News February 25, 2025
AUS-SA போட்டி 20 ஓவர்களாக குறைப்பு?

சாம்பியன்ஸ் டிராஃபி கிரிக்கெட் தொடரில் இன்று ஆஸ்திரேலியா-தென்னாப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. போட்டி நடைபெறவுள்ள ராவல்பிண்டி மைதானம் அமைந்திருக்கும் பகுதியில், தொடர்ச்சியாக மழை பெய்வதால் இதுவரை டாஸ் போடப்படவில்லை. இரவு 7.20க்குள் மழை நிற்கும் பட்சத்தில், ஆட்டத்தை 20 ஓவர்களாக குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. போட்டி ரத்தானால் இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்படும்.
Similar News
News February 25, 2025
BREAKING: 10ஆம் வகுப்பு இருமுறை பொதுத்தேர்வு

2026 கல்வியாண்டு முதல் CBSE 10ஆம் வகுப்புக்கு ஆண்டுக்கு இருமுறை பொதுத்தேர்வு நடைபெற இருக்கிறது. இருமுறை பொதுத்தேர்வு நடத்துவதற்கான வரைவு விதிகளுக்கு CBSE ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி முதற்கட்ட பொதுத்தேர்வு பிப்ரவரி முதல் மார் வரையிலும், 2ஆம் கட்ட பொதுத்தேர்வு மே மாதமும் நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும், இரு தேர்வுகளும் ஒரே தேர்வு மையத்தில் தான் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News February 25, 2025
5 நிமிடத்தில் தங்க டாய்லெட்டை திருடிய கில்லாடிகள்

ஒரு டாய்லெட்டை திருடி, கொள்ளையர்கள் கோடீஸ்வரர்களாக மாறியிருக்கிறார்கள் என சொன்னால் நம்ப முடியுதா?. உண்மை தான்!, பிரிட்டனில் உள்ள Blenheim Palace-ல் 18 கேரட் தங்கத்தால் ஆன கழிப்பறையை (₹42.48 Cr), 2019ல் பக்காவாக ஸ்கெட்ச் போட்டு வெறும் 5 நிமிடத்தில் 4 கொள்ளையர்கள் திருடியுள்ளனர். திருடர்களை போலீஸ் கைது செய்தபோதிலும், தங்க டாய்லட்டை தற்போதுவரை மீட்க முடியவில்லை என கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News February 25, 2025
காவல் நிலையத்திலேயே கொடூரம்: கோர்ட் அதிரடி தீர்ப்பு

காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்து வந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், ஒய்வு பெற்ற இன்ஸ்பெக்டர், 2 போலீசாருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. திண்டுக்கல்லில் 2001ம் ஆண்டு நடந்த நகை திருட்டு தொடர்பான வழக்கு விசாரணையை தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பெண் தற்கொலைக்கு முயன்றார். இவ்வழக்கில் 24 ஆண்டுகளுக்கு பின் நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளது.