News December 6, 2024
சத்தமே இல்லாமல் சாதித்த ஆஸி. புயல் மிட்செல் ஸ்டார்க்

IND எதிராக 2ஆவது டெஸ்டில் 6 விக்கெட் எடுத்து மிட்செல் ஸ்டார்க், டெஸ்டில் தனது சிறந்த பந்து வீச்சை பதிவு செய்துள்ளார். டெஸ்ட் போட்டியில் 5 முறை அவர் 6 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார். இந்தியா 6/48, இலங்கை 6/50, பாகிஸ்தான் 6/66, இங்கிலாந்து 6/111, தென்னாப்பிரிக்கா 6/154 உள்ளிட்ட அணிகளிடம் அவர் விக்கெட் வேட்டை நடத்தியுள்ளார். 2ஆவது இன்னிங்ஸிலும் வேட்டை தொடருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Similar News
News October 31, 2025
வண்டி டயர்கள் கருப்பு நிறத்தில் இருப்பது ஏன்?

வாகனத்தின் டயர்கள் ரப்பரில் செய்யப்படுகின்றன. வெள்ளை நிறம் கொண்ட இவை கருப்பாக மாற்றப்படுவது ஏன் என நீங்கள் கேட்கலாம். இதற்கு பின்னால் ஒரு அறிவியல் காரணம் இருக்கிறது. ரப்பரால் ஆன டயர்கள் விரைவில் பழுதடைந்துவிடும். எனவேதான் Carbon Black எனப்படும் கெமிக்கலை அதன் மேல் பூசுகின்றனர். இதன்மூலம், டயர்கள் வலுவாக இருக்கும். சீக்கிரம் பழுதடையாது. 1% பேருக்கு மட்டுமே தெரிந்த இத்தகவலை SHARE பண்ணுங்க.
News October 31, 2025
நாளை விளக்கம் அளிக்கிறேன்: செங்கோட்டையன்

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டது தொடர்பாக நாளை விளக்கம் அளிக்க இருப்பதாக செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். காலை 11 மணிக்கு செய்தியாளர்களை சந்தித்து பேசவிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான அவர், அண்மை காலமாகவே இபிஎஸ் உடன் மோதல்போக்கை கடைபிடித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
News October 31, 2025
9 மசோதாக்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல்

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 9 மசோதாக்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். முன்னாள் எம்.எல்.ஏ-க்களின் ஓய்வூதியத்தை உயர்த்துவது, சிறுகுற்றங்களுக்கு தண்டனைக்கு பதிலாக அபாரம் விதிப்பது உள்ளிட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, இருமுறை நிறைவேற்றப்பட்டு அனுப்பி வைக்கப்பட்ட தமிழக நிதி நிர்வாக பொறுப்புடைமை சட்டத்திற்கும் கவர்னர் ஒப்புதல் தந்துள்ளார்.


