News June 25, 2024
ஆஸி., அணியின் அஸ்திவாரம் டேவிட் வார்னர்(1)

2011ஆம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட்டில் அறிமுகமான வார்னர், மொத்தம் 111 போட்டிகளில் விளையாடியுள்ளார். ஒருமுறை 300 ரன்கள், 3 முறை 200 ரன்கள், 26 சதம், 36 அரை சதங்களை விளாசியுள்ள அவர், 2023 ஜூன் மாதத்துடன் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். முன்னதாக, 2019ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரானப் போட்டியில் விளையாடிய அவர், அவுட்டாகாமல் 335 ரன்கள் எடுத்து டெஸ்ட்டில் தனது அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தார்.
Similar News
News November 22, 2025
மாதம் ₹3,000 கொடுக்கும் அரசு.. உடனே அப்ளை பண்ணுங்க

வீட்டு வேலை, கட்டட வேலை, விவசாய கூலி உள்ளிட்ட அமைப்புசாரா தொழிலாளர்களும் தங்களது 60 வயதிற்கு பிறகு மாதந்தோறும் ₹3,000 ஓய்வூதியம் பெற முடியும். இதற்கு மத்திய அரசின் <
News November 22, 2025
இன்று 13 மாவட்டங்களில் கனமழை

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவான நிலையில், இன்று 13 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என IMD அலர்ட் கொடுத்துள்ளது. குமரி, நெல்லை, தென்காசி, நாகை, தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்றும், புதுக்கோட்டை, அரியலூர், கடலூர் உள்ளிட்ட 16 மாவட்டங்களில் நாளையும், மயிலாடுதுறை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் நாளை மறுநாளும் கனமழை பெய்யக்கூடும் என்று எச்சரித்துள்ளது.
News November 22, 2025
இனி அரசல் புரசல் இருக்காது: ப.சிதம்பரம்

திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த காங்கிரஸ் குழு அமைத்திருப்பதை ப.சிதம்பரம் வரவேற்றுள்ளார். இது INDIA கூட்டணியின் ஒற்றுமையை வெளிப்படுத்துவதாகவும், அரசல் புரசலாக அவ்வப்போது வெளியிடப்படும் செய்திகளுக்கு இந்த அறிவிப்பு முற்றுப்புள்ளி வைக்கும் என நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார். திமுக கூட்டணியில் இருந்து விலகி, தவெகவுடன் <<18302354>>காங்கிரஸ்<<>> கூட்டணி அமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.


