News February 8, 2025
பள்ளிகளில் மாணவர்கள் கவனம்
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_12025/1735778792668_1241-normal-WIFI.webp)
கடந்த சில நாள்களாக பள்ளிகள் குறித்தும் கல்லூரிகள் குறித்தும் வரும் செய்திகள் நல்லதாக இல்லை. ஆசிரியர்களே சிறுமிகளை, மாணவிகளை பாலியல் தொல்லைக்கு ஆளாக்குவது வேதனை தரும் விஷயமாக உள்ளது. இதனை தடுக்க, அனைத்து பள்ளிகளிலும் சிசிடிவி கேமரா பொருத்த அதிமுக வலியுறுத்தியுள்ளது. ஆனாலும், மாற்றம் ஆசிரியர்களிடம் இருந்துதானே வர வேண்டும்? உங்கள் கருத்தை சொல்லுங்க.
Similar News
News February 9, 2025
தினம் ஒரு திருக்குறள்
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_12025/1737302174820_1031-normal-WIFI.webp)
▶குறள் பால்: அறத்துப்பால் ▶அதிகாரம்: வெஃகாமை ▶குறள் எண்: 173 ▶குறள்: சிற்றின்பம் வெஃகி அறனல்ல செய்யாரே மற்றின்பம் வேண்டு பவர். ▶ பொருள்: அறநெறியால் பெறும் இன்பத்தை விரும்புகின்றவர், நிலையில்லாத சிறிய இன்பத்தை விரும்பி அறம் அல்லாதவற்றைச் செய்யார்.
News February 9, 2025
காலையில் படிப்பது நல்லதா?
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739033641251_347-normal-WIFI.webp)
பொதுவாக தேர்வு காலங்களில் பிள்ளைகளை படி படி எனப் பெற்றோர்கள் தொல்லை செய்கின்றனர். பகலில் பள்ளி சென்று சோர்வுடன் வரும் பிள்ளைகள், இரவில் படிக்க மிகவும் கஷ்டப்படுவார்கள். அப்படி முயன்றாலும், தூக்கக் கலக்கத்தில் சரியாக ஏறாது. மாறாக காலை 5 மணிக்கு எழுந்து படித்தால், மூளை மிகச் சுறுசுறுப்பாக இருக்கும். பாடங்கள் மனத்தில் நன்கு பதிவதுடன், நினைவாற்றலும் அபாரமாக வேலை செய்யும். பெற்றோர்கள் இதை செய்யலாமே.
News February 9, 2025
நல்லாட்சிக்கான நற்சான்றிதழ் தேர்தல் வெற்றி: CM பெருமிதம்
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_122024/1734521194398_1204-normal-WIFI.webp)
மகத்தான திட்டங்களை தரும் திமுக அரசுக்கு, ஈரோடு (கி) மக்கள் மகத்தான வெற்றியை தந்துள்ளதாக CM ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். தேர்தலுக்கு முன்னதாகவே வெற்றி யாருக்கு என்பதை உணர்ந்த எதிர்க்கட்சிகள், களத்துக்கே வராமல் புறமுதுகிட்டு ஓடியதாக சாடிய அவர், அதிமுக மக்கள் மனதில் இருந்து மறைந்து கொண்டிருப்பதாகவும் விமர்சித்தார். மேலும், வாக்களித்த மக்களுக்கு எப்போதும் உண்மையாக இருப்போம் என்றும் கூறினார்.