News August 3, 2024
ஆகஸ்ட் 3: வரலாற்றில் இன்று!

*1858 – இலங்கை ரயில் சேவையை ஆளுநர் சேர் என்றி ஜார்ஜ் வார்டு ஆரம்பித்து வைத்தார். *1975 – மொரோக்கோவில் தனியார் விமானம் ஒன்று மலையில் மோதியதில் 188 பேர் உயிரிழந்தனர். *1976 – காந்திகிராம் கிராமியப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது.*1990 – கிழக்கு இலங்கையில் காத்தான்குடியில் பள்ளிவாசலில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் பெண்கள், குழந்தைகள் உட்பட 103 பேர் கொல்லப்பட்டனர்.
Similar News
News November 15, 2025
BREAKING: CSK-வில் 10 வீரர்கள் விடுவிப்பு.. கையில் ₹43.9 கோடி

ஐபிஎல் 2026 சீசனையொட்டி, CSK அணி 10 வீரர்களை விடுவித்துள்ளது. ராகுல் திரிபாதி, வன்ஷ் பேடி, ஆண்ட்ரே சித்தார்த், தீபக் ஹூடா, விஜய் சங்கர், ஷேக் ரஷீத், கமலேஷ் நாகர்கோட்டி, மதீஷா பதிரானா, ரச்சின், டேவன் கான்வே ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஏற்கெனவே ராஜஸ்தானுக்கு ஜடேஜா, சாம் கரன் டிரேட் செய்யப்பட்டு இருந்தனர். இதையடுத்து, CSK அணியால் ஏலத்தில் ₹43.9 கோடி செலவு செய்ய முடியும்.
News November 15, 2025
FLASH: தங்கம் விலை தடாலடியாக மாறியது

தங்கம் விலை ஒவ்வொரு நாளும் ஏற்ற இறக்கமாக கண்ணாமூச்சி ஆடி வருகிறது. இந்த வார வர்த்தக முடிவில், 1 சவரன் ₹2,000 அதிகரித்துள்ளது. கடந்த வாரம் 22 கேரட் தங்கம் 1 சவரன் ₹90,400-க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது, ₹92,400-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நாளை விடுமுறை என்பதால் விலையில் எந்த மாற்றமும் இருக்காது. அடுத்த வாரத்திலும் விலை ஏற்ற இறக்கமாக காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News November 15, 2025
மும்பை அணியில் இருந்து சச்சின் விலகலா?

மும்பை அணியில் 5 ஆண்டுகளாக பயணித்த சச்சினின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் டிரேட் மூலம் லக்னோ அணிக்கு சென்றுள்ளார். இந்நிலையில் மும்பை அணியின் ICON-ஆக இருக்கும் சச்சினும் அணியில் இருந்து விலகுவாரா என்ற கேள்வி இணையத்தில் வைரலானது. ஆனால், MI அப்டேட் செய்துள்ளது புதிய Support Staff லிஸ்டில் சச்சின் பெயரே முதலில் உள்ளது. சச்சினையும் மும்பை அணியையும் பிரிக்க முடியமா என்ன?


