News August 4, 2024
ஆகஸ்ட் 4 வரலாற்றில் இன்று!

*1578–போர்த்துகீஸ் போரில் மொரோக்கோ படை வென்றது. *1783–பஞ்சத்தால் ஜப்பானில் 20,000 மக்கள் உயிரிழந்தனர். *1948–இலங்கையில் மலையகத் தமிழரின் குடியுரிமையைப் பறிக்கும் சட்டம் நிறைவேற்றப்பட்டது. *1965–குக் தீவுகள் சுயாட்சி அதிகாரம் பெற்றது. *1972–சிம்லா ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தது. *1987–விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் சுதுமலை உரையை நிகழ்த்தினார் *2008–அறிஞர் அகத்தியலிங்கம் மறைந்த நாள்.
Similar News
News December 15, 2025
கோயில் குளங்களில் காசு வீசுவது மூட நம்பிக்கையா?

முந்தைய காலங்களில் நாணயங்கள் செம்பினால் செய்யப்பட்டன. செம்பு கிருமிநாசினி தன்மை கொண்டது என்பதால் நீரிலுள்ள கெட்ட நுண்ணுயிர்களின் வளர்ச்சியை அது கட்டுப்படுத்தியது. அதன் காரணமாக, கோயில் குளங்களை தூய்மையாக வைத்திருக்க செம்பு நாணயங்களை நீரில் வீசினர். காலப்போக்கில் நாணயங்கள் செம்பிலிருந்து பிற உலோகங்களுக்கு மாறினாலும், இப்பழக்கம் இன்னும் நடைமுறையில் உள்ளது. இந்த அறிய தகவலை அனைவருக்கும் பகிரவும்.
News December 15, 2025
இன்று ஜோர்டான் புறப்படும் PM மோடி

ஜோர்டான், எத்தியோப்பியா, ஓமன் ஆகிய நாடுகளுக்கான 4 நாள் பயணத்தை இன்று PM மோடி தொடங்குகிறார். இந்த பயணத்தில் இருதரப்பு பொருளாதாரம், வர்த்தகம், பாதுகாப்பு, எரிசக்தி, முதலீடு, தொழில்நுட்ப ஒத்துழைப்பு குறித்து ஆலோசிக்க உள்ளார். மோடியின் இந்தப் பயணம் மூலம் கிழக்கு ஆசியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுடன் இந்தியாவின் உறவு மேலும் வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News December 15, 2025
சற்றுமுன்: அதிமுகவில் மீண்டும் இணைந்தார்

அதிமுகவில் இருந்து பிரிந்து சென்று அமமுகவில் ஐக்கியமாக நிர்வாகிகள் பலர், அண்மைக் காலமாக மீண்டும் அதிமுகவில் இணைந்து வருகின்றனர். அந்த வகையில், அமமுக அரியம்பாளையம் பேரூராட்சிச் செயலாளர் துரைசாமி மீண்டும் தாய் கழகத்திற்கு திரும்பியுள்ளார். அவருடன் அமமுக ஒன்றியச் செயலாளர் KC சண்முகம், வார்டு செயலாளர் கோபால் அசோகன் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்துள்ளனர்.


