News October 14, 2025
ஆஸி. தொடரில் இருவரின் எதிர்காலம் தெரிந்துவிடும்..

ஆஸி., தொடரில் ரோஹித், கோலி ஆகியோரின் பெர்ஃபார்மன்ஸ், அவர்களின் எதிர்காலத்தை முடிவு செய்யும் என முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். இளம் வீரர்கள் வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருப்பதால், நெருக்கடி ஏற்பட்டிருப்பதை இருவரும் உணர்ந்திருப்பார்கள் என கூறிய ரவி சாஸ்திரி, அவர்களின் உடற்தகுதி, ஃபார்ம் ஆகியவை ஆஸி. தொடரின் முடிவில் தெரிந்துவிடும் எனவும் கூறினார்.
Similar News
News October 14, 2025
கரூர் விவகாரத்தை கையில் எடுக்கும் எதிர்க்கட்சிகள்

தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் இன்று தொடங்கிய நிலையில், 17-ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இக்கூட்டத்தில் கிட்னி திருட்டு, கரூர் துயரம், குழந்தைகளின் உயிரை பறித்த இருமல் மருந்து, பெண்களுக்கு எதிரான வன்கொடுமை அதிகரிப்பு, கொலை குற்றங்கள் அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கையில் எடுக்க திட்டமிட்டுள்ளன. இதற்கு பதிலடி கொடுக்க ஆளும் திமுகவும் தயாராகி வருகிறது
News October 14, 2025
BREAKING: தங்கம் விலை தாறுமாறாக மாறியது

சென்னையில் தங்கம் விலை இன்று(அக்.14) தாறுமாறாக மாறியுள்ளது. 22 கேரட் தங்கம் ஒரே நாளில் கிராமுக்கு ₹245 உயர்ந்து ₹11,825-க்கும், சவரன் ₹94,600-க்கும் விற்பனையாகிறது. இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ₹1,960 அதிகரித்துள்ளதால் நகைப்பிரியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த 14 நாள்களில் மட்டும் தங்கம் சவரனுக்கு ₹7,720 அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
News October 14, 2025
FLASH: சட்டமன்ற வளாகத்தில் பாமக MLA-க்கள் தர்ணா

சட்டமன்ற வளாகத்தில் அன்புமணி தரப்பு MLA-க்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பாமக, சட்டப்பேரவை குழு தலைவர் பதவியில் இருந்து GK மணியை நீக்கி அன்புமணி அறிவித்திருந்தார். இது தொடர்பாக சபாநாயகரை சந்தித்து MLA-க்கள் SP வெங்கடேஸ்வரன், சிவக்குமார், சதாசிவம் ஆகிய மூவரும் முறையிட்டனர். அதனை ஏற்க மறுத்ததால் தர்ணா போராட்டம் நடத்தி வருகின்றனர்.