News April 16, 2025
திருப்பதி செல்லும் பக்தர்களின் கவனத்திற்கு…

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கோடை விடுமுறையால் கூட்டம் அதிகரித்து கொண்டே போகிறது. இதனால் VIP பிரேக் தரிசன டிக்கெட் (₹500 டிக்கெட்) வழங்கும் நடைமுறையை தேவஸ்தானம் இன்று முதல் பாதியாக நிறுத்தி வைத்துள்ளது. VIP பிரேக் தரிசனத்திற்கான நேரம் குறைக்கப்பட்டு, அதில் சாதாரண பக்தர்கள் தரிசனம் செய்ய வழி செய்யப்பட்டுள்ளது. இந்த நடைமுறை ஜூன் மாதம் 30 ஆம் தேதி வரை அமலில் இருக்கும்.
Similar News
News December 15, 2025
இரவு 10 மணிக்கு மேல் போனில் இத பார்த்தால் ₹1,000 அபராதம்

ரயிலில் இரவு நேரத்தில் பலர் போனில் சத்தமாக ரீல்ஸ் அல்லது யூடியூப் வீடியோ பார்த்தபடி பயணிப்பார்கள். அவர்களுக்கு அது பொழுதுபோக்கு என்றாலும், மற்றவர்களுக்கு எரிச்சல்தானே! ரயில்வே சட்டப்பிரிவு 145-ன் படி, இரவு 10 மணிக்கு மேல் யாரும் போனில் சத்தமாக வீடியோ பார்க்கவோ, சத்தமாக பேசவோ கூடாது என்ற சட்டமே உள்ளது. இதனை மீறுபவர்களுக்கு ₹500- ₹1,000 வரை அபராதம் விதிக்கப்படும். இத்தகவலை அனைவருக்கும் பகிரவும்.
News December 15, 2025
இதுதான் தீபத்தூண்: போட்டோ சமர்பித்த அறநிலையத்துறை

திருப்பரங்குன்றம் விவகாரத்தில், மலைகளில் உள்ள தூண்களின் புகைப்படங்களை அறநிலையத்துறை ஐகோர்ட்டில் சமர்ப்பித்துள்ளது. மேலும், மலை மீது உச்சிப்பிள்ளையார் கோயில் அருகே உள்ளதுதான் தீபத்தூண் என மக்கள் நம்புகிறார்கள்; அதில், நாயக்கர்களின் பெயர்களும், ஹனுமான் உருவமும் பொறிக்கப்பட்டுள்ளது. ஆனால், தனி நீதிபதி தீபம் ஏற்ற உத்தரவிட்டுள்ள தூணில் கடவுளின் உருவங்கள் எதுவும் இல்லை என்றும் விளக்கமளித்துள்ளது.
News December 15, 2025
மெஸ்ஸிக்கு ₹200 கோடி; இந்திய கால்பந்துக்கு எவ்வளவு?

மெஸ்ஸியின் இந்திய பயணத்துக்கு ₹200 கோடி செலவானதாம். இவரின் 3 நாள் நிகழ்ச்சிக்கு இத்தனை கோடி செலவு செய்யும் நிறுவனங்களும், அரசும், இந்தியாவில் கால்பந்தை மேம்படுத்த இவ்வளவு செலவிட்டிருந்தால், இங்கேயும் மெஸ்ஸிகள் உருவாகி இருப்பார்கள். உலக தரவரிசையில் 142-வது இடத்தில் இருக்க மாட்டோம். கால்பந்து வளராததற்கு கிரிக்கெட்டை மட்டுமே குறை கூறாமல், வேறு வழியில் சிந்திக்க வேண்டியது இன்றைய தேவை. உங்க கருத்து?


