News April 17, 2025
கோடை விடுமுறை சுற்றுலா செல்வோர் கவனத்திற்கு

கோடை விடுமுறை தொடங்கிவிட்டதால், பலரும் சுற்றுலா செல்ல திட்டமிட்டுள்ளனர். ஆனால், சுற்றுலாவின்போது எவ்வற்றைக் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பது பலருக்கு தெரியவில்லை. குறிப்பாக, செல்லும் இடங்களின் பாரம்பரியம், உள்ளூர் பழக்க வழக்கங்களை தெரிந்து கொள்ள வேண்டும். காடு, மலை சார்ந்த பகுதிகள் எனில், பறவைகள், பிற உயிரினங்களின் வாழ்வியலில் குறிக்கிடக் கூடாது. குறிப்பாக, செல்ஃபி எடுத்தல் போன்றவை தவிர்க்கவும்.
Similar News
News December 2, 2025
BIG BREAKING: சென்னையில் பழுதாகி நின்ற மெட்ரோ!

சென்னை விமான நிலையத்தில் இருந்து விம்கோ நகர் வரை செல்லும் மெட்ரோ ரயில் காலை 6 மணி அளவில் சுமார் 40 நிமிடம் பழுதாகி திடீரெனெ நடுவழியில் நின்றது. சென்னை சென்ட்ரல் மற்றும் உயர்நீதிமன்ற மெட்ரோ ரயில் நிலையத்திற்கு நடுவே மெட்ரோ ரயில் பழுதாகி நின்றதால் பயணிகளிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
News December 2, 2025
தங்கம் விலை குறைந்தது!

சர்வதேச சந்தையில் தங்கம் விலை கடந்த சில நாள்களாக சரிவை சந்தித்து வருகிறது. 1 அவுன்ஸ்(28g) தங்கம் $6.62 குறைந்து $4,212-க்கு விற்பனையாகிறது. அதேநேரம் வெள்ளி 1 அவுன்ஸ் $0.07 உயர்ந்து $56.79 ஆக உள்ளது. இந்திய சந்தையில் நேற்று, தங்கம் சவரனுக்கு ₹96,560-க்கு விற்பனையானது. இந்நிலையில், சர்வதேச சந்தையில் விலை குறைவால் இன்று நம்மூரிலும் தங்கத்தின் விலை குறைய வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
News December 2, 2025
தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்யும் காங்.,

2026 சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணியை வலுப்படுத்தி வரும் திமுக, மறுபுறம் தொகுதிப் பங்கீடு குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறது. இந்நிலையில், தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த அமைக்கப்பட்ட காங்., கட்சியின் ஒருங்கிணைப்புக் குழு, நாளை மு.க.ஸ்டாலினை நேரில் சந்திக்க உள்ளது. எவ்வளவு தொகுதிகள், என்னென்ன தொகுதிகள் என்பதை இறுதி செய்ய, காங்., தீவிரமாக இறங்கியுள்ளது.


