News August 6, 2025
ஆடி ஸ்பெஷல்: திருவக்கரை வக்ரகாளியம்மன் கோயில்!

விழுப்புரம், திருவக்கரை வக்ரகாளியம்மன் கோயிலில் சக்தியின் திருவடிவாக அம்மன் அருள்புரிகிறார். 2000-ம் ஆண்டுகள் பழமையான தேவாரப்பாடல் பெற்ற, ராஜராஜ சோழன் கல்வெட்டு இக்கோயிலில் உள்ளது. இங்கு ஒவ்வொரு பௌர்ணமி தினமும், நள்ளிரவு 12:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, ஜோதி தரிசனக் கொப்பர வழிபாடு செய்யப்படுகிறது. அம்மன் வக்கிர நிலையில் இருப்பதால் சனி, ராகு, கேது தோஷங்கள் நீங்கும் இடமாக நம்பப்படுகிறது.
Similar News
News April 4, 2026
எண்ணெய் கப்பல் சீனாவிற்கு சென்றதா… மத்திய அரசு பதில்!

குஜராத் நோக்கி வந்த ஈரானிய எண்ணெய் கப்பல், சீனாவிற்கு திருப்பிவிடப்பட்டதாக வெளியான தகவல் உண்மையில்லை என மத்திய அரசு விளக்கமளித்துள்ளது. முன்கூட்டியே பணம் செலுத்தாததால் 6 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெயுடன் வந்த ‘பிங் ஷுன்’ கப்பல் சீனாவின் டாங்யிங் துறைமுகத்தை நோக்கி செல்வதாக கூறப்பட்டது. இதனை மறுத்துள்ள அரசு, ஈரானிய எண்ணெய் இறக்குமதிக்கு பணம் செலுத்துவதில் தடைகள் ஏதுமில்லை என்று தெரிவித்துள்ளது.
News April 4, 2026
திருமணமான இரண்டே மாதத்தில் பெண்ணுக்கு சோகம்

வரதட்சணை கொடுமையால் திருமணமான இரண்டே மாதத்தில் இளம்பெண் உயிரை மாய்த்துக் கொண்ட துயரம் ஹைதராபாத்தில் நடந்துள்ளது. பிஹாரை சேர்ந்த இஷிதா(26), SM-ல் பழகி நீரஜை திருமணம் செய்து கொண்டார். பிறகு வேலைக்காக தம்பதியர் ஹைதராபாத்துக்கு சென்றுள்ளனர். அப்போது சுயரூபத்தை காட்டிய நீரஜ், வரதட்சணை கேட்டு இஷிதாவை கொடுமைப்படுத்தியுள்ளார். இதனால், வீட்டில் தூக்கிட்டு இஷிதா தற்கொலை செய்து கொண்டது பெரும் சோகம். SO SAD
News April 4, 2026
திமுக நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்

தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத திமுக நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகி வருகின்றனர். அந்த வகையில், கோவை வடக்கு மாவட்ட தலைமை செயற்குழு உறுப்பினரும், திமுக மூத்த நிர்வாகியுமான TR சண்முகசுந்தரம், குடும்ப சூழல் & பணி சுமை காரணமாக கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இன்று காலை EX அமைச்சரும், திமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளருமான Dr.விஜய் திமுகவில் இருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.


