News August 9, 2024
ஆகஸ்ட் 9 வரலாற்றில் இன்று!

➤1173 – பீசா சாயும் கோபுரத்தின் கட்டட பணிகள் தொடங்கப்பட்டன. ➤1655 – இங்கிலாந்தை ஒலிவர் குரொம்வெல் பிரபு 9 மாகாணங்களாகப் பிரித்தார். ➤1892 – இருவழி தந்திக்கான காப்புரிமையை தாமஸ் ஆல்வா எடிசன் பெற்றார். ➤1941 – எழுத்தாளர் க.ப.அறவாணன் பிறந்த நாள். ➤1965 – சிங்கப்பூர் மலேசியக் கூட்டமைப்பில் இருந்து வெளியேற்றப்பட்டு தனி நாடாக்கப்பட்டது. ➤2016 – கவிஞர் பஞ்சு அருணாசலம் மறைந்த நாள்.
Similar News
News December 9, 2025
யாரிடம் பிரிவினை உள்ளது? MP ஆ.ராசா

லோக்சபாவில் ‘வந்தே மாதரம்’ விவாதத்தின் போது, பிரிவினை குறித்து கூறும் PM, அது எங்கே உள்ளது, யாரிடம் உள்ளது? என்பதை விளக்க வேண்டும் என ஆ.ராசா தெரிவித்தார். வந்தே மாதரத்தை தற்போதைய வடிவில் ஏற்றுக்கொள்ள எதிர்க்கட்சிகள் தயாராக உள்ளதாக அவர் குறிப்பிட்டார். வந்தே மாதரத்தை எழுதிய பங்கிம் சந்திர சாட்டர்ஜிக்கு, இப்பாடல் அரசியல் ஆக்கப்படும் என தெரிந்திருக்காது என்றும் அவர் கூறினார்.
News December 9, 2025
‘ஏலியன் எலும்புக்கூடு’ பற்றி தெரியுமா?

சிலி நாட்டின் அட்டகாமா பாலைவனத்தில் 2003-ல், வெறும் அரை அடி கொண்ட எலும்புக்கூடு ஒன்று கிடைத்தது. அதன் தலை மட்டும் பெரிதாக வித்தியாசமாக இருந்ததால், அது ஏலியனின் எலும்புக்கூடு என வதந்தி பரவியது. ஆனால் சுமார் 15 வருட ஆய்வுக்கு பின் தான் தெரிந்தது, அது ஏலியன் அல்ல, ஒரு பெண் குழந்தையின் எலும்புக்கூடு என்று. 7 மரபணு குறைபாடுகளுடன் பிறந்து, குழந்தை இறந்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
News December 9, 2025
மக்களை தொந்தரவு செய்யக்கூடாது: PM மோடி

NDA நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் இண்டிகோ விவகாரம் குறித்து PM மோடி சில அறிவுரைகளை வழங்கியுள்ளார். முக்கியமாக, ‘அரசாங்கத்தால் வகுக்கப்படும் விதிகள், விதிமுறைகள் அமைப்பை மேம்படுத்த இருக்க வேண்டும் தவிர, மக்களுக்கு இன்னல்களை உருவாக்கக் கூடாது’ என்று தெரிவித்துள்ளார். மக்கள் எந்த சிரமத்தையும் சந்திக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டியது அரசின் பொறுப்பு என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.


