News January 1, 2025

பிங்க் தொப்பியில் களமிறங்கும் AUS வீரர்கள்

image

IND vs AUS மோதும் 5ஆவது டெஸ்ட் போட்டி சிட்னியில் நாளை மறுநாள் (ஜன.3) நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கு தயாரான AUS அணியின் ஃபோட்டோக்கள் வைரலாகி வருகின்றன. மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், வீரர்கள் பிங்க் நிற தொப்பி அணிந்துள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் சிட்னியில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டி, பிங்க் டெஸ்ட் என்ற பெயரிலேயே நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

Similar News

News September 18, 2025

ராகுல் போலி கதைகளை பரப்புகிறார்: அமித்ஷா

image

வாக்கு திருட்டு குறித்து பொய்யான கதையையே ராகுல் பரப்பி வருவதாக அமித்ஷா சாடியுள்ளார். பிஹாரில் பேசிய அவர், ராகுல் காந்தி உள்பட ஒட்டுமொத்த காங்கிரஸாரும், வங்கதேசத்தில் இருந்து வரும் ஊடுருவல்காரர்களை காப்பாற்றும் வேலையிலேயே ஈடுபடுவதாக குற்றஞ்சாட்டியுள்ளார். இதனால், இந்திய இளைஞர்களுக்கு பதில், ஊடுருவல்காரர்களுக்கு ராகுல் வேலை வாய்ப்பு அளிப்பதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.

News September 18, 2025

விஜய்யை எதிர்த்தால் திமுகவின் கைக்கூலியா? சீமான்

image

அனைத்து கட்சிகளையும் தான் பாரபட்சமின்றி விமர்சித்து வருவதாக சீமான் விளக்கம் அளித்துள்ளனர். ஆனால், விஜய்யை எதிர்த்தால் திமுக கைக்கூலி, திமுகவை எதிர்த்தால் RSS கைக்கூலி என மாறி மாறி தன்னை விமர்சிப்பதாக தெரிவித்துள்ளார். திட்டமிட்டு தன் மீது அவதூறு பரப்பப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். ஓட்டுக்கு பணம் கொடுக்காமல், திமுக தேர்தலில் தனித்து நிற்குமா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

News September 18, 2025

தள்ளிப்போகும் ரஜினி, கமல் படம்

image

ரஜினி, கமல் இணைந்து நடிக்கவுள்ள படம் மீதான எதிர்பார்ப்பே கோலிவுட்டின் ஹாட் டாபிக்காக உள்ளது. இந்நிலையில், ‘சித்தா’ பட இயக்குநர் அருண்குமார், ஸ்டண்ட் மாஸ்டர்ஸ் அன்பறிவ் ஆகியோரது இயக்கத்திலேயே கமல் முதலில் நடிக்கவுள்ளாராம். இதன்பிறகே கமல், ரஜினி இருவரும் நடிக்கும் படம் தொடங்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதற்கு முன்னர் இயக்குநர், சரியான கதைக்களத்தை தேர்ந்தெடுக்கும் பணி நடைபெறவுள்ளதாம்.

error: Content is protected !!