News November 22, 2024
பிலிப் ஹியூஸை கவுரவிக்கும் ஆஸ்திரேலியா

மறைந்த AUS வீரர் பிலிப் ஹியூஸின் 10ஆம் ஆண்டு நிறைவு நாள் நவ.27ஆம் தேதி வரவுள்ளது. இந்நிலையில் அடிலெய்டில் நடைபெறும் IND-AUS அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டியின் தொடக்கத்தில் அவரை கவுரவிக்க ஆஸி. கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. அதைப்போல ஷெஃபீல்ட் ஷீல்ட் ஆட்டத்தின் போது வீரர்கள் black armband கட்டி விளையாட உள்ளனர். 2014இல் உள்ளூர் கிரிக்கெட்டின் போது பந்து தலையில் தாக்கியதில் உயிரிழந்தார்.
Similar News
News December 5, 2025
தென்றலாய் தீண்டும் நேஹா!

‘டியூட்’ திரைப்படம் மூலம் பிரபலமான நேஹா ஷெட்டி, தற்போது இன்ஸ்டாவில் லேட்டஸ்ட் போட்டோக்களை பதிவிட்டுள்ளார். மென்மையான அலைகள் போன்ற பார்வை, ஆரஞ்ச் நிற ஆடை, அணிகலன்கள் ஆகியவை அவரது அழகை மேலும் செம்மைப்படுத்தி, ஈர்ப்பு ஒளியை வீசுகிறது. இந்த போட்டோஸ் உங்களுக்கும் பிடிச்சிருந்தா ஒரு லைக் போடுங்க. யாருக்கெல்லாம் ‘டியூட்’ படத்தில் இவரை பிடித்தது? கமெண்ட்ல சொல்லுங்க.
News December 5, 2025
சர்க்கரை நோயை விரட்டும் அதலைக்காய்!

சர்க்கரை நோயை கட்டுப்படுத்த மருந்து, மாத்திரை இல்லாத இயற்கையான வழியை தேடுகிறீர்களா? அப்போ உணவுமுறையில் அதலைக்காய் சேர்த்துக்கோங்க. இதில் உள்ள சத்துகள் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தி உடலில் சர்க்கரை நோயின் தாக்கத்தை குறைக்கிறது. இது பாகற்காய்க்கு இணையான மருத்துவ குணம் கொண்டது என டாக்டர்கள் கூறுகின்றனர். மேலும், மஞ்சள் காமாலை போன்ற நோயையும் கட்டுப்படுத்தும் தன்மையுடையது.
News December 5, 2025
14 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும்

அடுத்த 3 மணி நேரத்திற்கு தமிழகத்தின் 14 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும் என IMD கணித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும் விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரியில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, வெளியே சென்றால் மறக்காமல் குடை எடுத்துட்டு போங்க..


