News February 24, 2025
திருப்பதி ஏழுமலையான் பக்தர்களின் கவனத்திற்கு..

கோடை விடுமுறையில் திருப்பதியில் கூட்டம் அலைமோதும். இதனை முன்னிட்டு, திருப்பதி கோயிலில் மே மாதத்திற்கான தரிசன டிக்கெட் முன்பதிவுகள் தொடங்கியுள்ளன. அதன்படி 300 ரூபாய்க்கான முன்பதிவு, இன்று காலை 10 மணிக்கு தொடங்கி இருக்கிறது. அதே நேரத்தில், மதியம் 3 மணிக்கு திருமலையில் தங்கும் அறைகளுக்கான முன்பதிவும் தொடங்க இருக்கிறது. டிக்கெட் பெற <
Similar News
News February 24, 2025
IND vs PAK பாகிஸ்தானில் நடந்திருந்தால்?

PAK அணியை அவர்கள் நாட்டில் வீழ்த்தி இருந்தால், இன்னும் வெற்றி சிறப்பாக அமைந்திருக்குமா என ஸ்ரேயஸ் ஐயரிடம் கேட்கப்பட்டது. அதற்கு, தான் PAK நாட்டு மைதானங்களில் விளையாடாததால், அது பற்றி தெரியாது என கிண்டலாக பதில் கூறினார். PAKக்கு எதிரான எந்த வெற்றியும் சிறப்பு வாய்ந்தது தான் எனவும், ஏனென்றால் அது மிகுந்த போட்டி மற்றும் வெளி அழுத்தங்கள் நிறைந்தது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
News February 24, 2025
9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

வரும் 28ஆம் தேதி தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, குமரி ஆகிய 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக MET தெரிவித்துள்ளது. அதேநேரம், தமிழகத்தின் உள் மாவட்டங்களில் வரும் 27ஆம் தேதி வரை 99 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பநிலை இருக்கக் கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
News February 24, 2025
வெற்றி மாறனுக்காக ₹25 லட்சம் கடன் வாங்கிய மிஷ்கின்

மிஷ்கின் குறித்த ஒரு சம்பவத்தை சமுத்திரகனி பகிர்ந்துள்ளார். ‘விசாரணை’ படத்தை ரிலீசுக்கு முன்னர் பார்த்த போது, அப்படம் மிஷ்கினுக்கு பிடித்து விட்டதாம். அதையடுத்து இயக்குநர்கள் மணி ரத்னம், ஷங்கர் உள்ளிட்ட பலரை அழைத்து, ஒரு ஹாலில் அந்த படத்தை போட்டுக்காட்டி, இந்த படம் பற்றி அதிகம் பேச வேண்டும் என கேட்டுக் கொண்டாராம். இந்த நிகழ்வை நடத்துவதற்கு அவரிடம் பணம் இல்லாததால், ₹25 லட்சம் கடன் வாங்கினாராம்.