News August 2, 2024
ஆகஸ்ட் 2: வரலாற்றில் இன்று!

*1790 – அமெரிக்காவில் முதல் முறையாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. *1858 – இந்தியாவில் கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சி முடிவுக்கு வந்து பிரித்தானிய ஆட்சி நடைமுறைக்கு வந்தது. *1922 – சீனாவில் சூறாவளி தாக்கியதில் 50,000 பேர் உயிரிழந்தனர். *1939 – அணு ஆயுதத்தை தயாரிக்க மன்காட்டன் திட்டத்தை முன்னெடுக்குமாறு ஆல்பர்ட் ஐன்ஸ்டைன், அமெரிக்க அதிபர் பிராங்க்ளின் ரூசவெல்ட்டிற்குக் கடிதம் எழுதினார்.
Similar News
News August 13, 2025
அதிமுக கூட்டணியில் டிடிவி? இபிஎஸ் தடாலடி பதில்

மைத்ரேயன் அதிமுகவில் இருந்து வெளியேறியது உள்கட்சி விவகாரம்; அதை வெளியே சொல்ல முடியாது என்று இபிஎஸ் பதிலளித்துள்ளார். மேலும், ஒரே மேடையில் TTV, EPS இணைவார்கள் என நயினார் கூறியது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, என்னிடம் ஏன் கேக்குறீங்க.. அதை அவரிடமே (நயினார்) கேளுங்க எனக் கூறிய அவர், யாரை சந்திப்பது என்று முடிவெடுக்க வேண்டியது நாங்கள்தான் என்று உறுதிபடத் தெரிவித்தார்.
News August 13, 2025
தீவிரவாத தாக்குதலில் 2 வீரர்கள் வீரமரணம்

ஜம்மு & காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில், பாகிஸ்தான் தீவிரவாதிகளின் ஊடுருவலை இந்திய ராணுவம் வெற்றிகரமாக முறியடித்துள்ளது. இருப்பினும், இந்த சண்டையில் 2 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, ‘ஆபரேஷன் அகல்’-ன் ஒரு பகுதியாக உரி பகுதியை சுற்றி வளைத்து ராணுவம் தேடுதல் வேட்டையை துரிதப்படுத்தியுள்ளது.
News August 13, 2025
இந்தியாவுக்கு ₹15 லட்சம் கோடி இழப்பை தடுத்த ரஷ்யா

ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் பெறுவதை சுட்டிக்காட்டி இந்தியாவுக்கு 50% வரி விதித்துள்ளது USA. இந்நிலையில், ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கிய வகையில் இந்தியாவுக்கு 2022 மே – 2025 மே வரை ₹1.49 லட்சம் கோடி சேமிப்பு ஆகியுள்ளதாம். ஒருவேளை ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கவில்லையென்றால், ₹15.29 லட்சம் கோடி இந்தியாவுக்கு இழப்பு ஏற்பட்டிருக்கும் என தமிழ்நாடு அனைத்து தொழில்முனைவோர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.