News March 13, 2025
AUSM அணிக்கு 221 ரன்கள் இலக்கு

சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் T20 தொடரில், ஆஸி., மாஸ்டர்ஸ் அணிக்கு 221 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது இந்திய மாஸ்டர்ஸ் அணி. ராய்ப்பூரில் நடைபெறும் போட்டியில் முதலில் களமிறங்கிய INDM அணி, 20 ஓவர்களில் 220/7 ரன்கள் குவித்தது. சச்சின் 42, யுவராஜ் 59, பின்னி 36, யூசுப் பதான் 23 ரன்கள் எடுத்தனர். AUSM தரப்பில் சேவியர், டேனியல் கிறிஸ்டியன் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
Similar News
News March 14, 2025
பட்ஜெட்: ட்ரோல் செய்யப்படும் LED திரை ஃபார்முலா!

தமிழக பட்ஜெட்டை பார்க்க மாநிலம் முழுவதும் திமுக சார்பில் 1000+ LED திரைகள் அமைக்கப்பட்டிருந்தன. ஆனால், LED திரைகள் முன்பு காலி சேர்கள் தான் இருந்தாக அதிமுக விமர்சித்து வருகிறது. ‘யாருமே இல்லாத கடையில யாருக்கு சார் டீ ஆத்துறீங்க’ என்ற வாசகத்துடன் அதிமுக ஐடி விங் ட்ரோல் செய்து வருகிறது. முன்னதாக, LED திரைகள் முன்பு காலி சேர் இருந்ததை அண்ணாமலையும் குறிப்பிட்டு இருந்தார்.
News March 14, 2025
ஓடிடியில் மாஸ் காட்டிய ‘விடாமுயற்சி’…!

அஜித் நடிப்பில் 2 ஆண்டுகளுக்கு பிறகு வெளியான படம் விடாமுயற்சி. மாஸ் காட்சிகள் குறைவு என்றும், அஜித்திற்கு ஏற்ற கதாபாத்திரம் அல்ல என்றும் இந்த படத்தின் மீது விமர்சனங்கள் எழுந்தன. இதனையடுத்து, கடந்த 3ஆம் தேதி நெட்பிளிக்ஸில், தமிழ் உள்ளிட்ட 5 மொழிகளில் விடாமுயற்சி படம் வெளியானது. இந்நிலையில், தற்போதுவரை 3M வியூஸ்-க்கு மேல் பெற்றுள்ள இந்த படத்திற்கு, ஓடிடியில் அமோக வரவேற்பு இருப்பதாக கூறப்படுகிறது.
News March 14, 2025
எந்தெந்த துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு?

பள்ளிக்கல்விக்கு ₹46,767 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நகர்ப்புற வளர்ச்சிக்கு ₹26,678 கோடி, உள்ளாட்சிக்கு ₹29,465 கோடி, மின்துறைக்கு ₹21,178 கோடி, மக்கள் நல்வாழ்வுக்கு ₹21,906 கோடி, நெடுஞ்சாலைக்கு ₹20,722 கோடி, போக்குவரத்துக்கு ₹12,964 கோடி, நீர்வளத்துக்கு ₹9,460 கோடி, உயர்கல்விக்கு ₹8,494 கோடி, MSMEக்கு ₹5,833 கோடி, ஆதிதிராவிடர், பழங்குடியினத் துறைக்கு ₹3,924 கோடி ஒதுக்கீடு.