News August 6, 2025

ஆகஸ்ட் 6: வரலாற்றில் இன்று

image

*1945 – 2ம் உலகப்போரில் ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகி மீது அமெரிக்கா அணு குண்டுகளை வீசியதில் 70,000 பேர் கொல்லப்பட்டனர். *1996 – செவ்வாயில் இருந்து தோன்றியதாகக் கருதப்படும் ALH 84001 என்ற விண்கல் ஆரம்பகால உயிரினங்கள் பற்றிய தகவலைக் கொண்டிருப்பதாக நாசா அறிவித்தது. *2012- நாசாவின் கியூரியாசிட்டி ரோவர் செவ்வாய் கோளில் தரையிறங்கியது. *2019- முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உயிரிழந்த நாள்.

Similar News

News August 6, 2025

‘குடும்பஸ்தன்’ ஹீரோயினா இது!

image

‘குடும்பஸ்தன்’ படத்தில் ஹீரோயினாக நடித்த சான்வே மேக்னா, தனது லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை அவரது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். ஷாட் ஆன டிரெண்டி உடையில் பல போஸ்களை கொடுத்து லைக்ஸை குவித்து வருகிறார். ‘குடும்பஸ்தன்’ படத்தில் ஹோம்லி லுக்கில் தோன்றி இளைஞர்களின் மனதை கவர்ந்தவர், தற்போது வெஸ்டர்ன் கெட்டப்பில் கலக்குகிறார். தெலுங்கு சினிமாவில் இவர் முதன்முதலாக அறிமுகமானார்.

News August 6, 2025

‘மாபெரும் தமிழ்க் கனவு’ மீண்டும் தொடக்கம்

image

கல்லூரி மாணவர்களிடையே தமிழர் மரபை பரப்பும் ‘மாபெரும் தமிழ்க் கனவு’ பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சிகள் ஓராண்டு இடைவெளிக்கு பின் இன்று மீண்டும் தொடங்குகிறது. கோவை, திருப்பூர், சென்னை, செங்கல்பட்டு, தஞ்சாவூர், திருவாரூர், ஈரோடு உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்றும், நாளையும் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. 50-க்கும் மேற்பட்ட பல்துறை ஆளுமைகள், 200 கல்லூரிகள், 2 லட்சம் மாணவர்கள் இதில் பங்கேற்க உள்ளனர்.

News August 6, 2025

9 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்

image

நீலகிரி, கோவை மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் IMD ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது. அதேபோல் தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் மஞ்சள் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 30-40 கி.மீ., வேகத்தில் வீசக்கூடும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

error: Content is protected !!