News April 30, 2024

வாட்டர் பியூரிஃபையர் பயன்படுத்துவோர் கவனத்திற்கு

image

தமிழகத்தில் கோடை வெயில் நாளுக்கு நாள் கொளுத்தி வரும் நிலையில், தமிழ்நாடு வாட்டர் இண்டஸ்ட்ரீஸ் அசோசியேஷன் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், RO வாட்டர் பியூரிஃபையரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பயன்படுத்த வேண்டாம் என்றும், தண்ணீரின் வெப்பநிலை அதிகமாக இருப்பதால் மெயின் பில்டர் பழுதாகிவிடும் என்பதால், குறிப்பிட்ட நேரத்தில் பயன்படுத்த வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Similar News

News March 19, 2026

சென்னை: டிகிரி முடித்தால் ரூ.50,000! இன்றே கடைசி

image

சென்னை மக்களே.., IDBI வங்கியில் காலியாக உள்ள 1300 காலிப் பணியிடங்களுக்கான ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.50,000 முதல் சம்பாதிக்கலாம். விண்ணப்பிக்க இன்றே (மார்ச் 19) கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் உடனே இங்கே <>கிளிக் <<>> செய்து விண்ணப்பியுங்கள். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க. யாருக்காவது உதவும்

News March 19, 2026

சற்றுமுன்: விலை சரசரவென குறைந்தது

image

வணிக சிலிண்டர் தட்டுப்பாட்டால், பல ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ளன. இதனால், காய்கறிகள் தேக்கம் அடைந்ததால், விலை குறைந்துள்ளது. அந்த வகையில், சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி, வெங்காயம், உருளைக்கிழங்கு, கேரட், முள்ளங்கி, பாகற்காய், புடலங்காய், சுரைக்காய், முருங்கைக்காய் உள்ளிட்ட பல்வேறு காய்கறிகளின் விலை கிலோவுக்கு ₹5 முதல் ₹10 வரை குறைந்துள்ளது. அதேபோல், TN முழுவதும் பல இடங்களில் விலை குறைந்துள்ளது.

News March 19, 2026

தவெகவா? தனிக் கட்சியா? குழப்பத்தில் ராமதாஸ்!

image

பாமக சின்னம் குறித்த வழக்கு மே 10-ம் தேதிக்கு பிறகே விசாரணை என்ற கோர்ட் உத்தரவு ராமதாஸ் தரப்புக்கு பின்னடைவை கொடுத்துள்ளது. கடந்த வாரமே கூட்டணிக்கான வாகனம் அருகே வந்துவிட்டதாக ராமதாஸ் பேசியிருந்தார். ஆனால், தற்போது வரை முடிவை அறிவிக்காமல் குழப்பத்தில் உள்ளார். தைலாபுரத்தில் நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் தவெகவுடன் செல்லலாம் என சிலரும், தனியாக போட்டியிடலாம் என சிலரும் சொன்னதாக தகவல் கசிந்துள்ளது.

error: Content is protected !!