News August 18, 2024
ஆகஸ்ட் 18: வரலாற்றில் இன்று

▶1227 – மங்கோலியப் பேரரசர் செங்கிஸ் கான் இறந்த நாள். ▶1868 – பிரெஞ்சு வானியலாளர் பியேர் ஜான்சென் சூரிய கிரகணத்தை ஆராயும்போது ஹீலியம் என்ற தனிமத்தைக் கண்டுபிடித்தார். ▶1920 – பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கும் சட்டமூலம் அமெரிக்காவில் கொண்டு வரப்பட்டது. ▶1928 – சென்னை மியூசிக் அகாடமி அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைக்கப்பட்டது. ▶1945 – விடுதலைப் போராட்ட வீரர் சுபாஷ் சந்திர போஸ் உயிரிழந்த நாள்.
Similar News
News November 28, 2025
திமுகவில் இணைய முயலவில்லை: மல்லை சத்யா

திமுகவில் இணையவேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும், அதற்கான முயற்சியை எடுக்கவில்லை என மல்லை சத்யா கூறியுள்ளார். இதற்கான காரணத்தை கூறிய அவர், திமுக கூட்டணியில் மதிமுக தொடர்வதால் அவர்களுக்கு எந்த குளறுபடியும் வந்துவிடக்கூடாது என கருதியதாக தெரிவித்துள்ளார். அதேநேரம், திராவிட கொள்கைக்கு எதிரான கட்சிகளுடனும், பாஜக அங்கம் வகிக்கும் கூட்டணியிலும், சேரும் திட்டமில்லை எனவும் உறுதியாக கூறியுள்ளார்.
News November 28, 2025
2 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று அரைநாள் லீவு!

‘டிட்வா’ புயல் எதிரொலியால் திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று(நவ.28) அரைநாள்(மதியம்) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நள்ளிரவு முதலே பரவலாக கனமழை பெய்து வரும் நிலையில், இன்று அதி கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
News November 28, 2025
₹40,000 சம்பளத்தில் வேலை.. APPLY NOW!

ரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை நிறுவனத்தில் 400 Assistant Manager பணியிடங்கள் காலியாக உள்ளன. கல்வி தகுதி: B.E/B.Tech, B.Pharm. வயது வரம்பு: 40. தேர்வு முறை: Written Test, Interview, Document Verification. சம்பளம்: ₹42,478. விண்ணப்பிக்க கடைசி தேதி: டிச.25. விருப்பமுள்ளவர்கள் <


