News February 25, 2025
AUS-SA போட்டி கைவிடப்பட்டது

சாம்பியன்ஸ் டிராஃபி கிரிக்கெட் தொடரில் இன்று, ஆஸ்திரேலியா-தென்னாப்பிரிக்கா அணிகள் மோதவிருந்த போட்டி கைவிடப்பட்டது. ராவல்பிண்டி மைதானம் அமைந்துள்ள பகுதியில் தொடர்ச்சியாக மழை பெய்து வந்ததால், ஆட்டத்தை கைவிடுவதாக நடுவர்கள் அறிவித்தனர். இதனால் போட்டியை காண வந்த ரசிகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். போட்டி கைவிடப்பட்டதால் இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி பிரித்து வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News February 25, 2025
காவல் நிலையத்திலேயே கொடூரம்: கோர்ட் அதிரடி தீர்ப்பு

காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்து வந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், ஒய்வு பெற்ற இன்ஸ்பெக்டர், 2 போலீசாருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. திண்டுக்கல்லில் 2001ம் ஆண்டு நடந்த நகை திருட்டு தொடர்பான வழக்கு விசாரணையை தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பெண் தற்கொலைக்கு முயன்றார். இவ்வழக்கில் 24 ஆண்டுகளுக்கு பின் நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளது.
News February 25, 2025
துபாயைச் சுற்றி வரும் இந்திய வீரர்கள்

2025 CT தொடரில் இந்திய அணி குரூப் சுற்றில் BAN, PAK அணிகளை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. தொடர்ந்து, IND அடுத்து விளையாட உள்ள போட்டி, மார்ச் 2ல் தான் நடைபெற உள்ளது. இதனால், வீரர்களுக்கு 7 நாட்கள் ஓய்வு கிடைத்துள்ளது. இதையொட்டி, அவர்கள் துபாயை ஜாலியாக சுற்றி வருகின்றனர். அந்த வகையில், சுழற்பந்து வீச்சாளர்கள் ஜடேஜாவும், குல்தீப் யாதவும் சுற்றி வரும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
News February 25, 2025
வெளியானது திடீர் வழுக்கை ரகசியம்

மஹாராஷ்டிராவில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை 300க்கும் மேற்பட்டோருக்கு, திடீரென அதீத முடி உதிர்வு ஏற்பட்டு வழுக்கை விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கான காரணத்தை பத்மஸ்ரீ விருது பெற்ற டாக்டர் ஹிம்மத்ராவ் கண்டறிந்துள்ளார். பொது விநியோக திட்டத்தில் வழங்கப்பட்ட கோதுமையில், 600 மடங்கு அதிகளவிலான செலினியம் இருந்ததே 4 நாள்களுக்குள் வழுக்கை ஏற்பட காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.