News October 4, 2025
BREAKING: இந்திய அணிக்கு புதிய கேப்டன்

ஆஸி., அணிக்கு எதிரான ODI தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சுப்மன் கில்(கேப்டன்), ரோஹித் சர்மா, விராட் கோலி, ஷ்ரேயஸ் ஐயர், அக்சர் படேல், KL ராகுல், நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, துருவ் ஜுரெல், ஜெய்ஸ்வால். முதல் போட்டி வரும் 19-ம் தேதி பெர்த்தில் தொடங்குகிறது.
Similar News
News October 4, 2025
கரூர் துயரத்திற்கு விஜய் தான் பொறுப்பேற்க வேண்டும்: சீமான்

கரூர் துயரத்தில் ஒருவருக்கு ஒருவர் மாறி மாறி பழி போடுவது, உயிரிழப்பை விட கொடுமையாக உள்ளதாக சீமான் வேதனை தெரிவித்துள்ளார். விஜய்யை எப்படியாவது கூட்டணிக்குள் கொண்டு வர பாஜக முயற்சிப்பதாகவும், விஜய்க்கு அண்ணாமலை பாதுகாப்பு கொடுத்துள்ளதாகவும் அவர் விமர்சித்துள்ளார். மேலும், விஜய் கரூருக்கு வந்ததால் தான் அந்த கூட்டம், எனவே அந்த சம்பவத்திற்கு அவரே பொறுப்பேற்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
News October 4, 2025
வாய் துர்நாற்றம் இருக்கா? இதை ட்ரை பண்ணுங்க!

பல்வேறு தருணங்களில் சங்கடத்தை ஏற்படுத்தும் வாய் துர்நாற்றத்தை போக்க, வீட்டிலேயே எளிமையான வழிமுறைகளை மேற்கொள்ளலாம். இவை, சுவாசத்தை புத்துணர்சியடைய செய்வதுடன், வாய் சுகாதாரத்தையும் மேம்படுத்துகின்றன. அவை என்ன என்று, மேலே போட்டோக்களில் கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில், இல்லாமல் வேறு ஏதேனும் உங்களுக்கு தெரிந்தா கமெண்ட்ல சொல்லுங்க
News October 4, 2025
திருப்பூர் குமரன், சுப்பிரமணிய சிவா : நினைவுகூர்ந்த PM மோடி

திருப்பூர் குமரன், சுப்பிரமணிய சிவா இருவரின் பிறந்தநாளான இன்று, அவர்களின் தியாகங்களை PM மோடி நினைவுகூர்ந்து X-ல் பதிவிட்டுள்ளார். திருப்பூர் குமரன், சுப்பிரமணிய சிவா ஆகியோரை நினைவு கூர்ந்து வணங்குவோம். உன்னதமான தமிழ்நாட்டைச் சேர்ந்த இருவரும், விடுதலைக்காகவும், தேசப்பற்று உணர்வை விதைப்பதற்காகவும் தங்கள் வாழ்வையே அர்ப்பணித்தவர்களாவர் என்று அதில் தெரிவித்துள்ளார். மாமனிதர்களை நாமும் வாழ்த்தலாமே?