM – 4:30 PM ▶ குளிகை: 7:30 AM – 9:00 AM ▶ திதி: பிரதமை ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம் ▶ பிறை: தேய்பிறை.

News July 11, 2025

அல்லு அர்ஜூனுக்கு வில்லனாக ஹாலிவுட் சூப்பர் ஸ்டார்..!

image

அட்லி இயக்கத்தில் 800 கோடி பட்ஜெட்டில் அல்லு அர்ஜூன் சூப்பர் ஹீரோ படம் நடிக்க உள்ளார். இதில் தீபிகா படுகோன் கதாநாயகியாக நடிக்கிறார். இந்நிலையில் இப்படத்தில் வில்லனாக நடிக்க ஹாலிவுட் சூப்பர் ஸ்டாரான வில் ஸ்மித்திடம் பேச்சுவார்த்தை நடைபெறுவதாக தகவல்கள் உள்ளன. ஒருவேளை அவர் நடிக்கவில்லை என்றால் மல்யுத்த வீரர் டுவெயின் ஜான்சன் (a) ராக்கிடம் பேச்சுவார்த்தை நடத்தயிருப்பதாக கூறப்படுகின்றன.

News July 11, 2025

நிதான ஆட்டத்தில் இங்கி., : சதத்தை நோக்கி ஜோ ரூட்

image

இந்தியா – இங்கி., இடையேயான 3வது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்று பேட்டிங் செய்த இங்கி., அணி ஆட்டத்தின் முதல் நேர முடிவில் 251 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளுக்கு இழந்துள்ளது. அந்த அணியில் அதிகபட்சமாக ஜோ ரூட் 99 ரன்கள் அடித்து ஆட்டழிக்காமல் உள்ளார். இந்திய அணியில் நிதிஷ் குமார் ரெட்டி 14 ஓவர்கள் பந்துவீசி 46 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.

News July 11, 2025

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (ஜூலை 11) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.

News July 11, 2025

உ.பி.,யில் ₹4,320 கோடிக்கு மதுபான உற்பத்தி ஒப்பந்தம்

image

உ.பி.,யில் நேற்று நடைபெற்ற மதுபான உற்பத்திக்கான முதலீட்டு மாநாட்டில் ₹4,320 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அதேநேரம், 2024-25 நிதியாண்டில் மது விற்பனை மூலம் ₹52,570 கோடி வருமானத்தை அம்மாநிலம் ஈட்டியுள்ளது. அரசே மது விற்பனை செய்வதாக பாஜகவினர் தமிழக அரசு மீது தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் நிலையில், உ.பி.,யில் நடைபெற்ற மது உற்பத்தி மாநாட்டை திமுகவினர் விமர்சித்து வருகின்றனர்.

error: Content is protected !!