News November 25, 2024
கடின இலக்கை துரத்தும் ஆஸ்திரேலியா

இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான பார்டர் கவாஸ்கர் கோப்பை முதல் டெஸ்ட் தொடரில் இந்திய அணி வலுவான நிலையில் உள்ளது. முதல் இன்னிங்க்ஸில் இரண்டு அணிகளும் சொதப்பியபோதும் இரண்டாவது இன்னிங்க்ஸில் இந்தியாவின் ஜெய்ஸ்வால், கோலி சதம் கண்டனர். இதனால், 524 என்ற கடின இலக்கை ஆஸ்திரேலியாவுக்கு இந்தியா அளித்துள்ளது. ஆனால், ஆஸி அணி ஏற்கெனவே 12 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்துள்ளது.
Similar News
News November 2, 2025
சபரிமலை செல்ல சிறப்பு ரயில்!

சபரிமலை மண்டல பூஜையை முன்னிட்டு சென்னை எழும்பூரில் இருந்து கொல்லத்திற்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. நவ.14 முதல் ஜன.16 வரை 2 மாதங்களுக்கு இந்த சிறப்பு ரயில் இயக்கப்படும். வெள்ளி இரவு 11.55-க்கு எழும்பூரில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 4.30-க்கு கொல்லத்தை அடையும். மறுமார்க்கத்தில் சனி இரவு 7.35-க்கு புறப்பட்டு, நண்பகல் 12 மணிக்கு எழும்பூர் வந்தடையும்.
News November 2, 2025
உலகக்கோப்பை ஃபைனல்: மழையால் ஆட்டம் தாமதம்

மகளிர் ODI உலகக்கோப்பை இறுதிப்போட்டியில், இன்று தென்னாப்பிரிக்கா – இந்தியா அணிகள் மோதுகின்றன. இதன் போது மழை குறுக்கிட்டதால், போட்டி தாமதமாகிறது. இன்று முழுவதும் மழை பெய்தால், போட்டி நாளை நடைபெறும். தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக நடந்த லீக் போட்டியில் இந்தியா தோல்வியை தழுவியது. இந்நிலையில், இறுதிப்போட்டியில் வென்று இந்திய மகளிர் அணி வாகை சூடுமா என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
News November 2, 2025
சற்றுமுன்: செங்கோட்டையன் புதிய முடிவெடுத்தார்

அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்து வழக்கு தொடர்வேன் என நேற்று அறிவித்த நிலையில், இன்று மாலை சட்ட வல்லுநர்களுடன் செங்கோட்டையன் ஆலோசனை செய்கிறார். ஆலோசனைக்குபின், நாளை அவரது தரப்பில் வழக்கு தொடரப்படும் என தெரிகிறது. இதனைத்தொடர்ந்து, நவ.5-ல் OPS, TTV, செங்கோட்டையன் இணைந்து ஆதரவாளர்களையும், பிரிந்து சென்றவர்கள் மற்றும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களையும் சந்திக்க முடிவு செய்துள்ளனர்.


