News March 30, 2024

ஆஸ்., மக்கள்தொகையை விட இது அதிகம்

image

வேலையில்லாத இந்தியர்களில் 83% பேர் இளைஞர்களாக இருப்பதாக சர்வதேச தொழிலாளர் அமைப்பு அண்மையில் தகவல் வெளியிட்டிருந்தது. இது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், “2022-23 ஆம் நிதியாண்டில், EPFOஇல் 6.4 கோடி பேர் தங்களைப் பதிவு செய்துள்ளனர். ஆஸ்திரேலியா போன்ற நாடுகளின் மக்கள் தொகையைவிட இந்த எண்ணிக்கை அதிகமாகும்” என்றார்.

Similar News

News November 25, 2025

முன்னாள் MP, MLA-க்களுடன் ஆலோசனையில் KAS

image

கொங்கு மண்டலத்தில் உள்ள முன்னாள் MP, MLA-க்கள் உடன் கடந்த இரண்டு நாள்களாக செங்கோட்டையன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் 2 நாள்களில் தவெகவில் இணைவார் என்று பேச்சு அடிபட்டு வரும் நிலையில், இபிஎஸ், வேலுமணி மீது அதிருப்தியில் உள்ள மூத்த நிர்வாகிகள் உடன் அவர் தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டுள்ளாராம். பெரும் படையுடன் KAS தவெகவில் இணைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

News November 25, 2025

இந்த மெசேஜை நம்பாதீங்க.. ரசிகர்களை எச்சரித்த ரகுல்!

image

Whatsapp-ல் தனது பெயரில் வரும் மெசேஜ்களை நம்ப வேண்டாம் என நடிகை ரகுல் ப்ரீத் சிங் எச்சரித்துள்ளார். இது குறித்து அவரின் X தள பதிவில், சில மெசெஜ்களின் Screenshot-ஐ பகிர்ந்து, இப்படி யாராவது தொடர்பு கொண்டால், உடனடியாக அந்த நம்பரை Block செய்யவும் வலியுறுத்தியுள்ளார். முன்னதாக, இது போன்று நடிகைகள் ருக்மணி வசந்த், அதிதி ராவ் ஆகியோரின் பெயரிலும் Whatsapp-ல் போலியாக மெசேஜ்கள் பரவின.

News November 25, 2025

Ro-Ko இல்லாததால் தள்ளாடுகிறதா இந்தியா?

image

தற்போது கவுகாத்தி டெஸ்டில் இந்திய அணி மிகவும் பரிதாபமான நிலையில் உள்ளது. இந்திய அணியின் இந்த நிலைக்கு, கோச் கம்பீரை பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ஆனால், இதில் மற்றுமொரு பரிமாணமும் உள்ளது. ரோஹித், கோலி ஆகியோர் இருந்திருந்தால், சொந்த மண்ணில் இந்திய அணி இவ்வளவு மோசமான நிலைக்கு தள்ளப்பட்டிருக்காது என சில நெட்டிசன்கள் குறிப்பிடுகின்றனர். நீங்க என்ன சொல்றீங்க?

error: Content is protected !!