News January 25, 2025
AUS ஓபன்: இறுதிப்போட்டிக்கு முன்னேறிய ஜானிக் சினெர்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் ஜானிக் சினெர் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். அரையிறுதி ஆட்டத்தில் ஜானிக் சினெர் (இத்தாலி) – பென் ஷெல்டன் (அமெரிக்கா) ஆகியோர் மோதினர். பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய ஜானிக் சினெர் 7(6)-6(2) , 6-2,6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இறுதிப்போட்டியில் ஸ்வெரேவ்வுடன் நாளை மோதுகிறார்.
Similar News
News December 5, 2025
சச்சரவை தவிர்க்கவே தீபம் ஏற்ற அனுமதி மறுப்பு: TN அரசு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மதுரை HC-ன் உத்தரவை எதிர்த்து SC-ல் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. அதில் 100 ஆண்டுகளாக தீபம் ஏற்றும் இடத்திற்கு பதிலாக வேறு இடத்தில் ஏற்ற கோருவதாகவும், அவ்விடம் தர்காவுக்கு 15 மீ தொலைவில் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மதுரை HC உத்தரவால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டுள்ளதாகவும், தேவையற்ற சச்சரவை தவிர்க்கவே தீபம் ஏற்ற அனுமதி தரவில்லை என மனுவில் கூறப்பட்டுள்ளது.
News December 5, 2025
BREAKING: இன்று அனைத்து பள்ளிகளுக்கும்.. வந்தது உத்தரவு

இன்று அரசுப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. இதில், மாணவர்களின் கல்வித் தரம், பள்ளிகளில் அடிப்படை வசதிகள் உள்ளிட்டவற்றை மேம்படுத்துவது, மாணவர்களுக்கான அரசுத் திட்டங்களை எடுத்துரைப்பது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளன. ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொள்ளும் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம், மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை நடத்தப்படும்.
News December 5, 2025
சிந்தனையை தூண்டும் PHOTOS

நீங்கள் உங்கள் வாழ்க்கையில் நடப்பதை, எப்படி நினைக்கிறீர்கள், உணர்கிறீர்கள் என்ற அடிப்படையில்தான் உங்கள் சிந்தனை வடிவமைக்கப்படுகிறது. உண்மையான வளர்ச்சி என்பது என்னவென்று சில புகைப்படங்கள் நம் சிந்தனையை தூண்டுகின்றன. அவற்றை உங்களுக்காக மேலே பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. அனைவரையும் சிந்திக்க தூண்டும் இந்த போட்டோக்களை SHARE பண்ணுங்க.


